என் மலர்
நீங்கள் தேடியது "தர்ணாவில் ஈடுபட்டனர்"
- நள்ளிரவில் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்
- பொருட்களை திருடிச் சென்றதாக புகார்
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த தணிகைப் போளூர், நரிக்குறவர் காலனியில் 200-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
அரக்கோணம் ெரயில்வே பாதுகாப்பு படை போலீசார் நேற்று இரவு நரிக்குறவர் காலணிக்கு சென்று தூங்கி கொண்டிருந்த 5 பேரை சந்தேகத்தில் பேரில் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பகுதி மக்கள் ெரயில்வே பாதுகாப்பு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். விசாரணை அழைத்து வந்தவர்களை விடுவிக்க கோரி, போலீஸ் நிலையம் அருகே தர்ணாவில் ஈடுபட்டனர்.
இது குறித்து நரிக்குறவ பெண்கள் கூறியதாவது:-
நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த எங்களுக்கு வாழ்வாதாரம் எதுவும் இல்லை. உணவுக்காக வேட்டைக்கு செல்பவர்களையும் போலீசார் சந்தேகத்தின் பேரில் அழைத்துச் சென்று வழக்கு பதிவு செய்வதுடன், அடித்துக் கொடுமை செய்வது வழக்கமாக நடக்கிறது.
மேலும் ரயில்களில் ஊசி, மணி, பாசி பொருட்களை விற்கச் சென்றால் அதற்கும் அனுமதிப்பதில்லை எங்களை வியாபாரம் செய்ய விடுவதில்லை.
எந்த ஒரு குற்றச்சம்பவங்களில் ஈடுபடாத எங்களின் குடும்பத்தினரை பொய் வழக்கில் கைது செய்வதால், எங்களின் குடும்பம் பரிதவிப்பது தொடர்கதையாக உள்ளது.
போலீசாரின் கொடுமை தாங்க முடியாமல் நாங்கள் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு எங்களை, மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர். இது தொடர்பாக உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
இது தொடர்பாக அரக்கோணம் ெரயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம் கேட்டபோது, இவர்களில் சிலர் ெரயில்வே பொருட்களை திருடிச் சென்றுள்ளது விசாரணையில் தெரிந்தது.
அவர்களை தேடிச் சென்றபோது முக்கிய குற்றவாளிகள் தப்பி ஓடி விட்டனர்.
முக்கிய குற்றவாளிகளுடன் தொடர்புடைய உறவினர்களைத்தான் விசாரணைக்காக அழைத்து வந்துள்ளோம். விசாரணை நடத்திய பிறகு தான் எங்களுக்கு முழு விவரம் தெரிய வரும் என்றனர்.






