search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாயில் கருப்புத் துணி கட்டி, திருவோடு ஏந்தி விவசாயிகள் போராட்டம்
    X

    வாயில் கருப்புத் துணி கட்டி, திருவோடு ஏந்தி விவசாயிகள் போராட்டம்

    • 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தல்
    • அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த கலப்பளாம்பட்டு கிராமத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தொடர்காத்திருப்பு போராட்டம் கடந்த 7-ந் தேதி தொடங்கி நடந்து வந்தது.

    10-வது நாளாக நேற்று கலப்பளாம்பட்டு கிராமத்தில் விவசாயிகள் கருப்பு துணியால் வாயை கட்டிக் கொண்டு, கையில் திருவோடு ஏந்தியும், தேங்காய் உடைத்தும், பாலை கீழே ஊற்றி போராட்டம் நடத்தினர்.

    இந்த போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வஜ்ஜிரவேல் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் பாலாஜி, கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இயற்கை விவசாயி பிரபாகரன் வரவேற்றார்.

    இதில் உழவர்களின் விவசாயிகளின் அனைத்து உற்பத்தி பொருட்களுக்கும், குறைந்தப்பட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய, சட்டம் இயற்ற வேண்டும். தென்னை, பனையில் கள் இறக்கி விற்க அனுமதிக்க வேண்டும்.

    தேங்காய், கடலை, நல்லெண்ணைபோன்ற எண்ணெய் வகைகளை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து, ரேஷன் கடைகளில் மானிய விலையில் விற்க வேண்டும்.

    கோரிக்கை

    கொப்பரை தேங்காய்க்கு குறைந்தபட்ச ஆதார விலையாக கிலோவிற்கு, 150 ரூபாய் நிர்ணயம் செய்ய வேண்டும்.செய்ய வேண்டும். தேங்காய் ஒரு டன், 40 ஆயிரம் ரூபாய் என கொள்முதல் செய்ய வேண்டும். நெல் குவிண்டாலுக்கு, 3,000 ரூபாய், கரும்பு டன்னுக்கு 5,000 ரூபாய், உட்பட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

    இதில் நெமிலி, பனப்பாக்கம், பாணாவரம், காவேரிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×