என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
நெமிலி அருகே கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய வாலிபரை பிடிக்க தீவிரம்
நெமிலி அருகே கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய வாலிபரை பிடிக்க போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி அடுத்த உத்திரம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ்.இவரது மகன் நித்திஷ் (23). இவர் கேட்டரிங் படிப்பு முடித்துவிட்டு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
இவரும் அதே பகுதியை சேர்ந்த காவேரிப்பாக்கம் தனியார் கல்லூரியில் 3 ம் ஆண்டு படித்து வரும் மாணவியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அடிக்கடி செல்போனில் பேசியதாக தெரிகிறது.
கடந்த சில மாதங்களாக கல்லூரி மாணவி நித்திஷிடம் பேசுவதை நிறுத்தி உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மாணவியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசிய நித்திஷ் ஊரின் எல்லையில் உள்ள நிலத்தின் அருகே வரவில்லை என்றால் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன மாணவி அந்த இடத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது தன்னை மீண்டும் காதலிக்க வேண்டும்.இல்லையென்றால் நீ இந்த இடத்தைவிட்டு போகமுடியாது என்று கூறியுள்ளார்.
இதனால் பதற்றமான மாணவி அங்கிருந்து வீட்டிற்கு செல்ல முயற்சித் துள்ளார்.அப்போது நித்திஷ் தான் மறைத்து வைத்திருந்த பேனா கத்தியால் மாணவியின் கழுத்து, முதுகு, கை உள்ளிட்ட இடங்களில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதில் படுகாயமடைந்த மாணவியை அங்கிருந் தவர்கள் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த காவேரிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்ற நித்திஷை தேடி வருகின்றனர்.
Next Story






