என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராணிப்பேட்டையில் கள்ள சாராய தீமைகள் குறித்த விழிப்புணர்வு
    X
    ராணிப்பேட்டையில் கள்ள சாராய தீமைகள் குறித்த விழிப்புணர்வு

    ராணிப்பேட்டையில் கள்ள சாராய தீமைகள் குறித்த விழிப்புணர்வு

    ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையத்தில் கள்ள சாராய தீமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை யின் மூலம் மதுபானம் மற்றும் கள்ள சாராயத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. 

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மேலும் மதுபானம் மற்றும் கள்ள சாராயம் குடிப்பதனால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொது மக்களுக்கு கலெக்டர் வழங்கினார். 

    மதுபானம் மற்றும் கள்ள சாராயம் குடிப்பதினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பாடல் குறுந்தகட்டை வெளியிட்டார். 

    ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் கலைக் குழுக்கள், பள்ளிக்கல்வித்துறை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, செய்தி மக்கள் தொடர்பு துறை, மருத்துவம் மற்றும் சுகாதார துறை (போதை மற்றும் மறுவாழ்வு) ஆகிய துறைகளின் மூலமாக கள்ளச்சாரத்திற்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார். 

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முகமது அஸ்லம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், உதவி ஆணையர் (கலால்) சத்திய பிரசாத், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சேகர், கலால் தாசில்தார் நடராஜன், வாலாஜா தாசில்தார் ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×