என் மலர்
ராணிப்பேட்டை
- மீனவர்களின் உரிமையை நிலை நாட்ட வேண்டும்
- அர்ஜூன் சம்பத் வலியுறுத்தல்
ராணிப்பேட்டை:
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் வாலாஜா அருகே உள்ள இலங்கை தமிழர் முகாம் பகுதிக்கு சென்று அங்குள்ளவர்களை நேரில் சந்தித்து பேசி குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இந்தியாவில் தங்கி உள்ள இலங்கை தமிழர்களின் கல்வி, வேலைவாய்ப்பு ,வாழ்வாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவர்கள் விருப்பப்பட்டு இங்கேயே தங்கி உள்ளனர்.
மீண்டும் இலங்கைக்கு செல்ல விருப்பமில்லாத தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கட்சத்தீவு ஒப்பந்தத்தின் மூலம் மீனவர்களின் உரிமை பாதிக்கப்படுவதால், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது போல கட்சத்தீவு ஒப்பந்தத்தையும் ரத்து செய்து அதை இந்தியாவுடன் இணைத்து மீனவர்களின் உரிமையை நிலை நாட்ட வேண்டும்.
இவர் அவர் கூறினர்.
பின்னர் அவர் வாலாஜா தன்வந்திரி ஆரோக்கிய படத்தில் நடைபெற்ற சிறப்பு சண்டியாகத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அப்போது கட்சி நிர்வாகிகள் மோகன், கண்ணன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்பு
- பக்தர்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலம்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம், ஓச்சேரி அருகே உள்ள சித்தஞ்சி கிராமத்தில் அமைந்துள்ள சித்தஞ்சி சிவகாளிசித்தர் பீடத்தில் ஆடிப்பூரம் உற்சவத் திருவிழா ஸ்ரீ மோகனானந்த சுவாமிகள் தலைமையில் நேற்று நடந்தது.
இதனை யொட்டி நேற்று காலை பக்தர்கள் அலகு குத்தியும், 501 பேர் தீச்சட்டி ஏந்தியும் ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து கோவில் அருகே உள்ள பம்பை நதியில் இருந்து சிவகாளி சக்தி கரக ஊர்வலம் நடந்து.
இதில் 1500 பக்தர்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.
பின்னர் வேத மந்திரங்கள் முழங்க சொர்ண காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்மற்றும் மகா தீபாராதனை நடந்தது.
இதில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.
அவருக்கு ஸ்ரீ மோகனானந்த சுவாமிகள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றார்.
இந்த விழாவில் ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், அரக்கோணம் எம்.எல்.ஏ. ரவி, சோளிங்கர் எம்.எல்.ஏ முனிரத்தினம், முன்னாள் எம்.எல்.ஏக்கள் சம்பத், மனோகர், காவேரிப்பாக்கம் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் பாலாஜி், தெய்வசிகாமணி, காவேரிப்பாக்கம் நகர செயலாளர் பாஸ் (எ) நரசிம்மன், தே.மு.தி.க. வடக்கு ஒன்றிய செயலாளர் குணா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நடந்தது
- பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது
ராணிப்பேட்டை:
வாலாஜா அடுத்த கீழ் புதுப்பேட்டையில் உள்ள தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், பீடத்தின் ஸ்தாபகர் முரளிதர சுவாமிகள் ஆசியுடன் புதிதாக அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தபட்ட வீரபத்திரர், ராஜ காளியம்மன், மூகாம்பிகை சன்னதிகளு க்கான மண்டலாபிஷேகம் ,ஸ்ரீவித்யா ஹோமம் மற்றும் அபிஷேக பூஜைகளுடன் நிறைவு பெற்றது.
ஆடிப்பூரத்தை முன்னிட்டு 3 நாட்களாக நடைபெற்று வரும் நவ சண்டியாகம் இன்று நிறைவு பெறுகிறது. ஆடி மாத பஞ்சமியை முன்னிட்டு நேற்று வராகி ஹோமமும், பஞ்சமுக வராகிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் பஞ்சமுக வராகிக்கு தங்க கவசத்துடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு முரளிதர ஸ்வாமிகள் பிரசாதமும், ஆசியும் வழங்கினார்.
- கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை
- கோஷங்களை எழுப்பினர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையம் அருகே தீண்டாமை ஒழிப்பு முன்னணி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகிய கூட்டமைப்புகள் ஒருங்கிணைந்து மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற கலவரத்தை கண்டிக்கும் விதமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதவெறி, இனவெறியை மனதில் வைத்து கொண்டு பெண்களை தாக்கி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து விட்டு, நிர்வாணமாக்கி கொடுமைப்படுத்திய சம்பவம் நாட்டை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாகவும், இத்தகைய செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அதே நேரத்தில் பல மாதங்களாக நடைபெற்று வரும் கலவரத்தை கட் டுப்படுத்த தவறிய மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகளை கண்டித்தும், இதற்கு பொறுப்பேற்று மத்திய, மாநில அரசுகள் பதவி விலக வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்
- கரும்பு அறுவடை செய்ய ஒரு டன்னுக்கு ரூ.2 ஆயிரத்திற்கும் மேல் செலவாகிறது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி, விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளுக்கு பதிலளித்து பேசினார்.
