என் மலர்
ராணிப்பேட்டை
நெமிலி அருகே கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய வாலிபரை பிடிக்க போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி அடுத்த உத்திரம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ்.இவரது மகன் நித்திஷ் (23). இவர் கேட்டரிங் படிப்பு முடித்துவிட்டு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
இவரும் அதே பகுதியை சேர்ந்த காவேரிப்பாக்கம் தனியார் கல்லூரியில் 3 ம் ஆண்டு படித்து வரும் மாணவியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அடிக்கடி செல்போனில் பேசியதாக தெரிகிறது.
கடந்த சில மாதங்களாக கல்லூரி மாணவி நித்திஷிடம் பேசுவதை நிறுத்தி உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மாணவியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசிய நித்திஷ் ஊரின் எல்லையில் உள்ள நிலத்தின் அருகே வரவில்லை என்றால் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன மாணவி அந்த இடத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது தன்னை மீண்டும் காதலிக்க வேண்டும்.இல்லையென்றால் நீ இந்த இடத்தைவிட்டு போகமுடியாது என்று கூறியுள்ளார்.
இதனால் பதற்றமான மாணவி அங்கிருந்து வீட்டிற்கு செல்ல முயற்சித் துள்ளார்.அப்போது நித்திஷ் தான் மறைத்து வைத்திருந்த பேனா கத்தியால் மாணவியின் கழுத்து, முதுகு, கை உள்ளிட்ட இடங்களில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதில் படுகாயமடைந்த மாணவியை அங்கிருந் தவர்கள் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த காவேரிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்ற நித்திஷை தேடி வருகின்றனர்.
சோளிங்கர் அருகே குளத்தில் மிதந்த ஆண் பிணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோளிங்கர்:
சோளிங்கர் அரக்கோணம் சாலையில் அப்பங்காரன் குளக்கரை அமைந்துள்ளது. இங்கு காலை மாலை நேரங்களில் பொதுமக்கள் நடை பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம்.
அதேபோல் இன்று காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்கள் அப்பங்காரன் குளக்கரையில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மிதந்து கிடப்பதாக சோளிங்கர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் குளத்தில் மிதந்து கிடந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்தவர் யார் எதற்காக இங்கு வந்தார். தவறி விழுந்து இறந்தாரா? இல்லை தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோளிங்கர் அடுத்த கொளத்தூர் கிராமத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்றம், வாரச்சந்தையை முனிரத்தினம் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
சோளிங்கர்:
சோளிங்கர் அடுத்த கொளத்தேரி ஊராட்சியில் ஊராட்சி மன்றக் கட்டிடம், வாரச்சந்தை திறப்பு விழா மற்றும் செடி நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் மணிபாரதி என்கின்ற சுப்பிரமணி தலைமை தாங்கினார், ஒன்றிய குழுத்தலைவர் கலைக்குமார், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றியக் குழு உறுப்பினர் முனியம்மாள் பிச்சாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கு சோளிங்கர் ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தை, ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.
அதனைதொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு காய்கறி வழங்கி வாரச்சந்தையை தொடங்கி வைத்தார். பின்னர் பல வகை மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்.
அப்போது சோளிங்கர் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி அலுவலர் அன்பரசி, ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அரக்கோணத்தில் பஸ் மோதி திருத்தணி போலீஸ்காரர் பலியான சம்பவம் தொடர்பாக பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
அரக்கோணம்:
அரக்கோணம், ஜோதி நகர், பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 39). இவர் திருத்தணி போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி சுஜாதா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இன்று காலை செந்தில்குமார் கடையில் பொருட்கள் வாங்குவதற்காக பைக்கில் அரக்கோணம்-திருப்பதி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த தனியார் கம்பெனி பஸ் செந்தில் குமார் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட செந்தில்குமார் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செந்தில்குமார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்துக்கு காரணமான பஸ் டிரைவர் அரக்கோணம் குருராஜா பேட்டையை சேர்ந்த விஜயகுமாரை கைது செய்தனர்.
அரக்கோணம், ஜோதி நகர், பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 39). இவர் திருத்தணி போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி சுஜாதா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இன்று காலை செந்தில்குமார் கடையில் பொருட்கள் வாங்குவதற்காக பைக்கில் அரக்கோணம்-திருப்பதி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த தனியார் கம்பெனி பஸ் செந்தில் குமார் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட செந்தில்குமார் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செந்தில்குமார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்துக்கு காரணமான பஸ் டிரைவர் அரக்கோணம் குருராஜா பேட்டையை சேர்ந்த விஜயகுமாரை கைது செய்தனர்.
ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையத்தில் கள்ள சாராய தீமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை யின் மூலம் மதுபானம் மற்றும் கள்ள சாராயத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மேலும் மதுபானம் மற்றும் கள்ள சாராயம் குடிப்பதனால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொது மக்களுக்கு கலெக்டர் வழங்கினார்.
