என் மலர்
ராணிப்பேட்டை
- மாவட்ட செயலாளர் சு.ரவி.எம்.எல்.ஏ. பேச்சு
- வருகிற 20-ந்தேதி மாநாடு நடக்கிறது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில் அ.தி.மு.க வின் நகர, ஒன்றிய, பேரூர் செயலாள ர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் நந்தகோபால் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏக்கள் சம்பத், சீனிவாசன் ஆகியோர் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் கே.பி.சந்தோஷம் வரவேற்றார்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
வருகிற 20ம் தேதி மதுரையில் நடைபெறும் பொன்விழா எழுச்சி மாநா ட்டில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளில் ஒரு தொகுதிக்கு 2ஆயிரத்து500 பேர் என மொத்தம் 10ஆயிரம் பேர் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்பது உள்பட பல்வேறு ஆலோசனைகள் வழங்கி பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர் எஸ்.எம். சுகுமார் உள்பட மாவட்ட நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- சுதந்திர தினத்தை முன்னிட்டு நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
காவேரிப்பாக்கம்:
நாடு முழுவதும் 76-வது சுதந்திர தின விழா வரும் 15-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.விழாவை முன்னிட்டு 'என் மண் என் தேசம்'என்னும் தலைப்பில் காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் ஒட்டுமொத்த தூய்மை பணி மேற்கொள்ளுதல் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் கடந்த 9-ந்தேதி முதல் வரும் 15-ந் தேதி மேற்கொள்ளப்பட உள்ளது.
நிலையில் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஒட்டுமொத்த தூய்மை பணி,பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் லதா நரசிம்மன் தலைமை தாங்கினார்.செயல் அலுவலர் சரவணன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி துணைத் தலைவர் தீபிகா முருகன் வரவேற்றார்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பஜார் பகுதியில் உள்ள வியாபாரிகளிடம் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இதில் வார்டு உறுப்பினர்கள் நரசிம்மன், அருண்மொழி, மணிமேகலை, இந்திரா, பேரூராட்சி அலுவலர்கள், மகளிர் குழுவினர் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
- அமைச்சர் ஆர்.காந்தி வேண்டுகோள்
- 21-ந் தேதி வரை பணி நடைபெறுகிறது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சருமான ஆர்.காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
இந்திய தேர்தல் ஆணையம் 1.1.2024-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.
வீடு,வீடாக வாக்காள ர்களை சரிபார்க்கும் பணியில் அந்தந்த பகுதியில் உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கடந்த மாதம் 21-ந் தேதி முதல் ஈடுபட்டுள்ளனர் . வருகிற 21-ந் தேதி வரை இந்த பணி நடைபெறுகிறது.
வாக்குச்சாவடி அலுவலர்கள் ஒவ்வொரு வீட்டிலும் பதிவு செய்யப்பட்ட அனைத்து வாக்காளர்களின் விபரங்க ளையும் சரிபார்ப்பர், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்பும் தகுதியுள்ள குடிமக்கள் அல்லது வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே இடம் பெற்றுள்ள பதிவுகளில் நீக்கம் திருத்தங்கள், முகவரி மாற்றம், ஆதார் எண் இணைத்தல், இடமாற்றம் செய்ய விரும்பும் வாக்காளர்கள் வீடு தேடி வரும் வாக்குச்சாவடி அலுவலர்கள் மூலம் செய்து கொள்ளலாம்.
1.10.2023 அன்று 18 வயது அடைய உள்ளவர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
ராணிப்பேட்டை மாவட்டத்திற்குட்பட்ட அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள மாவட்ட நிர்வாகிகள் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பின ர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மற்றும் முகவர்கள் ஆகியோர் வாக்காளர் சேர்த்தல் மற்றும் சரிபார்த்தல் பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ரூ.2 கோடியே 62 லட்சத்து 70ஆயிரத்து 209 வழங்க நீதிபதி உத்தரவிட்டார்
- வக்கீல்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் லோக் அதாலத் நேற்று நடைபெற்றது.
மக்கள் நீதிமன்றத்திற்கு சார்பு நீதிபதி ஜெயசூர்யா தலைமை தாங்கினார். வழக்கறிஞர்கள் சுஜாதா, கோபிநாத், அண்ணாதுரை ஆகியோர் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.