பல்வேறு பகுதிகளி லிருந்து வந்திருந்த விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு, மாவட்டத்தில் நீர்நிலை களில் ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும், நூறு நாள் வேலை திட்ட பணியாளர்களை விவசாய பணிக்கு அனுப்ப வேண்டும்.
கரும்பு அறுவடை செய்ய ஒரு டன்னுக்கு ரூ.2 ஆயிரத்திற்கும் மேல் செலவாகிறது. எனவே ஒரு டன்னுக்கு கொள்முதல் விலையாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். சோளிங்கர் ஒன்றியம் மருதாலம்-ஜம்புகுளம் இடைப்பட்ட மையப்பகுதியில் துணை வேளாண் விரிவாக்க மையம் அமைக்க வேண்டும்.
வள்ளுவம்பாக்கம் கிராமத்தில் கால்நடை மருந்தகம் அமைக்க வேண்டும்.ஏரிகளிலிருந்து மண் எடுக்க முறையான அறிவிப்புகள் இல்லை. மண் எடுப்பதற்கான அனுமதி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திலகவதி, துணை இயக்குநர் (தோட்டக்கலை) லதா மகேஷ், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் தேவிபிரியா உள்பட விவசாயிகள், துறைசார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- கல்லூரிக்கு சென்ற போது பரிதாபம்
- ஆபத்தான பயணம் வேண்டாம்- ஏ.எஸ்.பி. வேண்டுகோள்
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த பெருமூச்சு கிராமத்தை சேர்ந்தவர் விஜய். தொழிலாளி. இவரது மகன் அஜய். (வயது 19) திருத்தணி அரசு கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று முன் தினம் காலை வழக்கம் போல் அஜய் வீட்டிலிருந்து கல்லூரி சென்றார். பின்னர் காஞ்சிபுரத்தில் இருந்து அரக்கோணம் நோக்கி வந்த அரசு பஸ்சில் ஏறினார். வெங்கடேசபுரம் அருகே வரும்போது படிகட்டில் நின்று பயணம் செய்து கொண்டிருந்த அஜய் நிலை தடுமாறி பஸ்சிலிருந்து கீழே விழுந்தார்.
தலையில் பலத்த காயமடைந்த அவரை, சக பயணிகள் மீட்டு சிகிச்சை க்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டார். தீவிர சிகிச்சை பெற்று வந்த அஜய் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரிஷ் யாதவ் கூறியதாவது:-
பஸ் படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம் செய்ய வேண்டாம்.
வீணாக சேட்டைகளில் கல்லூரி மாணவர்கள் ஈடுபடுவதால் பல்வேறு பிரச்சனைகளில் அவர்கள் மாட்டிக்கொள்கின்றனர். இதனால் அவரது பெற்றோர்கள் மிகவும் சிரமப்படுவதோடு, வேதனை அடைகின்றனர்.
இது போன்ற ஆபத்தான பயணங்களால் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகிறது. எனவே மாணவர்கள் பெற்றோர்களையும், கல்லூரியையும் நினைவில் கொண்டு கவனமாக பயணம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- கலெக்டர் தகவல்
- அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுக அறிவுரை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுமக்களை பரிசோதிக்கும் வகையில் வீடு வீடாகச் சென்று தொழுநோய் கண்டறியும் பணியானது கடந்த 17-ந் தேதி தொடங்கி வருகிற ஆகஸ்ட் 2-ந் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த பணியில் ஆண், பெண் தன்னார்வலர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு இதுவரை 1 லட்சத்து 14 ஆயிரத்து 157 பேருக்கு பரிசோதனை செய்துள்ளனர்.
இதில் ஒருவருக்கு நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் அறிவுறுத்தலின் பேரில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தொழு நோயின் ஆரம்ப அறிகுறிகளான உணர்ச்சியற்ற, வெளிர்ந்த, சிவந்த நிறத்தேமல், நரம்புகள் தடித்திருத்தல் போன்ற அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் அருகில் உள்ள அரசு மருத்து வமனையையும், ஆரம்ப சுகாதார நிலையங்களையும் அணுகுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.
மேற்கண்ட தகவலை கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
- விழிப்புணர்வு சுவரொட்டிகள் வழங்கப்பட்டது
- அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்
சோளிங்கர்:
சோளிங்கர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார குழந்தைகள் பாதுகாப்புகுழு கூட்டம் ஒன்றியக் குழு தலைவர் கலைக்குமார் தலைமையில் நடைபெற்றது.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வஜ்ரவேல், சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நிஷா கலந்து கொண்டு குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் இல்லாத வட்டாரமாக மாற்ற அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.
ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்கள் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஆலோசனை வழங்கினார். முடிவில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு சுவரொட்டிகள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் பாபு என்கிற ஜெகதீசன், நிர்மலா, வட்டார மருத்துவ அலுவலர் கோபிநாத், வட்டார சுகாதார ஆய்வா ளர் சவுந்தரராஜன், வட்டார ஒருங்கிணைப்பாளர் சாந்தகு மார், வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் வாழ்வாதார இயக்க மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.
