என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • 50-க்கும் மேற்பட்டோர் கைது
    • எடப்பாடி பழனிசாமி உள்பட அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து நடந்தது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை முத்துக்கடையில் ராணிப்பேட்டை தொகுதி அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். முன்னாள் முதலமைச்சர் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் எம்.எல்.ஏக்களை கைது செய்ததை கண்டித்தும், உடனடியாக அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், திமுக அரசை கண்டித்து ராணிப்பேட்டை நகர செயலாளர் கே.பி.சந்தோஷம் தலைமையில் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டம் நடத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதில் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் ஏழுமலை, மாவட்ட பொருளாளர் ஷாபூதீன், மாவட்ட ஜெ பேரவை செயலாளர் பூண்டி பிரகாஷ், மாவட்ட ஜெ பேரவை பொருளாளர் எஸ்.எம்.சுகுமார், நகர செயலாளர்கள் மோகன், இப்ராஹீம் கலிலுல்லா, ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சாலை மறியலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை ராணிப்பேட்டை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • 42 ஏரிகள் 25 சதவீதம் அளவே நிறைந்துள்ளது
    • கால்வாய்கள் தூர்வார விவசாயிகள் வலியுறுத்தல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட் டத்தில் தென்மேற்கு பருவ மழை காலத்தில் வழக்கத் துக்கு அதிகமாக இந்த ஆண்டு மழைப்பொழிவு இருந்தது. மேலும், பாலாறு, பொன்னையாற்றில் ஓராண் டாக தண்ணீர் ஓடிய வண்ணம் உள்ளது.

    இந்நிலையில் மாவட்டத் தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 369 ஏரிகளில் 99 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மேலும் 75 சதவீதத்துக்கும் மேல் 4 ஏரிகளும், 50 சதவீ தத்துக்கு மேல் 69 ஏரிகளும், 25 சதவீதத்துக்கும் மேல் 155 ஏரிகளும் நிரம்பியுள்ளன. 42 ஏரிகள் 25 சதவீதம் அளவே நிறைந்துள்ளது.

    ராணிப்பேட்டை மாவட் டத்தில் உள்ள நீர்நிலைகள் அனைத்துக்கும் சேர்த்து 8.52. டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்க முடியும். இப்போது 5.43 டி.எம்.சி.தண்ணீர் சேமிப் பில் உள்ளது.

    இந்நிலையில் பல ஏரிகள் நிரம்பாததற்கு காரணம் ஏரி களுக்கு செல்லும் கால்வாய்கள் தூர் நிறைந்துள்ளதும், ஆக்கிரமிப்புகளுமே ஆகும் என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

    • ராணிப்பேட்டையில் போக்குவரத்து மாற்றம்
    • ஆற்காட்டிற்கு பஸ்கள் இயக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் சீக்க ராஜபுரம் அருகே, சென்னை - மும்பை தேசிய நெடுஞ்சா லையில் அமைந்துள்ள ெரயில் பாதையை அகலப்படுத்தி, உறு திப்படுத்தும் பணி தொடங்கவுள்ளது. இதற்காக இப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, பெங்களூர், சித்தூர், காட்பாடி மார்க்கத்தில் இருந்து வரும் வாக னங்கள் 'பெல்' சாலையில் திரும்பி செல்ல வேண்டும். அங்கிருந்து மலைமேடு ெரயில்வே மேம்பாலம் வழியாக சென்று அக்ராவரத்தில் பொன்னை சாலையில் நுழைய வேண்டும். அங்கிருந்து இ.எஸ்.ஐ.ஆஸ்பத்திரி அருகே சென்னை - மும்பை சாலையை அடையலாம். அங்கிருந்து சென்னை செல்லலாம்.

    இதேபோல் சென்னை மார்க்கத்தில் இருந்து ராணிப்பேட்டை வழியாக வரும் வாகனங்கள் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி அருகில் பொன்னை சாலைக்குள் திரும்ப வேண்டும். அங்கிருந்து அக்ராவரத்தில் 'பெல்' சாலைக்குள் நுழைந்து ெரயில்வே மேம்பாலம் வழியாக சென்று சீக்கராஜபுரம் அருகே சென்னை - மும்பை சாலையில் இணையலாம். அங்கிருந்து காட்பாடி, சித்தூர், பெங்க ளூருக்கு செல்லலாம்.

