search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The lakes are full"

    • சிறப்பு பூஜை செய்து கிராம மக்கள் வழிபாடு
    • உபரி நீரை மலர் தூவி வரவேற்றனர்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து மழை பெய்தது. இதன் காரணமாக ஏரி மற்றும் குளம், குட்டைகள் வேகமாக நிரம்பி வருவது. நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.

    அதன்படி பள்ளிகொண்டா அருகே உள்ள இறைவன்காடு மற்றும் கந்தனேரி ஆகிய 2 ஏரிகள் முழுவதுமாக நிரம்பி இன்று காலை கோடிப்போனது.

    இதனால் மகிழ்ச்சி அடைந்த ஊர் பொதுமக்கள் ஏரி நிரம்பி வழியும் இடத்தில் ஒன்றுகூடி சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினர். மேலும் மதகின் வழியே வெளியேறும் உபரி நீரை மலர் தூவி வரவேற்றனர்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக அணைக்கட்டு எம்.எல்.ஏ. நந்தகுமார் கலந்து கொண்டு, மலர் தூவி வரவேற்றார். இதில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, தி.மு.க ஒன்றிய செயலா ளர்கள் குமாரபாண்டியன், வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • சேலம் மாவட்டத்தில் நீர்வள துறையின் கட்டுப்பாட்டில் 88 ஏரிகள் உள்ளன.
    • 8 ஏரிகள் 50 சதவீதத்திற்கும் மேல் நிரம்பியிருந்தன. 15 ஏரிகள் வறண்ட நிலையில் இருந்தன.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் நீர்வள துறையின் கட்டுப்பாட்டில் 88 ஏரிகள் உள்ளன. தென்மேற்கு பருவமழை காலம் நிலவிய ஆகஸ்ட் மாதத்தில் 88 ஏரிகளில் கன்னங்குறிச்சி மூக்கனேரி, பைரோஜி ஏரி, கமலாபுரம் பெரிய ஏரி, கமலாபுரம் சின்ன ஏரி,கொண்டலாம்பட்டி ஏரி, ஆத்தூர் புது ஏரி, முட்டல் ஏரி, மணிவிழுந்தான் ஏரி,

    தேவியாக்குறிச்சி ஏரி, செந்தாரப்பட்டி ஏரி உள்பட

    29 ஏரிகள் முழுமையாக நிரம்பின. அபினவம் ஏரி, சின்ன சமுத்திரம் ஏரி உள்பட 8 ஏரிகள் 50 சதவீதத்திற்கும் மேல் நிரம்பியிருந்தன. 15 ஏரிகள் வறண்ட நிலையில் இருந்தன.

    தற்போது வடகிழக்கு பருவமழை காலம் காரண

    மாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாண்டஸ் புயல் கரையை கடந்த பின்னர், சேலம் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் கடந்த 3 நாட்களில் விட்டு விட்டு மழை பெய்தது. இதன் காரணமாக நீர் நிலைகளில் வரத்து, கால்வாய்களில் நீரோட்டம் அதிகரித்து உள்ளது.

    இதையடுத்து 88 ஏரிக ளில், 55 ஏரிகள் முழுமையாக நிரம்பி அவற்றிலிருந்து உபரி நீர் வெளியேறும் நிலையில் உள்ளது. 75 முதல் 99 சதவீதம் வரை நீர் நிரம்பிய நிலையில் 4 ஏரிகள் உள்ளன.

    50 முதல் 74 சதவீதம் அளவுக்கு நீர் நிரம்பிய நிலையில் 8 ஏரிகள் உள்ளன. ஆறு ஏரிகளில் 25 சதவீதத்திற்கும் மேல் 49 சதவீதம் வரை தண்ணீர் உள்ளது. 25% குறைவாக 4 ஏரிகளில் நீர் இருப்பு உள்ளது. 11 ஏரிகள் இன்னும் வறண்ட நிலையில் தான் காட்சியளிக்கின்றன. வடகி ழக்கு பருவமழை காலம் இன்னும் நீடிப்பதால் 50% வரை நீர்மட்டம் எட்டி உள்ள ஏரிகள் விரைவில் நிரம்பிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    குறைந்த அளவு நீர் இருப்பு உள்ள ஏரிகளும், வறண்ட நிலையில் உள்ள ஏரிகளும், வடகிழக்கு பருவமழை காலத்திற்குள் நிரம்ப வேண்டும் என்றும், அதற்கான ஆக்கிர மிப்புகளை அகற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • மலர்கள் தூவி, இனிப்பு கொடுத்தனர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மோர்தானா அணை அதிக அளவில் கால்வாய் மூலம் தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால் தண்ணீராலும் தொடர்ந்து குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள ஏரிகள் தொடர்ந்து நிரம்பி வருகிறது.

    வேலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியான நெல்லூர்பேட்டை பெரிய ஏரி என்கிற செருவங்கி ஏரி நேற்று முன்தினம் இரவு நிரம்பி வழிந்தது.

    இதேபோல் செட்டிகுப்பம் ஓட்டேரியும் கடந்த சில தினங்களாக நிரம்பி வழிகிறது. ஏரி நிரம்பி வழியும் பகுதியில் குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் மலர்கள் தூவி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.கார்த்திகேயன், எஸ். சாந்தி, குடியாத்தம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நத்தம்பிரதீஷ், செட்டிகுப்பம் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.இந்திரா, ஒன்றிய குழு உறுப்பினர்கள் சி. மலர்வேணி, செல்விபாபு உட்பட ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், ஏரி பாசன சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • முழுமையாக தண்ணீர் திறந்து விட வலியுறுத்தல்
    • சீரமைக்கப்படாத தெருக்களால் பொதுமக்கள் கடும் அவதி

    வேலூர்:

    வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை திருவண்ணாமலை மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    மேகமூட்டத்துடன் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாலைகளில் மழை வெள்ளம் செல்கிறது. வேலூர் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை மற்றும் கால்வாய் பணிகளின் காரணமாக சீரமைக்கப்படாத தெருக்களில் சேறும் சகதியுமாக காட்சிய ளிக்கின்றன. அதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

    மழை காரணமாக ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.ஏற்கனவே மாவட்டத்தில் உள்ள சில ஏரிகள் நிரம்பிய நிலையில் உபரி நீர் வெளியேறி வருகிறது.

    வேலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 101 ஏரிகள் உள்ளன. 12 ஏரிகள் மட்டுமே முழுமையாக நிரம்பி உள்ளது. 24 ஏரிகளுக்கு நீர்வரத்து கொஞ்சம் கூட இல்லை. மற்ற ஏரிகளில் 20 முதல் 50 சதவீதம் வரை தண்ணீர் இருப்பு உள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 49 ஏரிகளில் 29 ஏரிகள் நிரம்பிவிட்டன. அங்கு 4 ஏரிகளுக்கு மட்டும் தான் நீர்வரத்து இல்லை.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 369 ஏரிகளில் 125 ஏரிகள் நிரம்பி வழிகிறது. 145 ஏரிகளில் 50 சதவீதம் வரை தண்ணீர் உள்ளது. இந்த ஏரிகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. 30 ஏரிகளுக்கு நீர்வரத்து இல்லை.

    வேலூர் சதுப்பேரி ஏரியில் அதிக தண்ணீர் உள்ளது. ஆனால் ஓட்டேரி ஏரியில் தண்ணீர் மிகவும் குறைந்த அளவே உள்ளது. கனமழை பெய்தால் மட்டுமே தண்ணீர் வந்து நிரம்பும் நிலையில் உள்ளது.

    வேலூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு முழுமையாக தண்ணீர் திறந்து விடாததால் ஏரிகள் இன்னும் நிரம்பவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். பாலாற்றில் ஓராண்டுக்கு மேலாக தொடர்ந்து நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

    பாலாறு கவுண்டன்யா ஆறு உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏரிகளுக்கு தண்ணீர் திருப்பி தர வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    • கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
    • மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் இங்குள்ள ஏரி குளங்கள் நிரம்பி வருகின்றன.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    குறிப்பாக பரமத்தி வேலூர், மங்களபுரம், ராசிபுரம், புதுச்சத்திரம், மோகனூர் உட்பட பல பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த கனமழை–யால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் இங்குள்ள ஏரி குளங்கள் நிரம்பி வருகின்றன.

    மாவட்டத்திலுள்ள 79 ஏரிகளில் 32 ஏரிகள் முழுவதும் நிரம்பி உள்ளன. 2 ஏரிகள் 75 சதவீதமும், 5 ஏரிகள் 50 முதல் 75 சதவீதமும், 6 ஏரிகள் 25 முதல் 50 சதவீதமும், 7 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பிள்ளன. மேலும் 27 ஏரிகளில் தண்ணீர் இல்லாமல் வறண்ட நிலையிலே காட்சி அளிக்கிறது.

