என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • கலெக்டர் வழங்கினார்
    • மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடந்தது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டைமாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட் டம் நடைபெற்றது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி, பொதுமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற் றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார்.

    கூட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டு நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப் பட்டா, முதியோர் உதவித் தொகை, வேலைவாய்ப்பு, கடன்உதவி, இலவச வீடுகள், குடிநீர் வசதி வேண்டி மனு கொடுத்தனர். மொத்தம் 283 மனுக்களை பொது மக்களி டம் இருந்து பெற்று, சம்பந்தப் பட்ட துறை அலுவலர்களி டம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற் கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவ டிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

    மேலும், கலெக்டர் தனது விருப்ப நிதியில் இருந்து இருளர் இன மக்கள் 12 நபர்க ளுக்கு நலிந்தோர் நிதியுதவி, குடிசை வீடு மாற்று நிதியுதவி, சுய தொழில் நிதியுதவி, திரு நங்கை சுயதொழில் நிதியுதவி என ரூ.64 ஆயிரம் வழங்கி னார்.

    கூட்டத்தில் மாவட்ட வரு வாய் அலுவலர் சுரேஷ், கலெக்டரின் நேர்முக உதவி யாளர் (பொது) முரளி, சமூக பாதுகாப்புத் திட்ட துணை கலெக்டர் ஸ்ரீ வள்ளி, மாவட்ட வழங்கல் அலுவலர் சத்தியபிரசாத், நேர்முக உதவி யாளர் (நிலம்) கலைவாணி, கலால் உதவி ஆணையாளர் வரதராஜ். மாற்றுத்திறனாளி கள் நல அலுவலர் சரவணகு மார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • 2 நாட்கள் நடக்கிறது
    • கலெக்டர் தகவல்

    ராணிப்பேட்டை:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்புமுகாம்கள் நடைபெற உள்ளது. நாளை (புதன்கிழமை) அரக்கோணம் தாலுகா மின்னல் ஊராட்சி சாலை கைலாச ம் புரம் கிராமத்தில் உள்ள என்.எல்.பி.திருமண மண்டபத்திலும், 19-ந் தேதி ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கிலும் முகாம் நடைபெற உள்ளது.

    அடையாள அட்டை தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் தங்களது ரேஷன் அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற் றும் 5 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் முகாம்களில் நேரில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

    மேலும் யூ.டி.ஐ.டி. அட்டை மற்றும் மருத்துவ காப்பீடு திட்டத்தில் பதிவு செய்து கொள்ள விரும்புகிறவர்கள் மாற் றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்றுடன் கூடிய அடை யாள அட்டை நகல், 4 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை நகல் மற்றும் ரேஷன் அட்டை நகலுடன் சென்று பதிவு செய்து கொள்ளலாம். இந்த தகவலை கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

    • போலீசார் விசாரணை
    • தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை பஜார் தெருவை சேர்ந்தவர் உக்கம் சந்த். ஆற்காடு அடுத்த காவ னூரில் நகை அடகுக் கடை நடத்தி வருகிறார்.

    இவரது மகன் பியூஸ் (வயது 22). இவர் தனது தந்தைக்கு துணையாக கடையில் இருந்து வந்துள் ளார். இந்த நிலையில் நேற்று மதியம் பியூஸ் காவனூரில் இருந்து ராணிப்பேட்டைக்கு பைக்கில் சென்றார்.

    ஆற்காடு அண்ணா சாலை யில் வந்தபோது பின்னால் வந்த தனியார் பஸ் பியூஸ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கீழேவிழுந்த அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்த புகாரின் பேரில் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவம னைக்கு அனுப்பிவைத்தனர்.

    மேலும் சம்பவம் குறித்து போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்
    • மின்விசிறியில் பிணமாக தொங்கினார்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை வள்ளலார் நகர் ஈ.வே.ரா. தெருவை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது29) இவர் பி.காம் வரை படித்துவிட்டு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் சந்தோஷ் பார்த்து வந்த வேலையிலிருந்து விடுவிக்கப்பட்டதாக தெரிகிறது.