- போலீசார் வழக்கு பதிவு
- கர்நாடகா மாநில பதிவு எண் கொண்ட வேனை தேடி வருகின்றனர்
ஆற்காடு:
ஆற்காடு அடுத்த பெரியகுக் குண்டி பகுதியை சேர்ந்தவர் பூபதி. இவரது மகன் தினகரன் (வயது 20). அதேப்பகுதியில் மெக்கானிக் கடை நடத்தி வந்தார்.
நேற்று இரவு தினகரன் பைக்கில் சின்னகுக்குண்டி பகுதியில் இருந்து ஆற்காடு நோக்கி வந்தார். ஆற்காடு அடுத்த புதுப்பாடி அருகே சென்ற போது ஆற்காட்டில் இருந்து செய்யாறு நோக்கி சென்ற கர்நாடகா மாநில பதிவு எண் கொண்ட வேன் தினகரன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட தினகரன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
- டோக்கன்களை ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக வழங்கினர்
- முதல் நாளான நேற்று மாவட்ட முழுவதும் 42 ஆயிரத்து 415 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணி நேற்று தொடங்கியது.
அதன்படி மாவட்டத்தில் முழு நேரம், பகுதி நேரமாக இயங்கி வரும் மொத்தம் 614 ரேசன் கடைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.
இந்த கடைகளின் மூலம் 2லட்சத்து 59 ஆயிரத்து 344 குடும்ப அட்டைகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
முதல் நாளான நேற்று மாவட்ட முழுவதும் 42 ஆயிரத்து 415 குடும்ப அட்டைதாரர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் ரூ.1000 உரிமை தொகை பெற விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்களை ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக வழங்கினர்.
- அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்
- புதியதாக 2195 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட உள்ளது
நெமிலி:
நெமிலி பேரூராட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் ரூ.7 கோடி மதிப்பீட்டில் அம்ரூத் 2.0 குடிநீர் மேம்பாட்டு பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். நெமிலி பேரூராட்சி தலைவர் ரேணுகாதேவி சரவணன், ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு அம்ரூத் 2.0 குடிநீர் மேம்பாட்டு பணிகளை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
நெமிலி பேரூராட்சி மொத்தம் 15 வார்டுகளில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.இந்த அம்ரூத் 2.0 குடிநீர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதியதாக 2195 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட உள்ளது.
இப்பணிகள் ஓராண்டு பணிக்காலத்திற்குள் முடிக்கப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் பேரூராட்சி களின் உதவி இயக்குனர் (பொறுப்பு) அம்சா, பேரூராட்சி செயல் அலுவலர் பூவேந்திரன், துணைதலைவர் சந்திரசேகர், நெமிலி ஒன்றிய தி.மு.க செயலாளர்கள் ரவீந்திரன் (மேற்கு), பெருமாள் (மத்தியம்), நெமிலி நகர செயலாளர் ஜனார்த்தனன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
- கட்டிட உபகரணங்கள் விலை குறையும்
- ஆற்காடு பஞ்சாங்கத்தின் படி அனைத்தும் நடந்து வருகிறது
ஆற்காடு:
தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் தக்காளி விலை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து உயர்ந்து கொண்டே உள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே தக்காளி திருடு போகும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.
ஜூலை மாதம் தொடக்கத்தில் உயரத் தொடங்கிய தக்காளி விலை தற்போது உச்சம் தொட்டுள்ளது. இதனால், சமையலில் தக்காளி பயன் படுத்துவது குறைந்துள்ளது.
இந்நிலையில் தக்காளி விலை உயரும் என்பதை ஆற்காடு பஞ்சாங்கம் முன்கூட்டியே கணித்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு சீத்தா ராமய்யர் பஞ்சாங்க குறிப்பில் ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் தக்காளி விலை உயரும் என்று கணித்து கூறப்பட்டுள்ளது.
2023-2024-ம் ஆண்டுக்கான பஞ்சா ங்கத்தில் சோபகிருது தமிழ் ஆண்டின் 34, 35 பக்கங்களில் ஜூலை, ஆகஸ்டு மாதத்திற்க்காண கணிப்பில் இந்த தகவல் உள்ளது.
அறிவியலை மீறி வாழ்வியல் சாஸ்திரமான பஞ்சாங்கத்தில் மழை, புயல், வானிலை, விளைச்சல் குறித்த தகவல்கள் துல்லியமாக கணிக்கப்பட்டிருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து ஆற்காடு ஜோதிடர் சுந்தர்ராஜன் கூறுகையில்:-
ஆற்காடு பஞ்சாங்கத்தில் கூறியபடி தற்போது தக்காளி விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மேலும் இந்த ஆண்டு பஞ்சாங்கத்தில் டெல்லி ஒரிசா மும்பை உள்ளிட்ட மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என கூறப்பட்டுள்ளது.
அதன்படி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நாட்டில் மணல் பிரசனை தீரும். கட்டிட உபகரணங்கள் விலை குறையும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆற்காடு பஞ்சாங்கத்தின் படி அனைத்தும் நடந்து வருகிறது என்றார்.






