என் மலர்
நீங்கள் தேடியது "ஒரே கவுண்டரில் டிக்கெட் வினியோகம்."
- ரெயில்வே நிர்வாகம் அலட்சியப் போக்கை கடைபிடிப்பதாக குற்றச்சாட்டு
- பயணிகள் கடும் அவதி
அக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் ெரயில் நிலையம் முக்கிய சந்திப்பாக உள்ளது.
டிக்கெட் கவுண்டர்
இங்கு அதிவிரைவு ெரயில்களைத் தவிர, அனைத்து ரெயில்களும் நின்று செல்கின்றன. இங்கிருந்து சென்னைக்கு புறநகர் ரெயில்களும் இயக்கப்படுகின்றன.
இந்த ரெயில் நிலையத்தில் மொத்தமாக 5 டிக்கெட் கவுண்டர் உள்ளது. ஆனால் ஒரு டிக்கெட் கவுண்டர் மட்டுமே தற்போது செய ல்பட்டு வருகிறது. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இன்று திங்கட்கிழமை என்பதால் சீசன் டிக்கெட், விடுமுறைக்கு அரக்கோணம் வந்து செல்வோர் மற்றும் வேலைக்கு செல்வோர் என அனைத்து தரப்பினரும் டிக்கெட் வாங்க வருவதால் அதிக கூட்டம் ஏற்படுவது வழக்கமாக உள்ளது.
இதையறிந்த நிலையிலும் ரெயில்வே நிர்வாகம் தொடர்ந்து அலட்சியப் போக்கை கடைபிடிப்பதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
திங்கட்கிழமை மட்டுமாவது கவுண்டர்களை அதிகரித்து பயணிகளுக்கு விரைவாக டிக்கெட் வழங்கி அவர்கள் குறித்த நேரத்திற்குள் ரயிலுக்கு செல்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
ஒரு சிலர் தாங்கள் செல்ல வேண்டிய ரெயிலில் குறித்த நேரத்திற்க்குள் செல்ல முடியாமல் தவற விட்டனர். இதனால் அவர்கள் பதற்றத்துடன் இருந்ததை பார்க்க முடிந்தது.
எனவே சம்பந்தப்பட்ட ரெயில்வே அதிகாரிகள் பயணிகளின் நலன் கருதி இனியாவது திங்கட்கிழமை களில் கூடுதல் கவுண்டர்களை திறந்து பயணிகள் அவர் செல்லக்கூடிய ரெயிலுக்கு குறித்த செல்ல உதவ வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.






