என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியின் கழுத்தை அறுத்த வாலிபர்
காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியின் கழுத்தை அறுத்த வாலிபர்
காவேரிப்பாக்கம் அருகே காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியின் கழுத்தை அறுத்த வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 21 வயது மாணவி. இவர் காவேரிப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் மாணவி வீட்டின் அருகே உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த நிதிஷ்குமார் (23) கேட்டரிங் படித்துள்ளார். இவர் சாமி கும்பிட சென்ற மாணவியை பின் தொடர்ந்து சென்று காதலிக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
ஆனால் கல்லூரி மாணவி காதலை ஏற்க மறுத்தார். இதில் ஆவேசம் அடைந்த நிதிஷ்குமார் தான் கையில் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால் மாணவியின் கழுத்தை அறுத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இதில் மாணவி ரத்த வெள்ளத்தில் மயங்கி கிழே விழுந்தார்.
இச்சம்பவத்தை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் மாணவியை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய வாலிபரை தேடி வருகின்றனர்.
Next Story






