என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • மளிகை கடையில் பதுக்கி விற்பனை
    • 10 பாக்கெட்டுகள் பறிமுதல்

    வாலாஜா

    வாலாஜா நெல்லிசெட்டி தெருவில் வாலிபர் ஒருவர் மளிகை கடை வைத்துள்ளார். இவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனைக்கு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

    இதுபற்றி தகவல் அறிந்த வாலாஜா போலீசார் கடையில் சோதனை நடத்தி 10 பாக்கெட் புகையிலை பொருட் களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    • தனியார் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை செய்து வந்தார்
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை அடுத்த புதேரி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரராஜன் (வயது 28).

    வாலிபர்

    ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் சூப்பர்வை சராக வேலை செய்து வந்தார். இவருக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்ட தாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு தூங்கச் சென்றுள்ளார். நேற்று காலை பார்த்த போது சுந்த ரராஜன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    தூக்கிட்டு தற்கொலை

    இது குறித்து ஆற்காடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சம்ப வம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒரே ஒரு மகளை மட்டுமே பெற்றெடுத்துள்ள இளம்பெண்ணின் பெற்றோர், தலை தீபாவளிக்காக அழைப்பு விடுத்தனர்.
    • சரத்குமார், தனது மனைவியுடன் மாமியார் வீட்டிற்கு சென்றார். தொடர்ந்து நேற்று முன்தினம் தலை தீபாவளி கொண்டாடினர்.

    சோளிங்கர்:

    திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே உள்ள ஐயனேரி கிராமத்தை சேர்ந்தவர் சரத்குமார் (வயது22). இவர் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் நடனமாடுவதற்கான இசை குழு நடத்தி வந்தார்.

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே ஆயலாம்பேட்டையை சேர்ந்த 19 வயது மாணவியை காதலித்தார்.

    இவர்களது காதல் விவகாரம் அறிந்த பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெற்றோர் எதிர்ப்பை மீறி இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து பெற்றோர் ஏற்றுக்கொண்டதால் சரத்குமாரின் வீட்டில் காதல்மனைவியுடன் வசிக்க தொடங்கினார்.

    ஒரே ஒரு மகளை மட்டுமே பெற்றெடுத்துள்ள இளம்பெண்ணின் பெற்றோர், தலை தீபாவளிக்காக அழைப்பு விடுத்தனர். சரத்குமார், தனது மனைவியுடன் மாமியார் வீட்டிற்கு சென்றார். தொடர்ந்து நேற்று முன்தினம் தலை தீபாவளி கொண்டாடினர்.

    இரவு சரத்குமார் தனது பைக்கிற்கு பெட்ரோல் போட வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டார். அப்போது அவரது மாமனார் உமாபதியும் அவருடன் பைக்கில் சென்றார்.

    சோளிங்கர் அடுத்த ஐப்பேடு பஸ் நிறுத்தம் அருகே உள்ள பங்க்கில் இரவு 7 மணியளவில் பெட்ரோல் போட முயன்றனர். அப்போது கையில் கத்தி, உருட்டுக் கட்டை என ஆயுதங்களுடன் 4 பைக்குகளில் வந்த 10 பேர் கும்பல் திடீரென சரத்குமாரை தாக்கினர்.

    தடுக்க முயன்ற மாமனார் உமாபதிக்கும் சரமாரி அடி, உதை விழுந்துள்ளது. இதில் உமாபதி லேசான காயமடைந்தார். பின்னர் சரத்குமாரை அந்த கும்பல் பைக்கில் கடத்திச் சென்றது. அதிர்ச்சியடைந்த உமாபதி, அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார்.

    அங்கு வந்த அவர்கள் சரத்குமாரை தேடினர். இதற்கிடையில் சரத்குமாரை சுமார் 2 கி.மீ தூரத்துக்கு கடத்திய கும்பல், கூடலூர் அருகே உள்ள ஒரு மறைவான இடத்தில் வைத்து சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியது. சரத்குமாரை தேடிச்சென்ற மாமனார் உமாபதி மற்றும் உறவினர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த சரத்குமார் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் இறந்தார். சோளிங்கர் போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அரக்கோணம் ஏஎஸ்பி கிரிஷ் யாதவ் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

    முன்விரோதம் காரணமாக யாராவது கூலிப்படையை ஏவி சரத்குமாரை கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    கொலை தொடர்பாக உறவினர்கள் உட்பட பலரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    • உடல்நலக்குறைவால் பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் , அம்மூர் அருகே உள்ள மேல் வேலம் பகுதியை சேர்ந்தவர் லாவண்யா ( வயது 19 ) . இவர் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார் .

    இவருக்கு தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மாணவி லாவண்யா வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார் .

