என் மலர்
உள்ளூர் செய்திகள்

சோளிங்கர் அப்பங்காரன் குளத்தில் ஆண் பிணமாக மிதப்பதை தீயணைப்புத்துறையினர் வெளியே கொண்டு வரும் காட்சி.
சோளிங்கர் அருகே குளத்தில் மிதந்த ஆண் பிணம்
சோளிங்கர் அருகே குளத்தில் மிதந்த ஆண் பிணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோளிங்கர்:
சோளிங்கர் அரக்கோணம் சாலையில் அப்பங்காரன் குளக்கரை அமைந்துள்ளது. இங்கு காலை மாலை நேரங்களில் பொதுமக்கள் நடை பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம்.
அதேபோல் இன்று காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்கள் அப்பங்காரன் குளக்கரையில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மிதந்து கிடப்பதாக சோளிங்கர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் குளத்தில் மிதந்து கிடந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்தவர் யார் எதற்காக இங்கு வந்தார். தவறி விழுந்து இறந்தாரா? இல்லை தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






