search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலாஜா ஒன்றியத்தில் ரூ.1.32 கோடியில் புதிய கட்டிடங்கள்
    X

    வன்னிவேடு ஊராட்சியில் புதிய பகுதி நேர ரேசன் கடை கட்டிடத்தை அமைச்சர் ஆர்.காந்தி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்த போது எடுத்த படம் அருகில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன்.

    வாலாஜா ஒன்றியத்தில் ரூ.1.32 கோடியில் புதிய கட்டிடங்கள்

    • அமைச்சர் ஆர்.காந்தி திறந்துவைத்தார்
    • பல்வேறு நலதிட்ட உதவிகளை வழங்கினார்

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஒன்றிய பகுதிகளில் ரூ.1.33கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற 9 திட்ட பணிககள் தொடக்க விழா பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.

    ஆற்காடு ஈஸ்வரப்பன் எம்எல்ஏ, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி, ஒன்றியக்குழு தலைவர் வெங்கட்ரமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு வாலாஜா ஒன்றியம் அனந்தலை ஊராட்சி பி.ஆர் நகரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.10.19 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மையக் கட்டிடத்தினையும், திருவள்ளுவர் நகரில் மாநில நிதி குழு மானியம் திட்டத்தின் கீழ் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நீர் தேக்க தொட்டியிணையும் தொடங்கி வைத்தார்.

    வன்னிவேடு ஊராட்சியில் 15-வது நிதி குழு வட்டார ஊராட்சி நிதி ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய தரைமட்ட நீர் தேக்க தொட்டியினை திறந்துவைத்தும், ஜே.ஜே.நகர் மற்றும் இந்திரா நகரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.14.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பகுதி நேர ரேசன் கடை கட்டிடத்தையும் அமைச்சர் காந்தி தொடங்கி வைத்து பொருட்களை பொது மக்களுக்கு வழங்கினார்.

    தொடர்ந்து குடிமல்லூர் ஊராட்சியில் வட்டார ஊராட்சி நிதி ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய தரைமட்ட நீர் தேக்க தொட்டியினையும், விசி.மோட்டூர் ஊராட்சியில் பி.ஆர் அம்பேத்கர் நகரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.23.57 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தையும், வட்டார ஊராட்சி நிதி ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல் நீர் தேக்க தொட்டி, துளசி மாட வீதியில் ரூ.10.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய் கல்வெட்டினையும், தனலட்சுமி நகர் பகுதியில் கட்டப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாயினையும் அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்து பார்வையிட்டார்.

    மேலும் பாரத பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகளையும், 15 பயனாளிகளுக்கு முதியோர் ஓய்வு ஊதியம் பெறுவதற்கான ஆணைகளையும், 5 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை களையும் அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.

    Next Story
    ×