என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாநாட்டிற்கான சுவர் விளம்பரங்கள்"

    • அனுமதி இன்றி விளம்பரம் எழுதி உள்ளதாக புகார்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை காரை கூட்ரோடு பகுதியில் சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லம் உள்ளது.

    இந்த இல்லத்தின் சுற்றுச்சுவரில் அ.தி.மு.க வினர் மதுரை மாநாட்டிற்கான சுவர் விளம்பரங்கள் எழுதியுள்ளனர்.

    இது தொடர்பாக சிறுவர் இல்லத்தின் கண்காணிப்பாளர் கண்ணன் ராதா, குழந்தைகள் இல்லத்தின் சுற்றுச்சுவரில் அனுமதி இன்றி விளம்பரம் எழுதி உள்ளதாக ராணிப்பேட்டை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

    புகாரின் பேரில் ராணிப்பேட்டை போலீசார் ராணிப்பேட்டை அ.தி.மு.க. நகர செயலாளர் கே.பி.சந்தோஷம், பழனி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×