    இந்த போக்குவரத்து மாற்றத்தினால் திருவலம், காட்பாடி மார்க்கத்தில் இருந்து சிப்காட், புளியந்தாங்கல் மற்றும் அப்ப குதியில் உள்ள பள்ளிகள், தொழிற்சா லைகளுக்கு வருபவர்கள் பெரும் சிரமத் துக்குள்ளாவார்கள். அவர்கள் கிட்டதட்ட 5 கிமீ சுற்றி வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் காட்பாடி, சித்தூர் மார்க்கமாக செல்லவேண்டிய புளியந்தாங்கல், நரசிங்கபுரம் பகுதியில் வசிப்போரும், சிப்காட் குடியிருப்பு பகு தியில் வசிப்போரும் பஸ் போக்குவரத்து இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே ஆற்காடு, வாலாஜா, ராணிப் பேட்டை மார்க்கத்தில் இருந்து சீக்கராஜ புரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வரையிலும், அங்கிருந்து ராணிப்பேட்டை, வாலாஜா, ஆற்காடுக்கும் டவுன் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 450 பேர் பயனடைந்தனர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    நெமிலி:

    நெமிலி அடுத்த சேந்தமங்கலம் ஊராட்சியில் குமரன் அக்ரோ சர்வீஸ் மையம் உள்ளது.

    இதில் ராணிப்பேட்டை மாவட்டத்தின் விவசாய உர விற்பனையாளர்கள் கலந்து கொண்டு சேந்தமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 450 மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம், பேனா, பென்சில் ஆகியவை வழங்கினர்.

    இதில் பாபு ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டு வழங்கினர்.

    • பலமுறை அறிவுறுத்தியும் நடவடிக்கை இல்லை
    • சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த கன்னிகாபுரம் கிராமத்தில் சின்ன தெரு பகுதியில் 30 வருடங்களுக்கு முன்பு மின்கம்பம் ஒன்று அமைத்தனர்.

    இப்போது அந்த மின்கம்பம் பழுதாகி துருப்பிடித்து ஆபத்தான நிலையில் உள்ளது.

    அதை காங்கிரட் மின்கம்பமாக மாற்ற பலமுறை அறிவுறுத்தியும் மின்சார வாரியம் கண்டு கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    இதனால் சூறாவளி காற்றுடன் மழை பெய்யும் போது பெரிய விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

    எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் கம்பத்தை சரி செய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • குடிநீரின் தன்மை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்
    • 13-வகையான ஆய்வுகள் மேற்கொள்வதாக தகவல்

    நெமிலி:

    காவேரிப்பாக்கம் அடுத்த மாமண்டூர் ஊராட்சி, களத்தூர் ஊராட்சி, ஆலப்பாக்கம் ஊராட்சி ஆகிய ஊராட்சி களில் ஜல் ஜீவன் மிஷன் குறித்து, மத்திய குழுவின் சிறப்பு பொறியாளர் சுபாஷ்குமார் சவுத்திரி தலைமையில் அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது இத்திட்டத்தின் வாயிலாக அனைத்து குடும்பங்களும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதா? குடிநீரின் தன்மை, மற்றும் மாதம் தோறும் குடிநீர் ஆய்வு செய்யப்படுகிறா? உள்ளிட்ட விளக்கங்களை அதிகாரி களிடம் கேட்டறிந்தனர்.

    இதனையடுத்து டேங்க் ஆப்ரேட்டர், மகளிர் குழு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உள்ளிட்டவர்களிடமும் இக்குழுவினர் விளக்கங்கள் கேட்டறிந்தனர்.

    அப்போது அவர்கள் தண்ணீரின் காரத்தன்மை, கடினதன்மை, குளோரைடு, உள்ளிட்ட 13-வகையான ஆய்வுகள் மேற்கொள்வ தாக தெரிவித்தனர்.

    பின்னர் இக்குழுவினர் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் குடிநீர் இணைப்பு வழங்கி உள்ள வீடுகளில் தண்ணீர் வருகிறதா? என்பதையும் ஆய்வு செய்து பயனாளிகளிடம் குறைகள் உள்ளதா? எனவும் கேட்டறிந்தனர்.

    அப்போது வேதியியல் நிபுணர் முரளி, திட்ட இயக்குநர் லோகநாயகி, உதவி திட்ட அலுவலர் கவுரி வட்டார வளர்ச்சி அலுவலர் தண்டாயுதபாணி, ஒன்றிய பொறியாளர் ஏகநாதன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சுலோச்சனா பிரகாஷ், மரியப்பிரகாசி கிருஷ்ணன், சாந்தி சுப்பிரமணி, பணி மேற்பார்வையாளர் டீகாராமன் ஊராட்சி செயலர்கள் சங்கர், மகேந்தி ரன், அருள்பாண்டியன், வில்விஜியன் உட்பட பலர் உடனிருந்தனர்.

    இதில் அனைவருக்கும் தரமான குடிநீர் கிடைக்க வேண்டும் என்பது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

    • வாலாஜா தன்வந்திரி பீடத்தில் நடந்தது
    • நீண்ட ஆயுள், ஆரோக்யம் வேண்டி பிரார்த்தனை

    வாலாஜா:

    வாலாஜாபேட்டை, ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் அஷ்டமியை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் உள்ள அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதண பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீஷ்ண பைரவர் மற்றும் சம்ஹார பைரவருடன் கூடிய ஸ்ரீ அஷ்ட கால மகா பைரவர் மற்றும் ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் என மொத்தமுள்ள 10 பைரவர்களுக்கும் சிறப்பு ஹோமங்கள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றது.

