search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராணிடெக் தோல் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கலெக்டர் ஆய்வு
    X

    ராணிடெக் தோல் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கலெக்டர் ஆய்வு

    • ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் பெற்ற நிலையமாக செயல்பட்டு வருகிறது
    • மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த வி.சி.மோட்டூரில் உள்ள ராணிடெக் பொது தோல் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில், 92 தோல் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் நவீன முறையில் சுத்திகரிக்கப்பட்டு தொழிற்சாலைகளின் மறு பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தப்படுகிறது.

    மேலும் ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் பெற்ற சுத்திகரிப்பு நிலையமாக செயல்பட்டு வருகிறது.

    நேற்று சுத்திகரிப்பு நிலையத்தில் கலெக்டர் வளர்மதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது தோல் கழிவு நீர் சுத்திகரிக்கபடும் முறைகளையும் கேட்டறிந்தார். பின்னர் கலெக்டர் வளர்மதி மரக்கன்றுகள் நட்டு வைத்தார்.

    அப்போது ராணிடெக் மேலாண்மை இயக்குனர் ஜபருல்லா, தலைவர் ரமேஷ் பிரசாத், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், ராணிடெக் சுத்திகரிப்பு நிலைய பொது மேலாளர் சிவக்குமார், இயக்குனர்கள் சபிக் அஹமத், முபின் பாஷா, பெருமாள், அலுவலர் லோகநாதன், தாசில்தார் வெங்கடேசன் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×