என் மலர்
நீங்கள் தேடியது "Safety Committee meeting"
- விழிப்புணர்வு சுவரொட்டிகள் வழங்கப்பட்டது
- அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்
சோளிங்கர்:
சோளிங்கர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார குழந்தைகள் பாதுகாப்புகுழு கூட்டம் ஒன்றியக் குழு தலைவர் கலைக்குமார் தலைமையில் நடைபெற்றது.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வஜ்ரவேல், சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நிஷா கலந்து கொண்டு குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் இல்லாத வட்டாரமாக மாற்ற அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.
ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்கள் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஆலோசனை வழங்கினார். முடிவில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு சுவரொட்டிகள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் பாபு என்கிற ஜெகதீசன், நிர்மலா, வட்டார மருத்துவ அலுவலர் கோபிநாத், வட்டார சுகாதார ஆய்வா ளர் சவுந்தரராஜன், வட்டார ஒருங்கிணைப்பாளர் சாந்தகு மார், வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் வாழ்வாதார இயக்க மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.






