என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • 7 பவுன் நகை பறிமுதல்
    • ஜெயிலில் அடைப்பு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை, சிப்காட் அடுத்த சீக்கராஜ புரம் அவுசிங் போர்டு பகுதியில் வசித்து வருபவர் மகேஸ்வரன் (வயது38). பெல் தொழிற்சாலை ஊழியர்.

    இவர் கடந்த 8-ந் தேதி சென்னையில் உள்ள தனது தங்கையின் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் மறுநாள் வீட்டிற்கு வந்தார்.

    அப்போது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து பீரோவிலிருந்த 9 பவுன் நகைகள் கும்பல் கொள்ளையடித்து சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இது தொடர்பாக மகேஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

    இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக பெல் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த சங்கீத்குமார்(28) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    அவரிட மிருந்து ரூ.2லட்சத்து40 ஆயிரம் மதிப்பிலான 7 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

    இதே திருட்டு வழக்கில் தொடர்புடைய நரசிங்கபுரம், பெல் சூர்யா நகர் பகுதியை சேர்ந்த தாமஸ் ஆல்வா எடிசன்(31), ராஜீவ்காந்தி நகர் பகுதியை சேர்ந்த பார்த்தசாரதி(25) ஆகிய இருவரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்களிடமி ருந்து 2 பவுன் நகைகளை பறிமுதல் செய்து இருவரையும் ராணிப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • அனைத்து வார்டுகளிலும் நடைபெற்று வரும் குழாய்கள் அமைக்கும் பணி
    • அதிகாரிகளுக்கு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் சந்தை பகுதியில் அமைக்கப்பட்டு வரும் 60 காய்கறி விற்பனை கடைகள், 300 சிறு விற்பனை காய்கறி கடைகள், குளிர்பதன கிடங்கு, ஆட்டு சந்தைக்கான கட்டிடம், ஓய்வறை, கழிவறை ஆகிய பணிகள் நடைபெற்று வருகிறது .

    இந்த பணிகளை கலெக்டர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதே போல் வாலாஜா ஒன்றியம் மருதம்பாக்கம் கிராமத்தில் தூய்மை இந்தியா திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை மையத்தில் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகள் விவசாயத்திற்கும், பிளாஸ்டிக் மற்றும் இதர குப்பைகள் சிமெண்ட் தொழிற்சாலை களுக்கும் அனுப்பப்படும் பணி களையும் பார்வை யிட்டார்.

    ராணிப்பேட்டை நகரில் ரூ.33 கோடி மதிப்பில் அம்ருத் 2.0 திட்டத்தில் அனைத்து வார்டுகளிலும் நடைபெற்று வரும் குழாய்கள் அமைக்கும் பணி, வாலாஜாவில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.2 கோடி மதிப்பில் பஸ் நிலையம் சீரமைக்கும் பணி, ரூ. 1 கோடியே 31 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்டுள்ள பூண்டி மகான் குளம், குளத்தை சுற்றி மரம் நடுதல், பூங்கா அமைத்தல், பொழுது போக்கு, விளையாட்டு சாதனங்கள் நிறுவுதல், கழிப்பறை அமைத்தல் உள்பட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் கலெக்டர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

    ஆய்வின் போது ராணிப்பேட்டை, வாலாஜா நகரமன்ற தலைவர்கள் சுஜாதா வினோத், ஹரிணி தில்லை, துணை தலைவர் கமலராகவன், நகரமன்ற உறுப்பினர் குமார் உள்பட நகராட்சி ஆணையாளர்கள் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • கொலை மிரட்டல் விடுத்த தப்பி சென்றார்
    • போலீசார் விசாரணை

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த பெரியகிராமம் பஜனைக்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 58). இவர் காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் அலுவலகத்திற்கு வந்து அலுவலகம் பணிகளை கவனித்தார். அப்போது மதிய வேலையில் அலுவலகத்திற்கு வந்த பெரியகிராமம் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் (36)லாரி டிரைவர். இவர் உதவியாளர் மாரிமுத்துவிடம் முன்விரோதம் காரணமாக தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். இதனால் இருவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில் ஆவேசம் அடைந்த லாரி டிரைவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாரிமுத்துவை வெட்ட முயன்றுள்ளார். இதனைப் பார்த்த உதவியாளர் மாரிமுத்து தடுத்து கத்தியை பிடுங்கி கிழே போட்டுள்ளார்.

