என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க 3 நாட்கள் சிறப்பு முகாம்
    X

    மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க 3 நாட்கள் சிறப்பு முகாம்

    • நாளை வெள்ளிக்கிழமை முதல் 20-ந்தேதி வரை நடக்கிறது
    • கலெக்டர் தகவல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட பயனாளிகளை தேர்ந்தெடுக்க மனுக்கள் பதிவேற்றம் செய்யும் பணி கடந்த மாதம் 24-ந் தேதி முதல் 2 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது.

    மேலும் இந்த இரு கட்டங்களிலும் ஏதேனும் ஒரு காரணத்தால் பதிவேற்றம் செய்ய இயலாமல் விடுபட்ட விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யும் பணி நாளை வெள்ளிக்கிழமை முதல் 20-ந்தேதி வரை 3 நாட்களில் ஏற்கனவே மனுக்களை பெற்று பதிவேற்றம் நடைபெற்ற மையங்களிலேயே மீண்டும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

    மேலும் தற்போது முதல் அமைச்சரின் அறிவிப்பின்படி, வருவாய்த் துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர, அக்குடும்பத்தில் உள்ள தகுதி வாய்ந்த பெண்களும், இந்திராகாந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டம், முதல் அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெரும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவார்.

    மேற்கண்ட வகை குடும்பங்களில் உள்ள பெண்கள் ஏற்கனவே விண்ணப்பித்திருந்தால் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை.

    இதுவரை விண்ணப்பிக்காத பயனாளிகள் அனைவரும் இந்த சிறப்பு முகாம்களின் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    மேற்கண்ட தகவலை கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×