என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • சு.ரவி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • முதல் பரிசாக ரூ.30 ஆயிரம் அறிவிப்பு

    அரக்கோணம்:

    அரக்கோணம் தனியார் நிறுவனம் சார்பாக நடைபெற்ற கால்பந்து போட்டி தொடக்க விழா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

    இதில் சென்னை பெங்களூர் பல்வேறு இடங்களில் இருந்து சுமார் 20 அணிகள் கலந்து கொள்கின்றன. வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ.30 ஆயிரம், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ. 20 ஆயிரம் ரொக்கம் பரிசாக வழங்க உள்ளது.

    கால்பந்து போட்டியை ரவி எம் எல் ஏ தொடங்கி வைத்தார். இதில் அம்மனூர் ஊராட்சி மன்ற தலைவர் ஞானவேல் அரக்கோணம் அதிமுக நகர செயலாளர் பாண்டுரங்கன் மற்றும் பலர் உடன் இருந்தனர் .

    கால்பந்து விளையாட்டு போட்டி நிர்வாகிகள் ஜெயசீலன், எட்வின், ராஜேஷ் மற்றும் கில்பட், பாண்டியன் ஆகியோர் கால்பந்து போட்டிக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

    • தடுப்பு கேட் சீரமைக்க உத்தரவு
    • ரோந்து பணியில் ஈடுபட பொதுமக்கள் வலியுறுத்தல்

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் புதிய டிஎஸ்பியாக பொறுப்பு ஏற்றுக்கொண்ட கிரிஷ் யாதவ் அவர்கள் சோளிங்கர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பில்லாஞ்சி சோதனை சாவடியை சோதனை சாவடி கட்டிடம், சிசிடிவி கேமரா ஆய்வு செய்தார்.தொடர்ந்து சேதமடைந்ததுள்ள தடுப்பு கேட் சீரமைக்க உத்தரவிட்டார்.

    மேலும் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் கண்காணிக்க வேண்டும், நிலுவையில் உள்ள பல்வேறு வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும், தீபாவளி விழா என்பதால் பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூடும் போது பொதுமக்களின் உடைமைகளை பாதுகாக்க ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என தெரிவித்தார்.

    அப்போது காவல் ஆய்வாளர் முருகானந்தம் உதவி ஆய்வாளர் சுரேஷ் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
    • வார்டு சபா என்ற புதிய திட்டம் அறிமுகம்

    சோளிங்கர்:

    சோளிங்கர் நகராட்சியில் வார்டு சபா அமைப்பது குறித்து அவசர ஆலோசனைக் கூட்டம் நகராட்சித் தலைவர் தமிழ்ச்செல்வி அசோகன் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையர் பரந்தாமன், நகராட்சி துணைத் தலைவர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரும் வகையில் வார்டு சபா என்ற புதிய திட்டத்தை அறிமுகப்ப டுத்தியுள்ளது.

    இதில் நகராட்சியில் 27 வார்டுகளில் உள்ள ஒவ்வொரு வார்டுகளிலும் வார்டு உறுப்பினர் தலைமையில் நான்கு நிர்வாகிகள் தேர்ந்தெ டுக்கப்பட்டு மூன்று மாதத்திற்கு ஒரு முறை அப்பகுதியில் உள்ள பொது மக்களிடம் குறைகளை கேட்டு அறிய கூட்டம் நடத்தி கூட்டத்தில் பொது மக்களின் கோரிக்கைகளை நகர மன்றத்தில் நடை பெறும் கூட்டத்தில் முன்வைத்து ஆலோசனை செய்யப்பட்டு பின்னர் தீர்மானம் நிறைவே ற்றப்பட்டு அந்த பணிகளை செயல்ப டுத்தப்படுத்துவது குறித்து கூட்டத்தில் வார்டு சபா திட்டத்தை பற்றி ஆலோ சனை செய்யப்பட்டது.

    இந்த கூட்டத்தில் 27 வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் ஆர்.காந்தி திறந்துவைத்தார்
    • பல்வேறு நலதிட்ட உதவிகளை வழங்கினார்

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஒன்றிய பகுதிகளில் ரூ.1.33கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற 9 திட்ட பணிககள் தொடக்க விழா பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.

    ஆற்காடு ஈஸ்வரப்பன் எம்எல்ஏ, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி, ஒன்றியக்குழு தலைவர் வெங்கட்ரமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு வாலாஜா ஒன்றியம் அனந்தலை ஊராட்சி பி.ஆர் நகரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.10.19 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மையக் கட்டிடத்தினையும், திருவள்ளுவர் நகரில் மாநில நிதி குழு மானியம் திட்டத்தின் கீழ் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நீர் தேக்க தொட்டியிணையும் தொடங்கி வைத்தார்.