    ஆனால் ஆவேசம் அடங்காத லாரி டிரைவர் மாரிமுத்துவின் இடது கையை பிடித்து கடித்து உன்னை கொலை செய்யாமல் விடமாட்டேன் என கொலை மிரட்டல் விடுத்த தப்பி சென்றார்.

    இதுதொடர்பாக உதவியாளர் மாரிமுத்து நேற்று இரவு காவேரிப்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தார்.

    புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இருக்கைகள், குடிதண்ணீர் வசதிகளை பார்வையிட்டார்
    • கலெக்டர் நேரில் ஆய்வு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் தகுதியுடைய மகளிர்க்கு உரிமைத்தொகை வழங்க ஏதுவாக 3லட்சத்து 48ஆயிரத்து 452 ரேசன் அட்டைதாரர்களுக்கும் விண்ணப்பங்கள் கடந்த 2-ந்தேதி முதல் வீடு வீடாகச் சென்று நேரடியாக வினியோகிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து நேற்று முதல் விண்ணப்பங்களை பதிவு செய்யும் முதற்கட்ட முகாம் தொடங்கப்பட்டுள்ளது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதற்கட்டமாக 6 வட்டங்களிலும் 365 ரேசன் கடை பகுதிகளில் 366 முகாம்கள் நடைபெறுகிறது.

    இந்த நிலையில் வாலாஜா ஒன்றியம் வி.சி மோட்டூர் அரசு நடுநிலைப்பள்ளி, ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் மாவட்ட கலெக்டர் வளர்மதி நேரடியாக சென்று பதிவு முகாம் நடைபெறுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது முகாமில் வருபவர்களுக்கு இருக்கைகள், குடிதண்ணீர் வசதிகள் செய்யப்ப ட்டுள்ளதா , தன்னார்வலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனரா,

    விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் பொழுது பயோமெட்ரிக் முறையில் கைபேசிc செயலியின் மூலம் விண்ணப்பங்கள் பதிவேற்றம் நடைபெறுகிறதா என அனைத்தையும் பார்வை யிட்டார்.

    இந்த ஆய்வின் போது தாசில்தார்கள் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்
    • நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் நடவடிக்கை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி நேற்று வாலாஜா போலீஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின் போது போலீஸ் நிலையத்தில் கோப்புகளை பார்வையிட்டு நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும், நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா, சப் இன்ஸ்பெக்டர் மகாராஜன் உள்பட போலீசார் உடன்இருந்தனர்.

    • நள்ளிரவில் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்
    • பொருட்களை திருடிச் சென்றதாக புகார்

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த தணிகைப் போளூர், நரிக்குறவர் காலனியில் 200-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

    அரக்கோணம் ெரயில்வே பாதுகாப்பு படை போலீசார் நேற்று இரவு நரிக்குறவர் காலணிக்கு சென்று தூங்கி கொண்டிருந்த 5 பேரை சந்தேகத்தில் பேரில் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

    இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பகுதி மக்கள் ெரயில்வே பாதுகாப்பு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். விசாரணை அழைத்து வந்தவர்களை விடுவிக்க கோரி, போலீஸ் நிலையம் அருகே தர்ணாவில் ஈடுபட்டனர்.

    இது குறித்து நரிக்குறவ பெண்கள் கூறியதாவது:-

    நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த எங்களுக்கு வாழ்வாதாரம் எதுவும் இல்லை. உணவுக்காக வேட்டைக்கு செல்பவர்களையும் போலீசார் சந்தேகத்தின் பேரில் அழைத்துச் சென்று வழக்கு பதிவு செய்வதுடன், அடித்துக் கொடுமை செய்வது வழக்கமாக நடக்கிறது.

