என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    அரக்கோணத்தில் பஸ் மோதி திருத்தணி போலீஸ்காரர் பலி

    அரக்கோணத்தில் பஸ் மோதி திருத்தணி போலீஸ்காரர் பலியான சம்பவம் தொடர்பாக பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    அரக்கோணம்:

    அரக்கோணம், ஜோதி நகர், பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 39). இவர் திருத்தணி போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி சுஜாதா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    இன்று காலை செந்தில்குமார் கடையில் பொருட்கள் வாங்குவதற்காக பைக்கில் அரக்கோணம்-திருப்பதி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த தனியார் கம்பெனி பஸ் செந்தில் குமார் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட செந்தில்குமார் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செந்தில்குமார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்துக்கு காரணமான பஸ் டிரைவர் அரக்கோணம் குருராஜா பேட்டையை சேர்ந்த விஜயகுமாரை கைது செய்தனர்.

    Next Story
    ×