வேன் மோதி மெக்கானிக் பலி

போலீசார் வழக்கு பதிவுகர்நாடகா மாநில பதிவு எண் கொண்ட வேனை தேடி வருகின்றனர்
வேன் மோதி மெக்கானிக் பலி
Published on

ஆற்காடு:

ஆற்காடு அடுத்த பெரியகுக் குண்டி பகுதியை சேர்ந்தவர் பூபதி. இவரது மகன் தினகரன் (வயது 20). அதேப்பகுதியில் மெக்கானிக் கடை நடத்தி வந்தார்.

நேற்று இரவு தினகரன் பைக்கில் சின்னகுக்குண்டி பகுதியில் இருந்து ஆற்காடு நோக்கி வந்தார். ஆற்காடு அடுத்த புதுப்பாடி அருகே சென்ற போது ஆற்காட்டில் இருந்து செய்யாறு நோக்கி சென்ற கர்நாடகா மாநில பதிவு எண் கொண்ட வேன் தினகரன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட தினகரன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 

X

Maalai Malar
www.maalaimalar.com