என் மலர்
ராணிப்பேட்டை
- முதல் 20 ஓவர் போட்டி ஆகஸ்டு 18-ந்தேதி நடக்கிறது.
- ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை போட்டிக்கு முழு உடல் தகுதியுடன் இருக்க கிரிக்கெட் வாரியம் விரும்புகிறது.
இந்திய கிரிக்கெட் அணி, அடுத்த மாதம் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணியுடன் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் 20 ஓவர் போட்டி ஆகஸ்டு 18-ந்தேதி நடக்கிறது.
இந்நிலையில் அயர்லாந்துக்கு எதிரான தொடரில் ஹர்த்திக் பாண்ட்யா, சுப்மன் கில் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதிக பனிச்சுமை காரணமாக ஹர்த்திக் பாண்ட்யாவுக்கு ஓய்வு அளிக்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. மேலும் அவர் ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை போட்டிக்கு முழு உடல் தகுதியுடன் இருக்க கிரிக்கெட் வாரியம் விரும்புகிறது.
அதே போல் சுப்மன் கில், கடந்த சில மாதங்களாக தொடர்ந்து விளையாடி வருவதால் அவருக்கும் ஓய்வு அளிக்கப்படலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் கூறும் போது, "வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளுக்கு பிறகு ஹர்த்திக் பாண்ட்யா எப்படி உணர்கிறார் என்பதை பொறுத்து அணி தேர்வு அமையும். உலக கோப்பையில் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு துணை கேப்டனாக ஹர்த்திக் இருப்பார் என்பதை மறந்து விடக்கூடாது" என்று தெரிவித்தன.
- நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே தக்காளி திருடு போகும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.
- ஆற்காடு பஞ்சாங்கத்தின் படி அனைத்தும் நடந்து வருகிறது.
ஆற்காடு:
தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் தக்காளி விலை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து உயர்ந்து கொண்டே உள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே தக்காளி திருடு போகும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.
ஜூலை மாதம் தொடக்கத்தில் உயரத் தொடங்கிய தக்காளி விலை தற்போது உச்சம் தொட்டுள்ளது. இதனால், சமையலில் தக்காளி பயன் படுத்துவது குறைந்துள்ளது.
இந்நிலையில் தக்காளி விலை உயரும் என்பதை ஆற்காடு பஞ்சாங்கம் முன்கூட்டியே கணித்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு சீத்தா ராமய்யர் பஞ்சாங்க குறிப்பில் ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் தக்காளி விலை உயரும் என்று கணித்து கூறப்பட்டுள்ளது.
2023-2024-ம் ஆண்டுக்கான பஞ்சாங்கத்தில் சோபகிருது தமிழ் ஆண்டின் 34, 35 பக்கங்களில் ஜூலை, ஆகஸ்டு மாதத்திற்க்காண கணிப்பில் இந்த தகவல் உள்ளது.
அறிவியலை மீறி வாழ்வியல் சாஸ்திரமான பஞ்சாங்கத்தில் மழை, புயல், வானிலை, விளைச்சல் குறித்த தகவல்கள் துல்லியமாக கணிக்கப்பட்டிருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து ஆற்காடு ஜோதிடர் சுந்தர்ராஜன் கூறுகையில்:-
ஆற்காடு பஞ்சாங்கத்தில் கூறியபடி தற்போது தக்காளி விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மேலும் இந்த ஆண்டு பஞ்சாங்கத்தில் டெல்லி ஒரிசா மும்பை உள்ளிட்ட மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என கூறப்பட்டுள்ளது.
அதன்படி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நாட்டில் மணல் பிரசனை தீரும். கட்டிட உபகரணங்கள் விலை குறையும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆற்காடு பஞ்சாங்கத்தின் படி அனைத்தும் நடந்து வருகிறது என்றார்.
- நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்
- பணி விரைந்து முடிக்க வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்
நெமிலி:
பனப்பாக்கம் அடுத்த தென்மாம்பாக்கம் கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
அப்பகுதியில் நீண்ட காலமாக மயான பாதை இல்லாமல் இறந்தவர்களின் உடலைவயல்வெளி வழியாக சுமந்து சென்று அடக்கம் செய்து வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் மயான பாதை அமைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.
அதன்பேரில் நேற்று அரக்கோணம் சப்-கலெக்டர் பாத்திமா மயான பாதை அமைப்பதற்கான இடத்தை நேரில் ஆய்வு செய்தார்.
மேலும் இப்பணியை விரைந்து முடிக்க வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
நெமிலி தாசில்தார் பாலசந்தர், மண்டல துணை தாசில்தார் சத்யா, வருவாய் ஆய்வாளர் தனலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் சுவேதா ஆகியோர் உடனிருந்தனர்.