மதுபானம் மற்றும் கள்ள சாராயம் குடிப்பதினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பாடல் குறுந்தகட்டை வெளியிட்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் கலைக் குழுக்கள், பள்ளிக்கல்வித்துறை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, செய்தி மக்கள் தொடர்பு துறை, மருத்துவம் மற்றும் சுகாதார துறை (போதை மற்றும் மறுவாழ்வு) ஆகிய துறைகளின் மூலமாக கள்ளச்சாரத்திற்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முகமது அஸ்லம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், உதவி ஆணையர் (கலால்) சத்திய பிரசாத், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சேகர், கலால் தாசில்தார் நடராஜன், வாலாஜா தாசில்தார் ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
காவேரிப்பாக்கம் அருகே காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியின் கழுத்தை அறுத்த வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 21 வயது மாணவி. இவர் காவேரிப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் மாணவி வீட்டின் அருகே உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த நிதிஷ்குமார் (23) கேட்டரிங் படித்துள்ளார். இவர் சாமி கும்பிட சென்ற மாணவியை பின் தொடர்ந்து சென்று காதலிக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
ஆனால் கல்லூரி மாணவி காதலை ஏற்க மறுத்தார். இதில் ஆவேசம் அடைந்த நிதிஷ்குமார் தான் கையில் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால் மாணவியின் கழுத்தை அறுத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இதில் மாணவி ரத்த வெள்ளத்தில் மயங்கி கிழே விழுந்தார்.
இச்சம்பவத்தை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் மாணவியை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய வாலிபரை தேடி வருகின்றனர்.
நாட்டறம்பள்ளி அருகே மகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை செய்துக்கொண்டார்.
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த புதுப்பேட்டை அருகே உள்ள அக்ராவரம் ஏழுமலையான் வட்டம் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 35) எலக்ட்ரீசியன்.
இவருக்கும் மதுரை மாவட்டம் புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த வள்ளியம்மாள் (26) என்பவருக்கும் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவகளது மகள்கள் சமந்தா (5) மற்றும் முத்தரிசி (2).
இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் நேற்று முன்தினம் இரவு குடும்ப தகராறு ஏற்பட்டது. அப்போது வள்ளியம்மாள் தன் தாய் வீட்டிற்கு அனுப்பி வைக்குமாறு தனது கணவரிடம் கேட்டுயுள்ளார்.
இதற்கு அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. அன்று இரவு வள்ளியம்மன் மற்றும் அவரது மகள் முத்தரசி இருவரும் ஒரு அறையிலும் அன்பழகன் மற்றும் மற்றொரு மகள் சமந்தா மற்றொரு அறையிலும் படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை வள்ளியம்மாள் வீட்டு வாசலில் தெளிக்கும் சாணி பசுடரை இவரது இளைய மகள் முத்தரசிக்கு கொடுத்து குடிக்க வைத்து உள்ளார். அதன் பிறகு தானும் கலந்து குடித்தார்.
இதனால் இருவரும் வீட்டில் வாந்தி எடுத்த நிலையில் மயங்கி விழுந்தனர். பின்னர் அன்பழகன் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இருவரும் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில் வள்ளியம்மாள் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார் முத்தரசி தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி சப் இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பனப்பாக்கம் பேரூராட்சிக்கு கவிதா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நெமிலி:
ராணிப் பேட்டை மாவட்டம் பனப் பாக்கம் பேரூராட்சி தலைவர் தேர்தலில் தி.மு க வேட்பாளர் திருமதி. சீ.கவிதா சீனிவாசன் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டார்.
அவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை.
அரக்கோணம் நகராட்சித் தலைவர் தேர்தலில் தி.மு.க.வெற்றி பெற்றது.
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அரக்கோணம் நகராட்சியில் வெற்றிபெற்ற 36 வார்டு உறுப்பினர்கள் கடந்த 2-ம் தேதி பதவியேற்றனர்.
இதனையடுத்து நகரமன்ற தலைவர் தேர்ந்தேடுப்பதற்காக மறைமுக தேர்தல் இன்று காலை அரக்கோணம் நகராட்சி நகர மன்ற கூடத்தில் நடைபெற்றது.
இதில் 36 வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நகர மன்ற தலைவர் பதிவிக்கு தி.மு.க சார்பில் லட்சுமி பாரியும், அ.தி.மு.க சார்பில் நித்யா ஷியாம்குமாரும் போட்டியிட்டனர்.
இதில் தி.மு.க.வை சேர்ந்த லட்சுமி பாரி 27 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அவர் நகராட்சி தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.அவரை எதிர்த்துப் போட்டியிட்ட நித்யா 9 வாக்குகள் பெற்றிருந்தார்.
ஆற்காடு நகர மன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது.
ஆற்காடு:
ஆற்காடு நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன நடந்துமுடிந்த நகர மன்ற தேர்தலில் தி.மு.க 21 வார்டுகளிலும், அ.தி.மு.க 4, பா.ம.க 3, விடுதலை சிறுத்தைகள் கட்சி 3 வார்டுகளில் வெற்றி பெற்றன.
