என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sometimes the footbridge gets waterlogged due to rain."

    • கலெக்டர் பைக்கில் சென்று பார்வையிட்டார்
    • நிரந்தர தீர்வு காண வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தல்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட புதுப்பேட்டை சாலையில் ரெயில்வே தரைப்பாலம் உள்ளது. இதன் வழியாக நாட்டறம்பள்ளி, புதுப்பேட்டை உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தரைப்பாலத்தின் வழியாகத்தான் திருப்பத்தூர் வந்து செல்ல வேண்டும். திருப்பத்தூர் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக தரைப்பாலத்தில் எப்போது தண்ணீர் தேங்கிக்கொண்டே இருக்கும்.

    இதனால் அவ்வப்போது மோட்டார் பயன்படுத்தி தண்ணீரை வெளியேற்றி வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் திருப்பத்தூர் பகுதியில் பெய்த பலத்த மழையால் ரெயில்வே தாரைப்பாலத்தில் அளவுக்கு அதிகமான தண்ணீர் தேங்கி நின்றது.

    அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளிலும் பள்ளியிலும் மழைநீர் புகுந்தது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

    அதைத்தொடர்ந்து நேற்று மாலை கலெக்டர் அமர்குஷ்வாஹா அப்பகுதிக்கு சென்று தரைப்பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தரைப்பாலத்தில் தண்ணீர் தடையின்றி செல்லவும், அதற்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக அப்பகுதியில் கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது அந்த இடங்களுக்கு கார் செல்ல முடியவில்லை. இதனால் காரை நிறுத்திவிட்டு, மோட்டார் சைக்கிளை பெற்றுக்கொண்டு கலெக்டர் அதனை ஒட்டியவாறு சென்று அங்கு கால்வாய் ஏற்படுத்தினால் தண்ணீர் தடையின்றி செல்லுமா என ஆய்வு மேற்கொண்டார். மேலும் தண்ணீர் தங்கு தடையின்றி செல்வதற்கு பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர்முரளி, தாசில்தார் சிவப்பிரகாசம், நகராட்சி ஆணையர் ஜெயராமராஜா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்

    ×