    இது குறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

    • ஓடையில் இறங்கி குளித்த போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த ரெண்டாடி ஊராட்சிக்கு உட்பட்ட ஏரி முன்னூர் கிராமத்தை சேர்ந்தவர் ரத்நன ரெட்டி (வயது 70). இவர் நேற்று முன்தினம் காலையில் தனக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு சென்றிருந்தார். பின்னர் வீடு திரும்பியபோது விவசாய நிலத்தின் அருகே செல்லும்போது ஓடை கால்வாயில் இறங்கி குளித்துள்ளார்.

    அப்போது திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ரத்தின ரெட்டி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். இது பற்றி சோளிங்க தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று ரத்தன ரெட்டியை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரமாகியும் கண்டுபிடிக்க முடியாததால் அவரை தேடும் பணி கைவிடப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை மீண்டும் அவரை தேடும் பணி நடந்தது.

    நீண்ட நேர தேடலுக்கு பின்னர் ரத்தினரெட்டி பிணமாக மீட்கப்பட்டார்.அவரது உடலை மீட்டு சோளிங்கர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தீபாவளி பட்டாசு வெடித்த போது விபரீதம்
    • 146 பேர் காயம்

    ராணிப்பேட்டை:

    வேலூர் தீயணைப்பு மண்டலத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் உள்ளன.

    இந்த 7 மாவட்டங்களில் விபத்தில் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது குறித்து தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தினர். மேலும் பல்வேறு இடங்களில் துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர்.

    பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும். எந்த வகையிலும் விபத்து இல்லாமல் தீபாவளி கொண்டாட வேண்டுமென அறிவுறுத்தினர்.

    இந்த 7 மாவட்டங்களில் நேற்று தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடிக்கும் போது 46 இடங்களில் லேசான தீ விபத்து ஏற்பட்டது.

    தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர்.இதில் 146 பேர் காயமடைந்தனர்.அவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர்.

    • வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நடந்தது
    • பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது

    வாலாஜா:

    வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஸ்ரீ லஷ்மி குபேரர் யாகம், அபிஷேக பூஜைகள் வாலாஜா, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி டாக்டர் ஸ்ரீ முரளிதர சாமிகள் 5 அடி உயரத்தில் பத்மநிதி, சங்கநிதியுடன் ஸ்ரீ லஷ்மி குபேரருக்கு தனி சன்னதி அமைந்துள்ளது.

    ஸ்ரீ லஷ்மி குபேரர் யாகம்

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உலக மக்கள் அனைவரும் ஐஸ்வர்யம் பெற்று ஆரோக்யமுடன், ஆனந்தமாக வாழ ஸ்ரீ லஷ்மி குபேரர் யாகம் நடைபெற்றது.

    பின்னர் ஸ்ரீ லஷ்மி குபேரருக்கு சிறப்பு அபிஷேகங்களும், பலவித வண்ண மலர்களால் விசேஷ அர்ச்சனை, தீப சேவை ஆகியவையும் நடைபெற்றது.

    யாகம் மற்றும் அபிஷேகத்தில் பங்கேற்று வழிபட்ட பக்தர்களுக்கு பிரசாதமும், குபேர ரட்சை, டாலர், குங்குமம் ஆகியவை வழங்கப்பட்டன.

    இதனை தொடர்ந்து இன்று அமாவாசை முன்னிட்டு ஸ்ரீ சரப சூலினி ப்ரத்யங்கிரா தேவி யாகமும் சிறப்பு பூஜையும் நடைபெற்றது.

    • அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்தனர்
    • அதிகாரிகள் நிவாரண பொருட்கள் வழங்கினர்

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சக்கரமல்லூரை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி ஜானகி. இவருக்கு கணவர் இல்லாததால் ஜானகி மட்டும் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று தீபாவளியையொட்டி அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

    அப்போது பட்டாசு வெடித்து ஜானகியின் குடிசை வீட்டின் மீது விழுந்தது. சிறிது நேரத்தில் குடிசை வீடு மளமளவென தீப்பற்றி எரிந்தது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் தங்கள் வீடுகளில் இருந்த தண்ணீரை குடிசை வீட்டின் மீது ஊற்றி தீயை அணைத்தனர். அதற்குள் வீட்டிலிருந்த துணிமணிகள் எரிந்து நாசமானது.

    இதுகுறித்து தகவல் அறிந்த தாசில்தார் கோபாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் வருவாய் அலுவலர் வினோத் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று குடிசை வீட்டில் இருந்த ஜானகிக்கு நிவாரண பொருட்களை வழங்கினர்.

    • ரூ.31 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனை
    • கலெக்டர் பங்கேற்பு

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலகத்துறை சார்பாக முதலாவது மாபெரும் புத்தகக் கண்காட்சி கடந்த 14-ந்தேதியில் இருந்து நேற்று வரை நடந்தது.