இதில் வாலாஜா அடுத்த ஒழுகூர் கிராமத்தை சேர்ந்த மோகன் (32), பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி சவுந்தரி (26). தம்பதியருக்கு 5வயதில் ஒரு மகள் உள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி 17-ந்தேதி மோகன் மாமண்டூர் - புதூர் சாலையில் வந்த போது எதிரே வந்த கார் மோதியதில் படுகாயமடைந்த மோகன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அவளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே மோகனின் மனைவி சவுந்தரி ராணிப்பேட்டை 2வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ரூ.1 கோடியே 9 லட்சத்து 95 ஆயிரம் இழப்பீட்டு கேட்டு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடாக ரூ.37 லட்சத்தை பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு வழங்க வேண்டுமென உத்தரவிட்டு, அதற்கான ஆணையையும் வழங்கினார். மனுதாரர் தரப்பில் வக்கீல்கள் பாண்டியன், விஜயகுமார் ஆகியோர் ஆஜராகினர்.
நேற்று நடந்த லோக் அதாலத் மூலம் 22 மோட்டார் வாகன விபத்து வழக்குகள் உள்பட மொத்தம் 31 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.2கோடியே 62 லட்சத்து 70ஆயிரத்து 209 வழங்க நீதிபதி உத்தரவிட்டார். இதில் வக்கீல்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- குடும்ப தகராரில் விபரீதம்
- போலீசார் விசாரணை
கலவை:
கலவை அடுத்த அருந்ததிபாளையம் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார்(28). இவரது மனைவி நித்யா. தம்பதியினருக்கு 2 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
நந்தகுமாருக்கு குடிப்பழக்கம் இருப்பதால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நந்தகுமார் நேற்று மீண்டும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார்.
அப்போது கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு நந்தகுமாரை, நித்யா திட்டியுள்ளார். இதனால் மணமடைந்த நந்தகுமார் வீட்டில் அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்த தகவல் அறிந்த கலவை போலீசார் விரைந்து சென்று, தீயணைப்புத்துறையினர் உதவியுடன் நந்தகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீடு, வீடாக சென்று தண்ணீரில் குளோரின் ஊற்றினர்
- தண்ணீர் தேங்கிய இடத்தில் பிளீச்சிங் பவுடர் தெளிக்கும் பணிகளில் ஈடுபட்டனர்
கலவை:
ராணிப்பேட்டை மாவட்டம், திமிரிஅடுத்த பட்டணம் ஊராட்சியில் சுகாதாரத்துறைசார்பில் டெங்கு கொசு ஒழிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
திமிரி சுகாதார மேற்பார்வையாளர்கள் பழனி, மணி, சுகாதார ஆய்வாளர் கவின் ஆகியோர் தலைமையிலான தூய்மை பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் தெருக்களில் கொசு மருந்து அடித்தல், வீடு, வீடாக சென்று தண்ணீரில் குளோரின் தெளித்தல், சாலைகளில் தண்ணீர் தேங்கிய இடத்தில் பிளீச்சிங் பவுடர் தெளித்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டனர்.
- அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்
- அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி ராணிப்பேட்டை நகராட்சி வாரச் சந்தை வளாகத்தில் தூய்மை இந்தியா திட்டம் நகரம் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.26 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள வளமீட்பு மையம், திடக்கழிவு மேலாண்மை குப்பைகள் தரம் பிரிக்கும் மையத்தில் தனியார் வங்கியின் சமுதாய பங்களிப்பு திட்ட நிதி மூலம் ரூ.24 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் அரவை எந்திரம் ஒப்படைப்பு, 15-வது நிதிக் குழு மான்யம் திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டை நகராட்சியில் குப்பைகளை எடுத்துச் செல்ல ரூ.6 லட்சம் மதிப்பிலான 3 பேட்டரி வாகனங்கள், ரூ.21லட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலான 3 இலகு ரக வாகனங்கள் என மொத்தம் ரூ.77லட்சத்து 90ஆயிரம் மதிப்பில் ெசய்யப்பட்டுள்ளது. இந்த திட்ட பணிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
இந்த திட்ட பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு வளமீட்பு மையத்தை திறந்து வைத்து, திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஜி.கே. உலகப்பள்ளி இயக்குநர் வினோத் காந்தி, நகரமன்றத் தலைவர் சுஜாதா, துணைத்தலைவர் ரமேஷ் கர்ணா, வாலாஜா ஒன்றிய குழு தலைவர் வெங்கட்ரமணன், நகராட்சி ஆணையர் விநாயகம், நகரமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தேர்தல் வாக்குறுகளை நிறைவேற்ற வலியுறுத்தல்
- கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில் தே.மு.தி.க. சார்பில், தேர்தல் வாக்குறுதிப்படி அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்க வேண்டும், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும், விளை நிலங்களை அழிக்கும் என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டிப்பது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முத்துக்கடை பஸ் நிலையம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் பி.ஆர்.மனோகர் தலைமை தாங்கி பேசினார்.
