என் மலர்
உள்ளூர் செய்திகள்

வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் வளர்மதி ஆய்வு செய்த காட்சி.
வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
- அனைத்து வார்டுகளிலும் நடைபெற்று வரும் குழாய்கள் அமைக்கும் பணி
- அதிகாரிகளுக்கு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் சந்தை பகுதியில் அமைக்கப்பட்டு வரும் 60 காய்கறி விற்பனை கடைகள், 300 சிறு விற்பனை காய்கறி கடைகள், குளிர்பதன கிடங்கு, ஆட்டு சந்தைக்கான கட்டிடம், ஓய்வறை, கழிவறை ஆகிய பணிகள் நடைபெற்று வருகிறது .
இந்த பணிகளை கலெக்டர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதே போல் வாலாஜா ஒன்றியம் மருதம்பாக்கம் கிராமத்தில் தூய்மை இந்தியா திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை மையத்தில் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகள் விவசாயத்திற்கும், பிளாஸ்டிக் மற்றும் இதர குப்பைகள் சிமெண்ட் தொழிற்சாலை களுக்கும் அனுப்பப்படும் பணி களையும் பார்வை யிட்டார்.
ராணிப்பேட்டை நகரில் ரூ.33 கோடி மதிப்பில் அம்ருத் 2.0 திட்டத்தில் அனைத்து வார்டுகளிலும் நடைபெற்று வரும் குழாய்கள் அமைக்கும் பணி, வாலாஜாவில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.2 கோடி மதிப்பில் பஸ் நிலையம் சீரமைக்கும் பணி, ரூ. 1 கோடியே 31 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்டுள்ள பூண்டி மகான் குளம், குளத்தை சுற்றி மரம் நடுதல், பூங்கா அமைத்தல், பொழுது போக்கு, விளையாட்டு சாதனங்கள் நிறுவுதல், கழிப்பறை அமைத்தல் உள்பட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் கலெக்டர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
ஆய்வின் போது ராணிப்பேட்டை, வாலாஜா நகரமன்ற தலைவர்கள் சுஜாதா வினோத், ஹரிணி தில்லை, துணை தலைவர் கமலராகவன், நகரமன்ற உறுப்பினர் குமார் உள்பட நகராட்சி ஆணையாளர்கள் அதிகாரிகள் உடன் இருந்தனர்.






