என் மலர்
ராமநாதபுரம்
- செய்யது ஹமீதா கலை கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
- நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் ராஜ சேகர் கலந்து கொண்டார்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. கல்லூரி மாணவிகள் அனைவரும் புத்தாடை அணிந்து வந்து கல்லூரி வளாகத்தில் அத் தப்பூ கோலமிட்டு உற்சாகத்து டன் ஓணம் பண்டிகை கொண்டாடினர். நிகழ்ச்சி யில் கல்லூரி முதல்வர் ராஜ சேகர் கலந்து கொண்டு பேசுகையில், ஆயிரம் ஆண்டு பழமையான இந்த ஓணம் திருவிழா இன்றும் மக்களால் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருவதோடு இந்திய கலாசார நிகழ்வுகளின் பிரதிபலிப்பாக பார்க்கப்படுகிறது என்றார்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற் பாடுகளை தகவல் தொழில் நுட்பத்துறை தலைவர் மலர், வணிகவியல் துறை தலை வர் யமுனா, அனைத்து மகளிர் பேராசிரியர்களும் மாணவிகளும் செய்திருந்தனர். முகமது சதக் அறக்கட்டளை தலைவர் மற்றும் தாளாளர் முகமது யூசுப், நிர்வாக இயக்குநர் ஹாமிது இப்ராகிம், செயலர் ஷர்மிளா, நிர்வாக இயக்குனர் கள் கலந்து கொண்டு ஓணம் பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
- அரசின் திட்டங்கள் உரிய நேரத்தில் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தொழில்துறை ஆணையர் வலியுறுத்தினார்.
- கலெக்டர் விஷ்ணு சந்திரன் முன்னிலை வகித்தார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் மாவட்ட அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் மற்றும் தொழில் துறை ஆணையர் அர்ச்சனா பட்நாயக் தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட த்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து துறை வாரியாக அலுவலர்களுடன் ஆய்வு நடந்தது.
மேலும் மாவட்டத்தில் பல்வேறு அரசுத்துறை களின் சார்பில் கடந்தாண்டு மற்றும் நடப்பாண்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கேட்கப் பட்டது. ஒவ்வொரு துறை யிலும் ஒவ்வொரு ஆண்டும் செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்கள் அந்தந்த ஆண்டிலேயே முடிக்க வேண்டும். அது மட்டுமின்றி பொதுமக்களுக்கு உரிய காலத்தில் அரசின் திட்டங்கள் சென்றால்தான் அதன் பயன் அவர்களுக்கு முழுமையாக கிடைத்திட முடியும் என்பதை அறிந்து அந்தந்த துறைகள் செயல்படுவதுடன் திட்டங்கள் சென்றடைவதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும் என தொழில்துறை ஆணையர் அர்ச்சனா அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
முன்னதாக மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் அர்ச்சனா பட்நாயக் குயவன்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி யில் காலை உணவு திட்டத்தின் பணிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் தோட்டக்க லைத்துறையின் மூலம் சுந்த ரமுடையான் ஊராட்சியில் பராமரிக்கப்பட்டு வரும் நாற்றங்கால் பண்ணையினையும், நொச்சி ஊரணியில் உள்ள நாற்றங்கால் பண்ணை யினையும் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலை) பூவராகவன் அவர்கள், பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதா ஹனிப் அவர்கள், உதவி கலெக்டர் (பயிற்சி) சிவானந்தம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அயல்நாட்டு வேலை வாய்ப்புக்கு ராமநாதபுரம் மாவட்ட நர்சிங் படித்த மகளிர் விண்ணப்பம் செய்யலாம்.
