என் மலர்
உள்ளூர் செய்திகள்

ராணிப்பேட்டை முத்துக்கடையில் அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
ராணிப்பேட்டை முத்துக்கடையில் அ.தி.மு.க.வினர் சாலை மறியல்
- 50-க்கும் மேற்பட்டோர் கைது
- எடப்பாடி பழனிசாமி உள்பட அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து நடந்தது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை முத்துக்கடையில் ராணிப்பேட்டை தொகுதி அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். முன்னாள் முதலமைச்சர் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் எம்.எல்.ஏக்களை கைது செய்ததை கண்டித்தும், உடனடியாக அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், திமுக அரசை கண்டித்து ராணிப்பேட்டை நகர செயலாளர் கே.பி.சந்தோஷம் தலைமையில் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டம் நடத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதில் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் ஏழுமலை, மாவட்ட பொருளாளர் ஷாபூதீன், மாவட்ட ஜெ பேரவை செயலாளர் பூண்டி பிரகாஷ், மாவட்ட ஜெ பேரவை பொருளாளர் எஸ்.எம்.சுகுமார், நகர செயலாளர்கள் மோகன், இப்ராஹீம் கலிலுல்லா, ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சாலை மறியலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை ராணிப்பேட்டை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