மாவட்ட அவை தலைவர் காசிநாதன், பொருளாளர் அசோகன், மாவட்ட துணை செயலாளர்கள் பிரபாகரன், தினேஷ்குமார் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில வர்த்தக அணி செயலாளர் சந்திரன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் போட்டனர்.
- 1008 பால்குட ஊர்வலம்
- ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
ராணிப்பேட்டை:
வாலாஜாவில் உள்ள படவேட்டம்மன் கோவிலில் 44 -வது ஆண்டு ஆடி திருவிழா கடந்த 21-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
விழாவை முன்னிட்டு படவேட்டம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு பூஜைகள்,அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்று வந்தது.
ஆடி திருவிழாவில் முக்கிய நிகழ்வான ஆடி 4-வது வெள்ளி பால்குட ஊர்வலம் இன்று நடைபெற்றது. பாலாற்றில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடங்களுடன் வாலாஜா நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.
பின்னர் கோவிலில் படவேட்டம்மனுக்கு பால் அபிஷேகமும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
- ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் பெற்ற நிலையமாக செயல்பட்டு வருகிறது
- மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அடுத்த வி.சி.மோட்டூரில் உள்ள ராணிடெக் பொது தோல் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில், 92 தோல் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் நவீன முறையில் சுத்திகரிக்கப்பட்டு தொழிற்சாலைகளின் மறு பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தப்படுகிறது.
மேலும் ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் பெற்ற சுத்திகரிப்பு நிலையமாக செயல்பட்டு வருகிறது.
நேற்று சுத்திகரிப்பு நிலையத்தில் கலெக்டர் வளர்மதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது தோல் கழிவு நீர் சுத்திகரிக்கபடும் முறைகளையும் கேட்டறிந்தார். பின்னர் கலெக்டர் வளர்மதி மரக்கன்றுகள் நட்டு வைத்தார்.
அப்போது ராணிடெக் மேலாண்மை இயக்குனர் ஜபருல்லா, தலைவர் ரமேஷ் பிரசாத், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், ராணிடெக் சுத்திகரிப்பு நிலைய பொது மேலாளர் சிவக்குமார், இயக்குனர்கள் சபிக் அஹமத், முபின் பாஷா, பெருமாள், அலுவலர் லோகநாதன், தாசில்தார் வெங்கடேசன் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
- ஒன்றிய குழு நிர்வாகத்தை கண்டித்து கோஷமிட்டனர்
அரக்கோணம்:
அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 42 ஊராட்சிகளில் உள்ள கிராமங்களில் பள்ளி கட்டிடம், சத்துணவு கூடம் புதியதாக கட்டுதல், பராமரிப்பு, புதிய சாலைகள் அமைப்பது, சிறு பாலங்கள் கட்டுதல், ஆரம்ப சுகாதார நிலையம் பராமரிப்பு, தெரு விளக்குகள், சுகாதார பணிகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகளுக்காக விடப்படும் டெண்டரில் முறைகேடுகள் நடப்பதாக கூறி பாட்டாளி மக்கள் கட்சியினர் அரக்கோணம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிழக்கு மாவட்ட செயலாளர் கீ.லோகநாதன் தலைமை தாங்கினார்.
இதில் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷமிட்டனர்.
- 11 பவுன் எடை கொண்டது
- ஜெயிலில் அடைத்தனர்
ராணிப்பேட்டை:
வாலாஜா அடுத்த டோல்கேட் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா, சப் -இன்ஸ்பெக்டர்கள் மகாராஜன், சீனிவாசன் மற்றும் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர் .
அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் திருப்பா ற்கடல் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் (வயது 34) என்பது தெரியவந்தது.
மேலும் கடந்த ஜூன் 12-ந் தேதி குடியாத்தம் அடுத்த மேல் பட்டியை சேர்ந்த சேகர் என்பவர் பஸ்சில் பயணம் செய்த போது அவரிடம் இருந்து 11 பவுன் எடை கொண்ட 43 தங்கத் தாலிகளை திருடியது தெரிந்தது.
ேமலும் உள்பட வாலாஜா போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பஸ்ஸில் பயணம் செய்த பல்வேறு பயணிகளிடம் நகைகள் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டுடார்.
இதை தொடர்ந்து வாலாஜா போலீசார் பாலமுருகனை கைது செய்து அவரிடம் இருந்து சுமார் 12 பவுன் நகைகளை பறிமுதல் செய்து அவரை சிறையில் அடைத்தனர்.