    இதனால் சந்தோஷ் வேலைக்கு செல்லாமல் வீட்டில் மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்க சென்றவர் நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் எழுந்திரிக்கவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் சந்தோஷ் அறைக்கு சென்று பார்த்த போது, அங்கு மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இது குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை போலீசார் விரைந்து சென்று சந்தோஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 7 வருடங்களாக பெண் பார்த்து வந்தனர்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை, சிப்காட் அடுத்த புளியந்தாங்கல் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வினோத் (வயது 32). இவர் நெல்லிக்குப்பம் சிப்காட் பேஸ்-3 உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 7 வருடங்களாக வினோத்தின் திருமணத்திற்கு பெண் பார்த்து வந்தனர். இதில் ஜாதகம் எதுவும் சரியாக அமையாததால் இதுவரை திருமணம் நடைபெறவில்லை என்ற விரக்தியில் இருந்தாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று வினோத் வீட்டில் தூக்கில் தொங்கினார். இதனை பார்த்த அவரது குடும்பத்தினர் வினோத்தை மீட்டு ராணிப்பேட்டை தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தீயணைப்பு துறையினர் பிணமாக மீட்டனர்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த சிப்கா ட் வ.உ.சி நகர் 4-வது தெரு வை சே ர்ந்தவர் அனீப்.

    இவரது மகன் சையத் (10). சிப்கா ட்டில் உள்ள அரசி னர் பள்ளி யில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.

    இந்த நிலையில் நேற்று மாலை தனது நண்ப ர்களுடன் மணியம்பட்டு பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றான்.

    அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி விட்டார். இதனைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சிப்காட் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் கிணற்றில் இறங்கி தேடினர்.

    பல மணி நேரம் தேடுதலுக்கு பின்னர் இன்று காலை சிறுவனை பிணமாக மீட்டனர். மேலும் சையது உடலை போலீ சார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாவட்ட செயலாளர் சு.ரவி.எம்.எல்.ஏ. பேச்சு
    • வருகிற 20-ந்தேதி மாநாடு நடக்கிறது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் அ.தி.மு.க வின் நகர, ஒன்றிய, பேரூர் செயலாள ர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் நந்தகோபால் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏக்கள் சம்பத், சீனிவாசன் ஆகியோர் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் கே.பி.சந்தோஷம் வரவேற்றார்.

    கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    வருகிற 20ம் தேதி மதுரையில் நடைபெறும் பொன்விழா எழுச்சி மாநா ட்டில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளில் ஒரு தொகுதிக்கு 2ஆயிரத்து500 பேர் என மொத்தம் 10ஆயிரம் பேர் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்பது உள்பட பல்வேறு ஆலோசனைகள் வழங்கி பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர் எஸ்.எம். சுகுமார் உள்பட மாவட்ட நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • சுதந்திர தினத்தை முன்னிட்டு நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    காவேரிப்பாக்கம்:

    நாடு முழுவதும் 76-வது சுதந்திர தின விழா வரும் 15-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.விழாவை முன்னிட்டு 'என் மண் என் தேசம்'என்னும் தலைப்பில் காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் ஒட்டுமொத்த தூய்மை பணி மேற்கொள்ளுதல் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் கடந்த 9-ந்தேதி முதல் வரும் 15-ந் தேதி மேற்கொள்ளப்பட உள்ளது.

    நிலையில் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஒட்டுமொத்த தூய்மை பணி,பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் லதா நரசிம்மன் தலைமை தாங்கினார்.செயல் அலுவலர் சரவணன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி துணைத் தலைவர் தீபிகா முருகன் வரவேற்றார்.

    இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பஜார் பகுதியில் உள்ள வியாபாரிகளிடம் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இதில் வார்டு உறுப்பினர்கள் நரசிம்மன், அருண்மொழி, மணிமேகலை, இந்திரா, பேரூராட்சி அலுவலர்கள், மகளிர் குழுவினர் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

    • அமைச்சர் ஆர்.காந்தி வேண்டுகோள்
    • 21-ந் தேதி வரை பணி நடைபெறுகிறது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சருமான ஆர்.காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

    இந்திய தேர்தல் ஆணையம் 1.1.2024-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.

    வீடு,வீடாக வாக்காள ர்களை சரிபார்க்கும் பணியில் அந்தந்த பகுதியில் உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கடந்த மாதம் 21-ந் தேதி முதல் ஈடுபட்டுள்ளனர் . வருகிற 21-ந் தேதி வரை இந்த பணி நடைபெறுகிறது.