    நிறைவு நாளான நேற்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பங்கேற்று புத்தகம் வாசித்தலின் முக் கியத்துவம் குறித்து மாணவ-மாணவிகள், பொதுமக்களிடம் எடுத்துரைத்தார். விழாவில் நடந்த கலை நிகழ்ச்சிகள், கருத்த ரங்குகள்,பட்டிமன்றங்கள் போன்றவற்றில் பங்கேற்று கண்டு களித்தார்.

    புத்தகக் கண்காட்சியில் 40 புத்தக அரங்குகள் அமைக்கப் பட்டு இருந்தன. 13 அரசு துறைகள் பல்துறை பணி விளக்க கண்காட்சியும், 6 உணவு விற்பனை அரங்குகளும் அமைக் கப்பட்டு இருந்தன. கண்காட்சியில் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவரவர்களுக்கு தேவையான புத்தகங் களும், மிகப் பெரிய எழுத்தாளர்கள் எழுதிய பல்வேறு வகை யான புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன.

    தினமும் புத்தகக் கண்காட்சியில் மாலை நேரத்தில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், 6 பரத நாட்டிய குழுவினரின் கலை நிகழ்ச்சிகள், மாணவ-மாணவிகள் மற்றும் பேச்சாளர்களின் 7 பட்டிமன்றங்கள், கவியரங்கங்கள் நடந் தன.

    பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் எழுதிய எழுத்தா ளர்களின் 10 புத்தகங்கள் மாவட்ட கலெக்டரால் தினமும் நடந்த நிகழ்ச்சிகளில் வெளியிடப்பட்டன.

    புத்தகக் கண்காட்சி நிறைவு நாள் விழாவில் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் என மொத்தம் 91 ஆயிரம் பேர் பங்கேற்றனர். 14-ந்தேதியில் இருந்து நேற்று வரை மொத்தம் ரூ.31%, லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.குமரேஸ்வ ரன், கல்லூரி முதல்வர் பூங்குழலி, துணை கலெக்டர் கவிதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், தாசில் தார்கள் ஆனந்தன், விஜயகுமார் (குற்றவியல்) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வெளி ஊருக்கு வேலைக்கு செல்ல கூடாது என ஆவேசம்
    • போலீசார் விசாரணை

    சோளிங்கர்:

    சோளிங்கர் அடுத்த ஐப்பேடு கீழ் மோட்டூரை சேர்ந்த 20 பெண்கள் வாலாஜா அருகில் உள்ள ஒரு தனி யார் ஷூ நிறுவனத்தில் ஊழியாக ளாக வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் தினமும் அந்த நிறுவனத்துக்கு, ஒப்பந்த அடிப்படையில் இயக் கப்படும் ஒரு வேனில் வேலைக்குச் சென்று வருகின்றனர்.

    அவர்களை அதே ஊரைச் சேர்ந்தவரும் நெல் அறுவடை செய்யும் எந்திரத்தை இயக்கும் டிரைவரான ராஜ்குமார் (வயது 38) என்பவர், நீங்கள் இந்த ஊரில் இருந்து அந்த வேனில் சென்று வேலை செய்யக்கூடாது எனக்கூறி, அந்த பெண்களை தகாத வார்த்தைகளால் பேசி திட்டியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அந்த 20 பெண்களும் சோளிங்கர் போலீசில் ராஜ்குமார் மீது புகார் செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் மோகன், பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக் குப்பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • அசம்பாவிதம் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை
    • ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் பறிமுதல்

    அரக்கோணம்:

    தீபாவளி பண்டிகை நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப் பட உள்ளது. அதையொட்டி பொதுமக்கள் கடைகளுக்கு சென்று புதிய ஆடைகள், பட்டாசுகள் மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க வருகின்றனர்.

    இதனால் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்காமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் தாசன் மற்றும் போலீசார் அரக்கோணம் பழைய பஸ் நிலையத்தில் தீவிர வாகன தணிக்கையில் ஈடு பட்டனர்.

    மோட்டார்சைக்கிள்களை ஓட்டி வருபவர்களிடம் உரிய ஆவணங்களை சரி பார்த்து அனுப்பினர். யாரேனும் குடி போதையில் வாகனங்களை ஓட்டி வருகிறார்களா? என்றும் சோதனை செய்தனர். உரிய ஆவணங்கள் இல்லாத வாகனங் களை பறிமுதல் செய்தனர்.

    • பாணாவரம் ரெயில் நிலையம் அருகே மீட்பு
    • போலீசார் விசாரணை

    நெமிலி:

    பாணாவரம் அடுத்த மகேந்திரவாடி ரெயில் நிலையம் அருகே 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக காட்பாடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ரெயில்வே போலீசார் அந்தப் பகுதியில் இறந்து கிடந்த பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×