என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Demonstration by BMC"

    • 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
    • ஒன்றிய குழு நிர்வாகத்தை கண்டித்து கோஷமிட்டனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 42 ஊராட்சிகளில் உள்ள கிராமங்களில் பள்ளி கட்டிடம், சத்துணவு கூடம் புதியதாக கட்டுதல், பராமரிப்பு, புதிய சாலைகள் அமைப்பது, சிறு பாலங்கள் கட்டுதல், ஆரம்ப சுகாதார நிலையம் பராமரிப்பு, தெரு விளக்குகள், சுகாதார பணிகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகளுக்காக விடப்படும் டெண்டரில் முறைகேடுகள் நடப்பதாக கூறி பாட்டாளி மக்கள் கட்சியினர் அரக்கோணம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிழக்கு மாவட்ட செயலாளர் கீ.லோகநாதன் தலைமை தாங்கினார்.

    இதில் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷமிட்டனர்.

    ×