    வன்னிவேடு ஊராட்சியில் 15-வது நிதி குழு வட்டார ஊராட்சி நிதி ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய தரைமட்ட நீர் தேக்க தொட்டியினை திறந்துவைத்தும், ஜே.ஜே.நகர் மற்றும் இந்திரா நகரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.14.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பகுதி நேர ரேசன் கடை கட்டிடத்தையும் அமைச்சர் காந்தி தொடங்கி வைத்து பொருட்களை பொது மக்களுக்கு வழங்கினார்.

    தொடர்ந்து குடிமல்லூர் ஊராட்சியில் வட்டார ஊராட்சி நிதி ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய தரைமட்ட நீர் தேக்க தொட்டியினையும், விசி.மோட்டூர் ஊராட்சியில் பி.ஆர் அம்பேத்கர் நகரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.23.57 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தையும், வட்டார ஊராட்சி நிதி ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல் நீர் தேக்க தொட்டி, துளசி மாட வீதியில் ரூ.10.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய் கல்வெட்டினையும், தனலட்சுமி நகர் பகுதியில் கட்டப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாயினையும் அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்து பார்வையிட்டார்.

    மேலும் பாரத பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகளையும், 15 பயனாளிகளுக்கு முதியோர் ஓய்வு ஊதியம் பெறுவதற்கான ஆணைகளையும், 5 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை களையும் அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.

    • கலெக்டர் பைக்கில் சென்று பார்வையிட்டார்
    • நிரந்தர தீர்வு காண வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தல்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட புதுப்பேட்டை சாலையில் ரெயில்வே தரைப்பாலம் உள்ளது. இதன் வழியாக நாட்டறம்பள்ளி, புதுப்பேட்டை உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தரைப்பாலத்தின் வழியாகத்தான் திருப்பத்தூர் வந்து செல்ல வேண்டும். திருப்பத்தூர் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக தரைப்பாலத்தில் எப்போது தண்ணீர் தேங்கிக்கொண்டே இருக்கும்.

    இதனால் அவ்வப்போது மோட்டார் பயன்படுத்தி தண்ணீரை வெளியேற்றி வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் திருப்பத்தூர் பகுதியில் பெய்த பலத்த மழையால் ரெயில்வே தாரைப்பாலத்தில் அளவுக்கு அதிகமான தண்ணீர் தேங்கி நின்றது.

    அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளிலும் பள்ளியிலும் மழைநீர் புகுந்தது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

    அதைத்தொடர்ந்து நேற்று மாலை கலெக்டர் அமர்குஷ்வாஹா அப்பகுதிக்கு சென்று தரைப்பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தரைப்பாலத்தில் தண்ணீர் தடையின்றி செல்லவும், அதற்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக அப்பகுதியில் கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது அந்த இடங்களுக்கு கார் செல்ல முடியவில்லை. இதனால் காரை நிறுத்திவிட்டு, மோட்டார் சைக்கிளை பெற்றுக்கொண்டு கலெக்டர் அதனை ஒட்டியவாறு சென்று அங்கு கால்வாய் ஏற்படுத்தினால் தண்ணீர் தடையின்றி செல்லுமா என ஆய்வு மேற்கொண்டார். மேலும் தண்ணீர் தங்கு தடையின்றி செல்வதற்கு பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர்முரளி, தாசில்தார் சிவப்பிரகாசம், நகராட்சி ஆணையர் ஜெயராமராஜா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்

    • ஜோலார்பேட்டையில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சு
    • கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்பு

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சி ஆசிரியர் நகர் பகுதியில் அ.தி.மு.க. பொன்விழா நிறைவு விழா மற்றும் 51 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ஆர். ரமேஷ் வரவேற்றார். முன்னாள் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், வைகைசெல்வன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    இதில் மாவட்ட செயலாளர் கே.சி.வீரமணி பேசும்போது எம்.ஜி.ஆ.ரால் உருவாக்கப்பட்ட அ.தி.மு.க. இயக்கம் ஆரம்பித்த போது 10 நாட்களில் காணமல் போகும் என சொன்னவர்கள் மத்தியில் இன்று 51-ம் ஆண்டில் அடி எடுத்து வைத்து வீரநடை போட்டு கொண்டு இருக்கிறது.