    மாவட்டத்தில் அதிகபட்ச–மாக பரமத்தி வேலூரில் 20 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மங்களபுரத்தில் 18.40 மில்லி மீட்டர், எருமப்பட்டி-5, மோகனூர்-13, நாமக்கல்-2, புதுச்சத்திரம்-11, ராசி புரம்-14.3, சேந்தமங்கலம்-9, திருச்செங்கோடு-1, கலெக்டர் அலுவலக பகுதி-6, கொல்லி மலை-18 என மாவட்டம் முழுவதும் 117.70 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    • தண்ணீரில் மலர் தூவி எம்.எல்.ஏ. வரவேற்பு
    • மோர்தானா அணையிலிருந்து வெளியேறும் தண்ணீர்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மோர்தானா அணை கடந்த 6 மாதங்களுக்கு மேலாக நிரம்பி உள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீர் அதிகரித்து உள்ளதால் மோர்தானா அணையிலிருந்து வெளியேறும் தண்ணீர் ஜிட்டப்பல்லி செக்டேமிலிருந்து வலது மற்றும் இடதுபுற கால்வாய்கள் வழியாக குடியாத்தம் மற்றும் கே.வி. குப்பம் பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் சென்று கொண்டுள்ளது.

    ஏரிகளுக்கு கால்வாய்கள் மூலம் செல்லும் தண்ணீர் தொடர்ந்து சென்றதால் குடியாத்தம் ஒன்றியத்தில் உள்ள 3 ஏரிகள் நிரம்பியது.

    முழுவதும் வறண்டு இருந்த அக்ராவரம் ஏரி மோர்தானா கால்வாய் கிடு கிடுவென நிரம்பி நேற்று காலையில் வழிந்து ஓடியது சுமார் 63 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த அக்ராவரம் ஏரியில் தண்ணீர் நிரம்பி வழிந்து வருவதை தொடர்ந்து குடியாத்தம் அமலுவிஜயன் எம்.எல்.ஏ. பூஜை செய்து பூக்கள் தூவி தண்ணீரை வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் எம்.கார்த்திகேயன், ஒன்றிய குழு உறுப்பினர் மனோகரன், ஊராட்சி மன்ற தலைவர் முனிசாமி, துணைத்தலைவர் தமிழரசிஇளையராஜா உள்பட ஏராளமானோர் உடன் இருந்தனர்.

    இதேபோல் சுமார் 30 ஏக்கர் பரப்பளவு உள்ள பெரும்பாடி ஏரியும் நேற்று நிரம்பி வழிந்தது. இதேபோல் 55 ஏக்கர் பரப்பளவு கொண்ட எர்த்தாங்கல் ஏரி நிரம்பி வழிவதற்கு சிறிது உயரமே இருந்தது.

    இந்நிலையில் தொடர்ந்து மோர் தானா கால்வாய் வழியாக வரும் தண்ணீரும் மழை தண்ணீரும் ஏரிக்கு வந்ததால் கடந்த இரண்டு நாட்களாக எர்த்தாங்கல் ஏரியும் சிறிதளவு வழிந்து வருகிறது.

    வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் ஒன்றியத்தில் 3 ஏரிகள் நிரம்பி வழிந்து வருவதால் விவசாயிகளும் கிராம மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மேலும் ஏரியிலிருந்து வழிந்து ஓடும் தண்ணீர் முறையாக வெளியேற ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும் ஏரிக்கு வரும் கால்வாய்களும் ஏரியிலிருந்து வெளியேறும் கால்வாய்களும் ஆக்கிரமிப்பு இல்லாமல் சீர் செய்ய வேண்டும் எனவும் விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 42 ஏரிகள் 25 சதவீதம் அளவே நிறைந்துள்ளது
    • கால்வாய்கள் தூர்வார விவசாயிகள் வலியுறுத்தல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட் டத்தில் தென்மேற்கு பருவ மழை காலத்தில் வழக்கத் துக்கு அதிகமாக இந்த ஆண்டு மழைப்பொழிவு இருந்தது. மேலும், பாலாறு, பொன்னையாற்றில் ஓராண் டாக தண்ணீர் ஓடிய வண்ணம் உள்ளது.

    இந்நிலையில் மாவட்டத் தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 369 ஏரிகளில் 99 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மேலும் 75 சதவீதத்துக்கும் மேல் 4 ஏரிகளும், 50 சதவீ தத்துக்கு மேல் 69 ஏரிகளும், 25 சதவீதத்துக்கும் மேல் 155 ஏரிகளும் நிரம்பியுள்ளன. 42 ஏரிகள் 25 சதவீதம் அளவே நிறைந்துள்ளது.

    ராணிப்பேட்டை மாவட் டத்தில் உள்ள நீர்நிலைகள் அனைத்துக்கும் சேர்த்து 8.52. டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்க முடியும். இப்போது 5.43 டி.எம்.சி.தண்ணீர் சேமிப் பில் உள்ளது.

    இந்நிலையில் பல ஏரிகள் நிரம்பாததற்கு காரணம் ஏரி களுக்கு செல்லும் கால்வாய்கள் தூர் நிறைந்துள்ளதும், ஆக்கிரமிப்புகளுமே ஆகும் என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

    ×