- ரூ. 2 கோடியே 8 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
- பணிகளை தரமாக மேற்கொள்வதோடு விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்
ராணிப்பேட்டை:
வாலாஜாவில் நகராட்சி சார்பில் கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பஸ் நிலையம் மற்றும் அங்குள்ள கடைகளை புனரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக ரூ. 2 கோடியே 8 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக பஸ் நிலையத்தில் பழைய கட்டிடங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் பணிகளை தரமாக மேற்கொள்வதோடு விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது வாலாஜா நகரசபை தலைவர் ஹரிணி தில்லை, துணை தலைவர் கமலராகவன், நகர தி.மு.க செயலாளர் தில்லை உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- சொட்டு நீர் பாசனம் மூலம் மரக்கன்றுகள் நடவு செய்யப்படவுள்ளதை பார்வையிட்டார்
- ராஜாகுளம் தூர்வாருதல் மற்றும் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது
நெமிலி:
காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள கூத்தம்பாக்கம் ஊராட்சியில் நேற்று ஊரக வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதிஷ் நேரில் ஆய்வுமேற்கொண்டார்.
அப்போது கூத்தம்பாக்கம் ஊராட்சி, வீரராகவபுரம் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் 17 ஏக்கர் தரிசு நிலத்தில் தோட்டக்கலைத்துறை மூலம் சொட்டு நீர் பாசனம் மூலம் மரக்கன்றுகள் நடவு செய்யப்படவுள்ளதை பார்வையிட்டார்.
தொடர்ந்து அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் 2021-2022 ஆம் நிதியாண்டில் ரூ.11.50 இலட்சம் மதிப்பீட்டில் ராஜாகுளம் தூர்வாருதல் மற்றும் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு செய்தார்.
ஊரக வளர்ச்சி மற்றும் வேளாண்மை துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- வேலூர் சி.எஸ்.ஐ பேராயர் தலைமை தாங்கினார்
- 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை, முத்துக்கடையில் சி.எஸ்.ஐ.வேலூர் பேராயம் சார்பில், மணிப்பூரில் பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பை வலியுறுத்தி அமைதி போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு வேலூர் சி.எஸ்.ஐ பேராயர் ஹென்றி ஷர்மா நித்தியானந்தம் தலைமை தாங்கினார்.
இதில் 5 வட்டாரத்தை சேர்ந்த பாதிரியார்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், வக்கீல்கள் என 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- அனுமதி இன்றி விளம்பரம் எழுதி உள்ளதாக புகார்
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை காரை கூட்ரோடு பகுதியில் சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லம் உள்ளது.
இந்த இல்லத்தின் சுற்றுச்சுவரில் அ.தி.மு.க வினர் மதுரை மாநாட்டிற்கான சுவர் விளம்பரங்கள் எழுதியுள்ளனர்.
இது தொடர்பாக சிறுவர் இல்லத்தின் கண்காணிப்பாளர் கண்ணன் ராதா, குழந்தைகள் இல்லத்தின் சுற்றுச்சுவரில் அனுமதி இன்றி விளம்பரம் எழுதி உள்ளதாக ராணிப்பேட்டை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
புகாரின் பேரில் ராணிப்பேட்டை போலீசார் ராணிப்பேட்டை அ.தி.மு.க. நகர செயலாளர் கே.பி.சந்தோஷம், பழனி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காசோலை வழங்குதல் மற்றும் மரங்கள் நடும் நிகழ்ச்சி நடந்தது
- 100 சதவீதம் தேர்ச்சி கொடுத்த ஆசிரியர்களுக்கு பாராட்டு
அரக்கோணம்:
மாணவர்கள் கல்வி மற்றும் ஆய்வறிவு அறக்கட்டளை (செல்ப்) சார்பில் அரக்கோணம் அரசு ஆதிதிராவிடர் பெண்கள் மேநிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு வெற்றி நம் கைகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி, பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு கேடயம் மற்றும் காசோலை வழங்குதல் மற்றும் மரங்கள் நடும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு செல்ப் அறக்கட்டளை நிறுவனர் ச.வேலாயுதம் தலைமை தாங்கினார். செல்ப் செயலாளர் கோவி.பார்த்திபன் வரவேற்றார். பொருளாளர் ச.கருணாகரன், ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மகாலட்சுமி, உதவி தலைமை ஆசிரியர் முருகன், சாரண சாரணியர் திட்ட அலுவலர் ரஜினிப்பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் க.கௌதம் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.
