என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Won Best Conservation Project Award"

    • 80 வந்தே பாரத் ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டது
    • செயல் இயக்குனர் பேச்சு

    ராணிப்பேட்டை;

    ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பெல் நிறுவன செயல் இயக்குனர் ராஜீவ் சிங் கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை பார்வையிட்டார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    பெல் நிறுவனமானது கடந்த 2022-23-ம் ஆண்டு ரூ.23ஆயிரத்து 365 கோடியை வருவாயாக பெற்றுள்ளது. இது கடந்த நிதிஆண்டை விட 10 சதவீதம் கூடுதலாகும்.மேலும் வரிக்குப் பிந்திய ரூ.448 கோடியை லாபமாக ஈட்டி உள்ளது.

    இது அனைவரின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி.

    பெல் நிறுவனம் கடந்த 2022-23 ம் ஆண்டு 1,580 மெகாவாட் தேவையான மின் உற்பத்தி உபகரணங்களை தயாரித்து நிறுவியுள்ளது.

    மேலும் 2,498 மெகாவாட்டுக்கான சோலார் மின் உற்பத்தி உபகரணங்களையும் தயாரித்துள்ளது.

    இதில் பங்களாதேஷ் மைத்திரி பவர் ப்ராஜெக்ட் திட்டமும் அடங்கும். பெல் நிறுவனம் நடப்பு ஆண்டில் ரூ.23ஆயிரத்து 548 கோடிக்கான புதிய ஆர்டர்களை பெற்றுள்ளது. இதனுடன் சேர்த்து பெல் நிறுவனத்தின் தற்போதைய மொத்த ஆர்டர் கையிருப்பு ரூ.91ஆயிரத்து 336 கோடி ஆகும்.

    பெல் நிறுவனமானது சமீபத்தில் மிகப்பெரிய ரெயில்வே டெண்டர்களில் ஒன்றான 80 வந்தே பாரத் ெரயில் பெட்டிகள் தயாரிப்பிற்கான ஆர்டர்களை பெற்றுள்ளது. இந்த ஆர்டரானது பெல் நிறுவனத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கிய பயணத்திற்கு மிகவும் உந்துதலாக அமையும்.

    ராணிப்பேட்டை பெல் நிறுவனமானது பெல் கார்ப்பரேட் பாதுகாப்பு துறை ஏற்பாடு செய்த போட்டியில் 2022-23ம் ஆண்டு சிறந்த பாதுகாப்பு திட்ட விருதை வென்றுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×