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொன்னதை போல் அ.தி.மு.க. இயக்கம் உலகம் அழியும் வரை நிலைத்து நிற்கும். தமிழகத்தில் விரைவில் எடப்பாடியார் தலைமையில் ஆட்சி அமைப்போம் என்பதை இந்த கூட்டத்தின் மூலம் சபதம் ஏற்போம் என்று பேசினார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷ், வாணியம்பாடி எம்.எல்.ஏ. செந்தில்குமார், நகர செயலாளர்கள் டி.டி.குமார், எஸ்.பி.சீனிவாசன், ஒன்றிய கவுன்சிலர் ஆர்.மணிகண்டன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சஞ்சீவிகுமார், ஜெய்கிருஷ்ணன் நகர மன்ற உறுப்பினர் ஏழுமலை புள்ளானேரி ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • தூய்மையாக வைத்துகொள்ள உத்தரவு
    • சமையலருக்கு அறிவுரை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி பகுதியில் அமைந்துள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர்கள் விடுதியில் நேற்று திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா திடீரென நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது மாணவர்கள் விடுதியில் உள்ள சமையலறை மாணவர்கள் தங்கும் அறை மற்றும் கழிவறை ஆகியவற்றை பார்வையிட்டார்.

    மாணவர்களுக்கு சுத்தமாக சுகாதாரமாகவும் உணவுகளை தயார் செய்து வழங்க வேண்டும் என சமையலருக்கு அறிவுரைகளை வழங்கினார்.

    மேலும் இவ்விடுதி உள்ள இடங்களை தூய்மையாக வைத்துகொள்ள வேண்டும் என நாட்டறம்பள்ளி தாசில்தாருக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது நாட்டறம்பள்ளி தாசில்தார் க.குமார், மண்டல துணை தாசில்தார் ஹரிதாஸ், வருவாய் ஆய்வாளர் அன்னலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் த.பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே மண்டலவாடி கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்தம்பி இவரது மகன் சிவா (வயது21) இவர் நேற்று தனது வீட்டு தோட்டத்தை பராமரித்துக் கொண்டிருந்தார்.

    விஷ பாம்பு ஒன்று அவரை கடித்தது உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு தனது பைக்கில் சென்று கொண்டு இருந்தார். அப்போது மண்டலவாடி கூட்ரோடு அருகே சென்ற போது திருப்பத்தூரில் இருந்து வேலூர் நோக்கி வந்த கார் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சிவா படுகாயமடைந்தார்.

    உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து அவரது சகோதரர் விக்னேஷ் கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் காதர் கான் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய சென்னை கொரட்டூர் பகுதியை சேர்ந்த வினோத் (35). என்பவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

    • கயிறு கட்டி ஆபத்தான முறையில் கடக்கும் பொதுமக்கள்
    • மேம்பாலம் அமைக்க வலியுறுத்தல்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் அடுத்த கொரட்டி பகுதியில் நீண்ட காலமாக தரைப்பாலம் இருந்தது கடந்த ஆண்டு பெய்த கன மழையின் காரணமாக தரைப்பாலம் உடைந்து சென்றது.

    இந்த தரைப் பாலம் வழியாக தண்டுகானூர், மாங்குப்பம், காரக்காரன்கொட்டாய், மங்களம்பள்ளி, என சுமார் பத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் இந்த தரைப் பாலம் வழியாக சென்று வந்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பாம்பாறுக்கு செல்லும் கிளை நீரோடை கொரட்டி பகுதியில் இருந்து தொடங்கி ஊத்தங்கரை சென்று முடிவடைகிறது

    தற்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கொரட்டி நீரோடையில் தற்போது அதிக வெள்ளம் செல்வதால் தரைப் பாலம் உடைந்து பொதுமக்கள் பயணிக்க முடியாத அவல நிலை ஏற்பட்டது.

    தரை பாலத்தில் வெள்ளம் அதிகமாக செல்வதால் தரை பாலத்தைக் கடக்க அப்பகுதி மக்கள் கயிறு கட்டி ஆபத்தான முறையில் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கரையில் இருந்து மற்ற கரைக்கு ஆபத்தான முறையில் கடக்கின்றனர். மேலும் வாகனங்களும் மிகவும் சிரமப்பட்டு செல்கிறது.

    அசம்பாவிதம் நடைபெறும் முன்னர் மாவட்ட நிர்வாகம் இப்பகுதிக்கு தரை பாலம் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு இதே தரைப் பாலத்தில் மாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த பாண்டியன் (35) என்பவர் வீட்டிலிருந்து காலை கொரட்டி பகுதிக்கு தேநீர் அருந்த கடைக்கு சென்றபோது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • குண்டர் சட்டத்தில் நடவடிக்கை
    • போலீஸ் சூப்பிரண்டு கலெக்டருக்கு பரிந்துரை

    ஆற்காடு:

    ஆற்காடு டவுன் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வரும் நபர்களை கண்காணித்து கைது செய்து, குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் உத்தரவிட்டார்.

    அதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு மேற்பார்வையில் ஆற்காடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 16-ந்தேதி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்து வந்த ஆற்காடு மாசா பேட்டை அண்ணா நகர் பகுதியை சேர்ந்த சதீஷ் (வயது 29), ஆற்காடு வேலூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த பிரபு (27) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    அதைத்தொடர்ந்து கஞ்சா விற்பனையில் கைது செய்யப்பட்ட சதீஷ் மற்றும் பிரபு ஆகியோரை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க போலீஸ் சூப்பிரண்டு கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

    கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின் பேரில் சிறையில் உள்ள 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததற்கான ஆணை வழங்கப்பட்டது.