    மேலும் ரயில்களில் ஊசி, மணி, பாசி பொருட்களை விற்கச் சென்றால் அதற்கும் அனுமதிப்பதில்லை எங்களை வியாபாரம் செய்ய விடுவதில்லை.

    எந்த ஒரு குற்றச்சம்பவங்களில் ஈடுபடாத எங்களின் குடும்பத்தினரை பொய் வழக்கில் கைது செய்வதால், எங்களின் குடும்பம் பரிதவிப்பது தொடர்கதையாக உள்ளது.

    போலீசாரின் கொடுமை தாங்க முடியாமல் நாங்கள் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு எங்களை, மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர். இது தொடர்பாக உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    இது தொடர்பாக அரக்கோணம் ெரயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம் கேட்டபோது, இவர்களில் சிலர் ெரயில்வே பொருட்களை திருடிச் சென்றுள்ளது விசாரணையில் தெரிந்தது.

    அவர்களை தேடிச் சென்றபோது முக்கிய குற்றவாளிகள் தப்பி ஓடி விட்டனர்.

    முக்கிய குற்றவாளிகளுடன் தொடர்புடைய உறவினர்களைத்தான் விசாரணைக்காக அழைத்து வந்துள்ளோம். விசாரணை நடத்திய பிறகு தான் எங்களுக்கு முழு விவரம் தெரிய வரும் என்றனர்.

    • மத்திய அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்
    • ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் மாவட்ட தி.மு.க மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்பில், மணிப்பூர் கலவரத்தை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்து முத்துக்கடை பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளரும், மாவட்ட ஊராட்சி குழு தலைவருமான ஜெயந்தி திருமூர்த்தி தலைமை தாங்கினார்.

    மாவட்ட மகளிர் அணி தலைவர் மனோன்மணி , துணை தலைவர் பவளக்கொடி, தொண்டர் அணி தலைவர் ஜெயஷீலா, துணை தலைவர் மகேஸ்வரி உள்பட துணை அமைப்பாளர்கள் பலர் முன்னிலை வகித்தனர். மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் பவானி வடிவேல் வரவேற்று பேசினார்.

    மேலும் மணிப்பூரில் பெண்கள் நிர்வாணப்படுத்தபட்டதையும், கலவரத்தை தடுக்காத மத்திய அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்தில் ராணிப்பேட்டை , வாலாஜா, ஆற்காடு நகரமன்ற தலைவர்கள் சுஜாதா வினோத், ஹரிணி தில்லை, தேவி பென்ஸ் பாண்டியன், அம்மூர் பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதா மகேஷ் உள்பட மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி நிர்வாகிகள் , தொண்டர்கள் என ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

    • நிலுவையிலுள்ள பணிகளுக்கான காரணங்களையும் கேட்டறிந்து விரைவாக முடிக்க வேண்டும்
    • கலெக்டர் வளர்மதி உத்தரவு

    ராணிப்பேட்டை:

    தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் 5 ஆண்டுகளில் தேவையான அனைத்து அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்தோடு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் உள்ள 288 கிராம ஊராட்சிகளில் 2021-2022 ம் நிதி ஆண்டில் 60 கிராம ஊராட்சிகளும் மற்ற 4 நிதி ஆண்டுகளுக்கும் தலா 57 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி 2021-2022 ஆண்டில் தேர்வு செய்யப்பட்டுள்ள 60 கிராம ஊராட்சிகள் மற்றும் 2022-2023 ம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்டுள்ள 57 கிராம ஊராட்சிகளிலும் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் தேவையான அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கோள்ளப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து ஆய்வு கூட்டம் ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்தில் கலெக்டர் வளர்மதி கூறியதாவது:-

    ஆய்வு செய்து, நிலுவையிலுள்ள பணிகளுக்கான காரணங்களையும் கேட்டறிந்து பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்.

