என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜல் ஜீவன் மிஷன் திட்டம் குறித்து டெல்லி அதிகாரிகள் வீடு வீடாக ஆய்வு
    X

    ஜல் ஜீவன் மிஷன் திட்டம் குறித்து டெல்லி அதிகாரிகள் வீடு வீடாக ஆய்வு

    • குடிநீரின் தன்மை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்
    • 13-வகையான ஆய்வுகள் மேற்கொள்வதாக தகவல்

    நெமிலி:

    காவேரிப்பாக்கம் அடுத்த மாமண்டூர் ஊராட்சி, களத்தூர் ஊராட்சி, ஆலப்பாக்கம் ஊராட்சி ஆகிய ஊராட்சி களில் ஜல் ஜீவன் மிஷன் குறித்து, மத்திய குழுவின் சிறப்பு பொறியாளர் சுபாஷ்குமார் சவுத்திரி தலைமையில் அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது இத்திட்டத்தின் வாயிலாக அனைத்து குடும்பங்களும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதா? குடிநீரின் தன்மை, மற்றும் மாதம் தோறும் குடிநீர் ஆய்வு செய்யப்படுகிறா? உள்ளிட்ட விளக்கங்களை அதிகாரி களிடம் கேட்டறிந்தனர்.

    இதனையடுத்து டேங்க் ஆப்ரேட்டர், மகளிர் குழு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உள்ளிட்டவர்களிடமும் இக்குழுவினர் விளக்கங்கள் கேட்டறிந்தனர்.

    அப்போது அவர்கள் தண்ணீரின் காரத்தன்மை, கடினதன்மை, குளோரைடு, உள்ளிட்ட 13-வகையான ஆய்வுகள் மேற்கொள்வ தாக தெரிவித்தனர்.

    பின்னர் இக்குழுவினர் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் குடிநீர் இணைப்பு வழங்கி உள்ள வீடுகளில் தண்ணீர் வருகிறதா? என்பதையும் ஆய்வு செய்து பயனாளிகளிடம் குறைகள் உள்ளதா? எனவும் கேட்டறிந்தனர்.

    அப்போது வேதியியல் நிபுணர் முரளி, திட்ட இயக்குநர் லோகநாயகி, உதவி திட்ட அலுவலர் கவுரி வட்டார வளர்ச்சி அலுவலர் தண்டாயுதபாணி, ஒன்றிய பொறியாளர் ஏகநாதன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சுலோச்சனா பிரகாஷ், மரியப்பிரகாசி கிருஷ்ணன், சாந்தி சுப்பிரமணி, பணி மேற்பார்வையாளர் டீகாராமன் ஊராட்சி செயலர்கள் சங்கர், மகேந்தி ரன், அருள்பாண்டியன், வில்விஜியன் உட்பட பலர் உடனிருந்தனர்.

    இதில் அனைவருக்கும் தரமான குடிநீர் கிடைக்க வேண்டும் என்பது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

    Next Story
    ×