படவேட்டம்மன் கோவிலில் ஆடி திருவிழா

1008 பால்குட ஊர்வலம் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
படவேட்டம்மன் கோவிலில் ஆடி திருவிழா
Published on

ராணிப்பேட்டை:

வாலாஜாவில் உள்ள படவேட்டம்மன் கோவிலில் 44 -வது ஆண்டு ஆடி திருவிழா கடந்த 21-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

விழாவை முன்னிட்டு படவேட்டம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு பூஜைகள்,அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்று வந்தது.

ஆடி திருவிழாவில் முக்கிய நிகழ்வான ஆடி 4-வது வெள்ளி பால்குட ஊர்வலம் இன்று நடைபெற்றது. பாலாற்றில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடங்களுடன் வாலாஜா நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

பின்னர் கோவிலில் படவேட்டம்மனுக்கு பால் அபிஷேகமும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com