search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிராம நிர்வாக அலுவலகத்தில் புகுந்து ஊழியரை கத்தியால் வெட்ட முயற்சி
    X

    கிராம நிர்வாக அலுவலகத்தில் புகுந்து ஊழியரை கத்தியால் வெட்ட முயற்சி

    • கொலை மிரட்டல் விடுத்த தப்பி சென்றார்
    • போலீசார் விசாரணை

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த பெரியகிராமம் பஜனைக்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 58). இவர் காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் அலுவலகத்திற்கு வந்து அலுவலகம் பணிகளை கவனித்தார். அப்போது மதிய வேலையில் அலுவலகத்திற்கு வந்த பெரியகிராமம் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் (36)லாரி டிரைவர். இவர் உதவியாளர் மாரிமுத்துவிடம் முன்விரோதம் காரணமாக தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். இதனால் இருவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில் ஆவேசம் அடைந்த லாரி டிரைவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாரிமுத்துவை வெட்ட முயன்றுள்ளார். இதனைப் பார்த்த உதவியாளர் மாரிமுத்து தடுத்து கத்தியை பிடுங்கி கிழே போட்டுள்ளார்.

    ஆனால் ஆவேசம் அடங்காத லாரி டிரைவர் மாரிமுத்துவின் இடது கையை பிடித்து கடித்து உன்னை கொலை செய்யாமல் விடமாட்டேன் என கொலை மிரட்டல் விடுத்த தப்பி சென்றார்.

    இதுதொடர்பாக உதவியாளர் மாரிமுத்து நேற்று இரவு காவேரிப்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தார்.

    புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×