    சிறப்பு ஹோமங்கள் மற்றும் பூஜைகளில் உலக நலன் மற்றும் சகல தோஷங்கள் விலகிட, நீண்ட ஆயுள், ஆரோக்யம் வேண்டி பிரார்த்தனை செய்யப்பட்டது. 

    • வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் அரிஷ்குமார் (வயது23). இவர், ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பைக் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் வசூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (19) மற்றும் முருகன் (33) ஆகியோர் சிப்காட் பகுதியில் மோட்டார் சைக்கிள் பழுதாகி உள்ளதாகவும், அதை சரி செய்ய வேண்டும் என்றும் அரிஷ்குமாரை அழைத்துள்ளார்கள்.

    பின்னர் ஏற்பட்ட தகராறில் சீனிவாசன், முருகன் ஆகிய இருவரும் சேர்ந்து அரிஷ்குமாரை தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து சீனிவாசன், முருகன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    • முதலுதவி செய்வது குறித்து துண்டு பிரசுரம் வினியோகம்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தீயணைப்பு சார்பில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதில் தீயணைப்பு நிலைய அலுவலர் விநாயகம் தலைமையில் தீபாவளியின் போது பட்டாசு வெடிக்கும் முறைமைகள், விபத்து ஏற்பட்டால் எப்படி தீவிபத்தில் இருந்து தற்காத்துக் கொள்ளவது.

    தீவிபத்து குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு முதலில் தகவல் கொடுப்பது விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் உதவி செய்வது எப்படி என‌ கூறி துண்டு பிரசுரங்கள் வழங்கி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    அப்போது தலைமை ஆசிரியர் மேரிஷேரின் மற்றும் ஆசிரியர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதனை தொடர்ந்து சோளிங்கர் பஸ் நிலையத்தில் பயணிகள், ஆட்டோ டிரைவர்கள், கடைகள், பஸ் டிரைவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தீ மற்றும் விபத்து குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள் அப்போது தீயணைப்பு வீரர்கள் உடனிருந்தனர்.

    • தனியார் பஸ் மீது பைக் மோதியது
    • போலீசார் விசாரணை

    கலவை:

    ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த வேம்பி கிரா மத்தை சேர்ந்தவர் லோகநாதன் ( வயது 45 ) , ஆதி மூலம் மகன் அருண் . விவசாயி . இவர்கள் இருவரும் கலவையில் இருந்து வேம்பிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர் . கலவையை அடுத்த அருந்ததிபாளையம் அருகே சென்றபோது லோகநாதன் ஓட்டிச் சென்ற பைக் தனியார் பஸ் மீது மோதியது.

    இதில் இருவரும் தூக்கி வீசப் பட்டனர் . அவர்களில் அருணுக்கு படுகாயம் ஏற்பட்டது. அவரை கலவை அரசு மருத்துவமனையில் சேர்த்து , மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வருகின்றார்.

    இதுகுறித்து கலவை போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • தண்டவாளம் அருகே பிணமாக கிடந்தார்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணத்தை அடுத்த இச்சிபுத்தூர் ரெயில் நிலையம் அருகே நேற்று காலை திருத்தணி - அரக்கோணம் ரெயில் பாதையின் தண்டவாளம் அருகே அடையாளம் தெரியாத 57 வயது மதிக் கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக அரக்கோணம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சப் - இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன் மற்றும் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக் கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து விசாரணை மேற்கொண்டபோது இறந்து கிடந்த வர் தணிகைபோளூர் பகுதியை சேர்ந்த சேகர் ( வயது 57 ) என்பதும், நேற்று காலை அந்த பகுதியில் சென்ற போது ரெயிலில் அடிபட்டு இறந்திருப்பதும் தெரிய வந்தது.

    இதுகுறித்து அரக்கோணம் ரெயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .

    • காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது
    • மின் பராமரிப்பு பணிகள் நடக்கிறது

    ஆற்காடு:

    ஆற்காடு கோட்டத்தை சேர்ந்த மாம்பாக்கம் துணை மின் நிலையத்தில் நாளை ( செவ்வாய்க்கிழமை ) அத்தியாவசிய மின்பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    இதன் காரணமாக இங்கிருந்து மின் வினியோகம் பெறும் மாம்பாக்கம் , குப்பிடி சாத்தம், மருதம், இருங்கூர், பென்னகர், வாழப்பந்தல், வேம்பி, அத்தியானம், ஆரூர், வடக்குமேடு, தட்டச்சேரி மற் றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும்.

    இந்த தகவலை ஆற்காடு மின்வாரிய செயற்பொறியா ளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

    ×