திமுக தலைமை நகரமன்ற தலைவர் பதவிக்கு ஜேபி பென்ஸ் பாண்டியனை அறிவித்தது.நகரமன்ற பதவிக்கான மறைமுக தேர்தல் இன்று காலை நடந்தது.
இதில் நகர மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தேவி பெண்ஸ் பாண்டியன் 26 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.திமு.க வேட்பாளர் கீதா சுந்தர் 4 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
கலவை பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் 8 ஓட்டுகள் பெற்று அ.தி.மு.க. வேட்பாளர் கலா சதிஷ் வெற்றி பெற்றார்.
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பேரூராட்சி தேர்தல் சமீபத்தில் நடந்தது. 15 வார்டுகளில் அ.தி.மு.க.-8, தி.மு.க.-7 இடங்களையும் கைப்பற்றியது.
பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று நடந்தது. அ.தி.மு.க. சார்பில் கலா சதீஷ், தி.மு.க. சார்பில் பாபிபரஞ்ஜோதி போட்டியிட்டனர்.
இன்று காலை மறைமுக தேர்தல் நடந்தது. இதில் 8 ஓட்டுகள் பெற்று அ.தி.மு.க. வேட்பாளர் கலா சதிஷ் வெற்றி பெற்றார்.
நகரசபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கலாசதீசுக்கு கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பேரூராட்சி தேர்தல் சமீபத்தில் நடந்தது. 15 வார்டுகளில் அ.தி.மு.க.-8, தி.மு.க.-7 இடங்களையும் கைப்பற்றியது.
பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று நடந்தது. அ.தி.மு.க. சார்பில் கலா சதீஷ், தி.மு.க. சார்பில் பாபிபரஞ்ஜோதி போட்டியிட்டனர்.
இன்று காலை மறைமுக தேர்தல் நடந்தது. இதில் 8 ஓட்டுகள் பெற்று அ.தி.மு.க. வேட்பாளர் கலா சதிஷ் வெற்றி பெற்றார்.
நகரசபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கலாசதீசுக்கு கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர.
ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்ட நகராட்சி, பேரூராட்சி தலைவருக்கான தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை:
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டநகராட்சி, பேரூராட்சி தலைவருக்கான தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விவரம் வருமாறு:-
ராணிப்பேட்டை
அரக்கோணம்-லட்சுமி பா£¤, ஆற்காடு-எஸ்.ஆர்.பி.தேவி, மேல்விஷாரம்-எஸ்.டி. முகமது அமீன், ராணிப் பேட்டை- சுஜாதா, வாலாஜா பேட்டை-அரணி தில்லை துளசி, சோளிங்கர் -தமிழ்ச்செல்வி
வேலூர்
குடியாத்தம் -சவுந்தரராஜன், பேரணாம்பட்டு - பிரேமா வெற்றிவேல்
திருப்பத்தூர்
ஆம்பூர் -ஏஜியாஸ் அகமத், திருப்பத்தூர் -சங்கீதா வெங்கடேசன், வாணியம்பாடி -உமா பாய், ஜோலார்பேட்டை -காவியா
திருவண்ணாமலை
ஆரணி -ஏ.சி. மணி, திருவத்திபுரம் (செய்யாறு) -விசுவநாதன், வந்தவாசி -ஜலால், திருவண்ணாமலை -நிர்மலா,
பேரூராட்சி தலைவர் வேட்பாளர்கள்
அம்மூர்-ஏ.கே. சுந்தரமூர்த்தி, கலவை-பாபி பரஞ்சோதி, காவோ¤ப்பாக்கம்-லதா நரசிம்மன், நெமிலி-ரேணுகா சரவணன், பனப்பாக்கம்-கவிதா சீனிவாசன், தக்கோலம் -நகராஜன், திமி£¤-மாலா இளஞ்செழியன், விளாப்பாக்கம்- டி.வி. மனோகரன்.
வேலூர்
ஒடுகத்தூர்- சத்தியவதி, பள்ளிகொண்டா -சுபப்பி£¤யா குமரன், திருவலம் -சாமுண்டீஸ்வா¤.
திருப்பத்தூர்
ஆலங்காயம் -தமிழரசி, உதயேந்திரம் -பூசாராணி செல்வராஜ்,
திருவண்ணாமலைம்
செங்கம் -சாதிக் பாஷா
களம்பூர் -கே.டி.ஆர். பழனி
சேத்துப்பட்டு -சுதா முருகன்
போளூர் -ராணி சண்முகம்
பெரணமல்லூர் -வேணி ஏழுமலை
தேசூர் -ராஜா ஜெகவீரபாண்டியன்,
கண்ணமங்கலம் -மகாலட்சுமி கோவர்தனன்,
வேட்டவலம் -கவு£¤ நடராஜன்
கீழ்பென்னாத்தூர் -சரவணன்
புதுப்பாளையம் - -செல்வபாரதி மனோஜ்குமார்






