என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "366 முகாம்கள் நடைபெறுகிறது"

    • இருக்கைகள், குடிதண்ணீர் வசதிகளை பார்வையிட்டார்
    • கலெக்டர் நேரில் ஆய்வு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் தகுதியுடைய மகளிர்க்கு உரிமைத்தொகை வழங்க ஏதுவாக 3லட்சத்து 48ஆயிரத்து 452 ரேசன் அட்டைதாரர்களுக்கும் விண்ணப்பங்கள் கடந்த 2-ந்தேதி முதல் வீடு வீடாகச் சென்று நேரடியாக வினியோகிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து நேற்று முதல் விண்ணப்பங்களை பதிவு செய்யும் முதற்கட்ட முகாம் தொடங்கப்பட்டுள்ளது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதற்கட்டமாக 6 வட்டங்களிலும் 365 ரேசன் கடை பகுதிகளில் 366 முகாம்கள் நடைபெறுகிறது.

    இந்த நிலையில் வாலாஜா ஒன்றியம் வி.சி மோட்டூர் அரசு நடுநிலைப்பள்ளி, ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் மாவட்ட கலெக்டர் வளர்மதி நேரடியாக சென்று பதிவு முகாம் நடைபெறுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது முகாமில் வருபவர்களுக்கு இருக்கைகள், குடிதண்ணீர் வசதிகள் செய்யப்ப ட்டுள்ளதா , தன்னார்வலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனரா,

    விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் பொழுது பயோமெட்ரிக் முறையில் கைபேசிc செயலியின் மூலம் விண்ணப்பங்கள் பதிவேற்றம் நடைபெறுகிறதா என அனைத்தையும் பார்வை யிட்டார்.

    இந்த ஆய்வின் போது தாசில்தார்கள் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    ×