என் மலர்
நீங்கள் தேடியது "அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்"
- மத்திய அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்
- ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில் மாவட்ட தி.மு.க மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்பில், மணிப்பூர் கலவரத்தை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்து முத்துக்கடை பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளரும், மாவட்ட ஊராட்சி குழு தலைவருமான ஜெயந்தி திருமூர்த்தி தலைமை தாங்கினார்.
மாவட்ட மகளிர் அணி தலைவர் மனோன்மணி , துணை தலைவர் பவளக்கொடி, தொண்டர் அணி தலைவர் ஜெயஷீலா, துணை தலைவர் மகேஸ்வரி உள்பட துணை அமைப்பாளர்கள் பலர் முன்னிலை வகித்தனர். மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் பவானி வடிவேல் வரவேற்று பேசினார்.
மேலும் மணிப்பூரில் பெண்கள் நிர்வாணப்படுத்தபட்டதையும், கலவரத்தை தடுக்காத மத்திய அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் ராணிப்பேட்டை , வாலாஜா, ஆற்காடு நகரமன்ற தலைவர்கள் சுஜாதா வினோத், ஹரிணி தில்லை, தேவி பென்ஸ் பாண்டியன், அம்மூர் பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதா மகேஷ் உள்பட மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி நிர்வாகிகள் , தொண்டர்கள் என ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.






