search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல் மாவட்டத்தில் 32 ஏரிகள் நிரம்பின
    X

    நாமக்கல் மாவட்டத்தில் 32 ஏரிகள் நிரம்பின

    • கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
    • மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் இங்குள்ள ஏரி குளங்கள் நிரம்பி வருகின்றன.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    குறிப்பாக பரமத்தி வேலூர், மங்களபுரம், ராசிபுரம், புதுச்சத்திரம், மோகனூர் உட்பட பல பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த கனமழை–யால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் இங்குள்ள ஏரி குளங்கள் நிரம்பி வருகின்றன.

    மாவட்டத்திலுள்ள 79 ஏரிகளில் 32 ஏரிகள் முழுவதும் நிரம்பி உள்ளன. 2 ஏரிகள் 75 சதவீதமும், 5 ஏரிகள் 50 முதல் 75 சதவீதமும், 6 ஏரிகள் 25 முதல் 50 சதவீதமும், 7 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பிள்ளன. மேலும் 27 ஏரிகளில் தண்ணீர் இல்லாமல் வறண்ட நிலையிலே காட்சி அளிக்கிறது.

    மாவட்டத்தில் அதிகபட்ச–மாக பரமத்தி வேலூரில் 20 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மங்களபுரத்தில் 18.40 மில்லி மீட்டர், எருமப்பட்டி-5, மோகனூர்-13, நாமக்கல்-2, புதுச்சத்திரம்-11, ராசி புரம்-14.3, சேந்தமங்கலம்-9, திருச்செங்கோடு-1, கலெக்டர் அலுவலக பகுதி-6, கொல்லி மலை-18 என மாவட்டம் முழுவதும் 117.70 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    Next Story
    ×