    வாக்குச்சாவடி அலுவலர்கள் ஒவ்வொரு வீட்டிலும் பதிவு செய்யப்பட்ட அனைத்து வாக்காளர்களின் விபரங்க ளையும் சரிபார்ப்பர், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்பும் தகுதியுள்ள குடிமக்கள் அல்லது வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே இடம் பெற்றுள்ள பதிவுகளில் நீக்கம் திருத்தங்கள், முகவரி மாற்றம், ஆதார் எண் இணைத்தல், இடமாற்றம் செய்ய விரும்பும் வாக்காளர்கள் வீடு தேடி வரும் வாக்குச்சாவடி அலுவலர்கள் மூலம் செய்து கொள்ளலாம்.

    1.10.2023 அன்று 18 வயது அடைய உள்ளவர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.

    ராணிப்பேட்டை மாவட்டத்திற்குட்பட்ட அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள மாவட்ட நிர்வாகிகள் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பின ர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மற்றும் முகவர்கள் ஆகியோர் வாக்காளர் சேர்த்தல் மற்றும் சரிபார்த்தல் பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ரூ.2 கோடியே 62 லட்சத்து 70ஆயிரத்து 209 வழங்க நீதிபதி உத்தரவிட்டார்
    • வக்கீல்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் லோக் அதாலத் நேற்று நடைபெற்றது.

    மக்கள் நீதிமன்றத்திற்கு சார்பு நீதிபதி ஜெயசூர்யா தலைமை தாங்கினார். வழக்கறிஞர்கள் சுஜாதா, கோபிநாத், அண்ணாதுரை ஆகியோர் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

    இதில் வாலாஜா அடுத்த ஒழுகூர் கிராமத்தை சேர்ந்த மோகன் (32), பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி சவுந்தரி (26). தம்பதியருக்கு 5வயதில் ஒரு மகள் உள்ளனர்.

    இந்த நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி 17-ந்தேதி மோகன் மாமண்டூர் - புதூர் சாலையில் வந்த போது எதிரே வந்த கார் மோதியதில் படுகாயமடைந்த மோகன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து அவளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதற்கிடையே மோகனின் மனைவி சவுந்தரி ராணிப்பேட்டை 2வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ரூ.1 கோடியே 9 லட்சத்து 95 ஆயிரம் இழப்பீட்டு கேட்டு வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடாக ரூ.37 லட்சத்தை பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு வழங்க வேண்டுமென உத்தரவிட்டு, அதற்கான ஆணையையும் வழங்கினார். மனுதாரர் தரப்பில் வக்கீல்கள் பாண்டியன், விஜயகுமார் ஆகியோர் ஆஜராகினர்.

    நேற்று நடந்த லோக் அதாலத் மூலம் 22 மோட்டார் வாகன விபத்து வழக்குகள் உள்பட மொத்தம் 31 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.2கோடியே 62 லட்சத்து 70ஆயிரத்து 209 வழங்க நீதிபதி உத்தரவிட்டார். இதில் வக்கீல்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • குடும்ப தகராரில் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    கலவை:

    கலவை அடுத்த அருந்ததிபாளையம் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார்(28). இவரது மனைவி நித்யா. தம்பதியினருக்கு 2 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    நந்தகுமாருக்கு குடிப்பழக்கம் இருப்பதால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நந்தகுமார் நேற்று மீண்டும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார்.

    அப்போது கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு நந்தகுமாரை, நித்யா திட்டியுள்ளார். இதனால் மணமடைந்த நந்தகுமார் வீட்டில் அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்த தகவல் அறிந்த கலவை போலீசார் விரைந்து சென்று, தீயணைப்புத்துறையினர் உதவியுடன் நந்தகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீடு, வீடாக சென்று தண்ணீரில் குளோரின் ஊற்றினர்
    • தண்ணீர் தேங்கிய இடத்தில் பிளீச்சிங் பவுடர் தெளிக்கும் பணிகளில் ஈடுபட்டனர்

    கலவை:

    ராணிப்பேட்டை மாவட்டம், திமிரிஅடுத்த பட்டணம் ஊராட்சியில் சுகாதாரத்துறைசார்பில் டெங்கு கொசு ஒழிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

    திமிரி சுகாதார மேற்பார்வையாளர்கள் பழனி, மணி, சுகாதார ஆய்வாளர் கவின் ஆகியோர் தலைமையிலான தூய்மை பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் தெருக்களில் கொசு மருந்து அடித்தல், வீடு, வீடாக சென்று தண்ணீரில் குளோரின் தெளித்தல், சாலைகளில் தண்ணீர் தேங்கிய இடத்தில் பிளீச்சிங் பவுடர் தெளித்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டனர்.

    ×