என் மலர்
நீங்கள் தேடியது "Cow grazing dispute"
- விவசாயிக்கு கத்தி குத்து
- போலீசார் விசாரணை
சோளிங்கர்:
சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்டகொண்டப்பாளையம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் மகன் ராஜேஷ் (வயது 29) இவருக்கும் பக்கத்து நிலத்தை சேர்ந்தவருக்கும் இடையே, நேற்று நிலத்தில் மாடு மேய்ந்தது சம்பந்தமாக தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த பக்கத்து நிலத்துக்காரர், கத்தியால் ராஜேஷ் நெற்றியில் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ராஜேஷ் சோளிங்கர் அரசு மருத்துவம்னையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து சோளிங்கர் இன்ஸ்பெக்டர் பாரதி விசாரணை நடத்தி வருகிறார்.