    • 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை திறப்பு
    • கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தகவல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது :-

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் தற்போது பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவக்காற்று மழை பரவலாக இடி, மின்னலுடன் பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து, பெருமழையின் காரணமாகவும், இடி, மின்னல் தாக்கியும் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    மேலும் உடமைகளுக்கும் சேதாரம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாலும், அவற்றினை தடுக்கும் பொருட்டு ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது.மழை வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய பகுதிகளாக 47 இடங்கள் கண்டறியப்பட்டு, அப்பகுதிகளில் பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கு தேவையான தற்காலிக தங்க வைப்பதற்கான முகாம்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

    இது தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுக்கும் வடகிழக்கு பருவமழைக்காக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.கூட்டத்தில் உள்ளாட்சித் துறை அலுவலர்கள் அவர்களின் எல்லைகளில் உள்ள பகுதிகளில் கழிவுநீர் கால்வாய்கள், மழை நீர் வடிகால் கால்வாய்கள் ஆகிய அடைப்பு இருப்பின் அவற்றை அகற்றவும், மழை நீர் தங்கு தடையின்றி செல்லவும் ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பள்ளி கல்வித்துறை, கல்லூரி கல்வித்துறையினருக்கு அவர்களது பள்ளி கல்லூரிகளில் பழைய இடிந்து விழக்கூடிய நிலையில் உள்ள கட்டிடங்களை கண்டறிந்து அவற்றை இடிப்பதற்கான கடிதங்கள் அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    பொதுப்பணி த்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள கட்டிடங்களும் ஆய்வு செய்து இடிந்து விடக்கூடிய நிலையில் உள்ள கட்டிடங்களை கண்டறிந்து அவற்றை இடிப்பதற்கான கடிதங்கள் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. மின் துறையினருக்கு தாழ்வான நிலையில் செல்லும் மின் தடங்கள், சாய்ந்து விழக்கூடிய நிலையில் உள்ள மின் கம்பங்களை கண்டறிந்து அவைகளை அகற்ற சீர் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.மழைக்காலங்களில் பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் மழை மற்றும் இடி, மின்னலின் போது நீர் நிலைகளில் குளிப்பதையும், வெளியில் வருவதையும், மரங்களில் கீழ் நிற்பதையும், ஆடு மாடுகளை மின் கம்பங்களில் கட்டுவதையும் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 6 தாலுகா அலுவலங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் தொடங்கப்பட்டுள்ளன. அரக்கோணம் 04177-236360, 9445000507, ஆற்காடு 04172-235568, 9445000505, வாலாஜா 04172-299808, 9445000506, சோளிங்கர் 04172-290800, 9944353601, நெமிலி 04177-247260, 9789641611, கலவை 8012729137 இந்த எண்களில் புகார்களை தெரிவிக்கலாம். இது மட்டுமல்லாமல் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தும் வகையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய 04172-273166 / 273188 ஆகிய எண்களில் புகார்களை தெரிவிக்கலாம். மேலும் நிகழ்வுகளை அவ்வப்போது படம் பிடித்து அல்லது வீடியோ வடிவில் வாட்ஸ் அப் 9489668833 என்ற எண்ணிற்கு அனுப்பலாம்.

    நடப்பில் உள்ள வடகிழக்கு பருவமழை காலங்களில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உயிர் சேதங்கள் இன்றி இருக்க அனைவரும் உதவ வேண்டும்.இவ்வாறு ம அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருமணமான 7 மாதத்தில் பரிதாபம்
    • உதவி கலெக்டர் விசாரணை

    சோளிங்கர்:

    பெங்களூரு கிருஷ்ணராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சுனில் குமார் (வயது 26), பெயிண்டர். இவரது மனைவி சந்தியா (20). இவர்களுக்கு திருமணமாகி 7 மாதங்கள் ஆகிறது.

    இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கணவன் மனைவி இருவரும் சோளிங்கர் வள்ளுவர் காலனி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருந்தனர்.

    தீபாவளி பண்டிகை கொண்டடுவதற்காக பெங்களூருவுக்கு செல்ல வேண்டும் என சந்தியா, சுனில்குமாரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்ததாக தெரிகிறது. இதனால் மன வேதனை அடைந்த சந்தியா வீட்டில் தூக்குப்போட்டு தற் கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் சோளிங்கர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தற்கொலை செய்து கொண்ட சந்தியாவுக்கு திருமணமாகி 7 மாதங்களே ஆவதால் உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

    ×