    கிராமங்களை தன்னிறைவு பெற்ற கிராமமாக உருவாக்க அனைத்துத் துறை அலுவலர்களும் முழு ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், திட்ட இயக்குநர் லோகநாயகி மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • காவேரிப்பாக்கம் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடந்தது
    • எம்.எல்.ஏ ஈஸ்வரப்பன் தொடங்கி வைத்தார்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பேரூர் திமுக சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா முன்னிட்டு கிரிக்கெட் போட்டி நேற்று நடந்தது.

    நிகழ்ச்சிக்கு காவேரிப்பாக்கம் வார்டு கவுன்சிலரும் பேரூர் செயலாளருமான பாஸ் என்கிற நரசிம்மன் தலைமை வகித்தார். பேரூர் துணை செயலாளர்கள் தயாளன், தட்சணாமூர்த்தி, ஒன்றிய பிரதிநிதி பழனிச்சாமி, பொருளாளர் தியாகு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பளாராக ஆற்காடு எம்.எல்.ஏ ஈஸ்வரப்பன் கலந்துகொண்டு கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் சுந்தரமூர்த்தி, மாவட்டத் துணைச் செயலாளர் துரைமஸ்தான், பேரூர் மாணவரணி தலைவர் ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • விவசாயிக்கு கத்தி குத்து
    • போலீசார் விசாரணை

    சோளிங்கர்:

    சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்டகொண்டப்பாளையம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் மகன் ராஜேஷ் (வயது 29) இவருக்கும் பக்கத்து நிலத்தை சேர்ந்தவருக்கும் இடையே, நேற்று நிலத்தில் மாடு மேய்ந்தது சம்பந்தமாக தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த பக்கத்து நிலத்துக்காரர், கத்தியால் ராஜேஷ் நெற்றியில் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ராஜேஷ் சோளிங்கர் அரசு மருத்துவம்னையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து சோளிங்கர் இன்ஸ்பெக்டர் பாரதி விசாரணை நடத்தி வருகிறார்.

    • 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
    • நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு தொடங்கி வைத்தார்

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த நாகவேடு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப் போம் திட்ட சிறப்பு மருத்துவமுகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தி பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட கவுன்சிலர் சுந்தரம்மாள் பெருமாள் முன்னிலை வகித்தார். மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் மணிமாறன் வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினராக நெமிலி ஒன்றியக்குழு தலைவர் பெ.வடிவேலு கலந்துகொண்டு மருத்துவ முகாமைதொடங்கி வைத்தார். முகாமில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், காது, மூக்கு, தொண்டை, பல், கர்ப்பப்பை புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு பரிசோதனை செய்து, மருந்து, மாத் திரைகள் வழங்கப்பட்டன.

    மேலும், கர்ப்பிணிகளுக்கு தாய், சேய் நல பெட்டகம் வழங்கப்பட்டது. மகளிர் பல்வேறு ஸ்டால்கள் அமைத்து ஆலோசனைகளும் வழங் குழு சார்பில் கப்பட்டது. முகாமில் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் துணைத் தலைவர் தீனதயாளன், நெமிலி மத்திய ஒன்றிய செயலாளர் பெருமாள், அவைத்தலைவர் நரசிம்மன், மாவட்ட பிரதிநிதி சம்பத், வட்டார மருத்துவ அலுவலர் ரதி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கந்த சாமி, டாக்டர்கள் வெற்றிச்செல்வன், கனிமொழி, சுகாதார ஆய்வாளர்கள் பூஞ்செழியன், பெருமாள், தேவநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • போலீசார் ரோந்து பணியில் சிக்கினார்
    • கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி அடுத்த மாமண்டூர் கிராமத்தில் அவளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கரிவேட்டான் கால்வாயிலிருந்து மூட்டையுடன் பைக்கில் வந்தவரை போலீசார் மடக்கினர். போலீசாரை கண்டதும் பைக்கை நிறுத்திவிட்டு அவர் தப்பி ஓடிவிட்டார்.

    போலீசார் பைக்கை பறிமுதல் செய்து சோதனை செய்தபோது, பைக் மூலம் மணல் கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து, மாமண்டூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்த சின்னராசை (வயது 25) கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    ×