இதைத்தொடர்ந்து கார்பரேட் பயிற்சியாளர் லயன் அமுதா மதியழகன் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக ரயில் பயணிகள் சங்கத்தலைவர் நைனாமாசிலாமணி, அன்னை தெரசா கிராம வளர்ச்சி நிறுவன தலைவர் தேவாசீர்வாதம், ஆலோசகர் துரை பாண்டியன், அறம் கல்வி சங்க தலைவர் டாக்டர் கலைநேசன், குளோ ஜேம்ஸ், கிறிஸ்து அறக்கட்டளை அருள்தாஸ் மற்றும் ச.சி.சந்தர், அம்பேத்ஆனந்தன் ஆகியோர் கலந்துகொண்டு அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு கேடயம் மற்றும் காசோலை வழங்கியும், 100 சதவீதம் தேர்ச்சி கொடுத்த ஆசிரியர்களை பாராட்டியும் பேசினார். இறுதியாக நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் தோத்திராவதி நன்றி கூறினார்.
- பென்னகர் மேட்டுகாலனி பகுதியில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது.
- இரண்டு மாதத்திற்கு முன்புதான் இந்த பகுதிநேர ரேஷன் கடை திறக்கப்பட்டது.
ராணிப்பேட்டை :
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த பென்னகர் மேட்டுகாலனி பகுதியில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இரண்டு மாதத்திற்கு முன்புதான் இந்த பகுதிநேர ரேஷன் கடை திறக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை ரேஷன் கடையில் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட பருப்பு மக்கி கட்டியாக இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் எங்களுக்கு இந்த பருப்பு வேண்டாம், அடுத்த மாதம் சேர்த்து வழங்குங்கள் என கேட்டனர்.
இதனால் ரேஷன் கடை விற்பனையாளருக்கும், பொது மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ரேஷன் கடை விற்பனையாளர், எங்களுக்கு இந்த பருப்புதான் வந்துள்ளது. அதைத்தான் கொடுக்க முடியும் என்று கூறினார்.
ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு தரமான பருப்பு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
- குடும்ப தகராறில் விபரீதம்
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் கார்த்தி. கூடை பின்னும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி செல்வராணி (வயது 33). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
கார்த்திக்கிற்கும் அவரது மனைவிசெல் வராணிக்கும் இடையே கருத்து வேறு பாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற் பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தகராறில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.
இதனால் மனமுடைந்த செல்வராணி, வாலாஜா ரோடு அம்மூர் ரெயில் நிலை யத்திற்கு நேற்று அதிகாலை வந்தார். அப்போது சென்னை நோக்கி வந்த ஆலப்புழா ரெயில் முன் திடீரென பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து ரெயில் நிலைய அதிகாரிகள் காட்பாடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ரெயில்வே போலீசார் செல்வரா ணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜாப்பேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரெயில்வே போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- வேலூர் ஜெயிலில் அடைத்தனர்
- சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதால் நடவடிக்கை
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த சிறுகரும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 48).
இவர் அதே பகுதியில் உள்ள 8-ம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி, பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கடந்தமாதம் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இவரின் குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி பரிந்துரை யின்பேரில் கலெக்டர் வளர்மதி, மகேந்திரனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
பின்னர் அவரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி நீடிக்கும்
- மின் அதிகாரி தகவல்
ஆற்காடு:
வேலூர் மின்பகிர்மான வட்டம் ஆற்காடு கோட்டம் மாம்பாக்கம், திமிரி, கலவை, ஆணைமல்லூர், தாமரைபாக்கம், புதுப்பாடி, சென்னலேரி ஆகிய துணை மின்நிலையங்களில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திமிரி, ஆணைமல்லூர், காவனூர், தாமரைப்பாக்கம், வளையாத்தூர், மோசூர், பாலமதி, புங்கனூர், பழையனூர், சக்கரமல்லூர், கடபந்தாங்கல், கிளம் பாடி, சின்னகுக்குண்டி, கீராம்பாடி, பெரியகுக்குண்டி, புதுப்பாடி, மாங்காடு, லாடாவரம், மேல்நெல்லி, வளையாத்தூர், மழையூர், கலவை புதூர், மேல்நேத்தபாக்கம்,தி.புதூர், நல்லூர், அல்லாளச்சேரி, வெள்ளம்பி, குட்டியம், பின்னத்தாங்கல், கலவைநகரம், கணியந்தாங்கல், கணியனூர், மேச்சேரி, அரும்பாக்கம், சென்னலேரி, கே.வேளூர், மாம்பாக்கம், குப்பிடி சாத்தம், மருதம், இருங்கூர், பென்னகர், வாழப்பந்தல், வேம்பி, அத்தியானம், ஆருர், வடக்குமேடு, தட்டச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின்சாரம் நிறுத்தப்படும். இந்த தகவலை செயற்பொறியாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.