- இந்நிறுவன வலைத்த–ளமான www.omcnanpower.com-ல் கண்டு பயனடை–யுமாறு கேட்டுக்கொள்ளப்ப டுகிறார்கள்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் பா.விஷ்ணு சந்தி–ரன் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறியிருப்ப–தாவது:-
தமிழக அரசின் அயல் நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் சார்பாக செவிலியர் பணிக்காலியிட அறிவிப்பு வெளியிடப்பட் டுள்ளது. அதில் சவுதி அரே–பிய அமைச்சகத்தில் அரசு மருத்துவமனைகளில் பணி–புரிவதற்கு குறைந்த–பட்சம் இரண்டு வருட பணி அனுப–வத்துடன் பி.எஸ்சி. நர்சிங் தேர்ச்சி பெற்ற 21 முதல் 35 வயதிற்குட்பட்ட பெண் செவிலியர்கள் தேவைப்ப–டுவதாகவும் சான்றி தழ்களில் சான்றொப்பம் பெற்றவர் கள் உடனடியாக விண்ணப் பிக்குமாறும் கூறப்பட்டுள்ளது. மேலும் மேற்படி பணியா–ளர்களுக்கு ரூ.80 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை சம்பளம், உணவுப்படி, இருப்பிடம், விமானப்பய–ணச்சீட்டு ஆகியவை அந் நாட்டின் வேலைய–ளிப்போ–ரால் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி பணிக்கு ராம நாதபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத் தில் 05.09.2023 அன்று காலை 10.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவ னத்தால் பதிவு முகாம் நடைபெறுகிறது. எனவே ராமநாதபுரம் மாவட்டத்தி–னைச் சேர்ந்த தகுதியும் விருப்பமும் உடைய பி.எஸ்சி. நர்சிங் படித்த மகளிர் அனைத்து கல்வி சான்றிதழ்களுடன் இம்முகா–மில் கலந்து கொண்டு தங்க ளது பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் இந்த முகாமிற்கு வரமுடியாதவர்கள் தங்களு–டைய சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்படி வத்தை ovemclmohsa2021@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாக அனுப்பி வைக்கு மாறு கேட்டுக் கொள்ளப்ப டுகிறார்கள். மேலும் இந்தப் பணிக்கு தேர்வு பெறும் பணியாளர்களிடமிருந்து சேவைக்கட்டணமாக ரூ.35,400 மட்டும் வசூலிக் கப்படும் எனத் தெரிவிக் கப்பட்டுள்ளது.
இந்நிறுவனம் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான பணிக்கா–லியிடங்கள் குறித்த விவரங் கள் இந்நிறுவன வலைத்த–ளமான www.omcnanpower.com-ல் கண்டு பயனடை–யுமாறு கேட்டுக்கொள்ளப்ப டுகிறார்கள். மேலும் ஊதி யம் மற்றும் பணி விவரங்கள் பற்றிய விவரங்களை அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறு வன தொலைபேசி எண்க ளின் (95662 39685, 63791 79200) (044-22505886, 044-22502267) வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.
- போக்குவரத்து வழிகாட்டு விதிமுறைகள் வெளியிடப்பட்டது.
- வாகனங்களில் சாதி, மத உணர்வுகளைத் தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்கள் கட்டி வரவோ, கோஷங்களை எழுப்பவோ கூடாது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது:-
வருகிற 11-ந்தேதி பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது. அங்கு அஞ்சலி செலுத்த ராமநாதபுரம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் சொந்த வாகனங்களில் மட்டுமே வர அனுமதிக்கப்படுகிறது.
வாடகை, திறந்த வெளி வாகனங்களில் வர அனுமதி இல்லை. இரு சக்கர வாக னங்கள், டிராக்டர், டாடா ஏஸ், சைக்கிள் போன்ற வாகனங்களில் வர அனுமதி இல்லை. சொந்த வாக னங்களில் வருபவர்கள் உரிய ஆவணங்களை 8-ந்தேதிக்கு முன்னர் உட்கோட்ட அலுவல கங்களில் அளித்து அனுமதி சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும். இதனை வாகனத்தில் முன்புற கண்ணாடியில் ஒட்ட வேண்டும். அனுமதி சீட்டு இல்லாத வாகனங்கள் அனுமதிக் கப்படமாட்டாது. பிற மாவட்டங்களில் இருந்து சொந்த வாகனங்களில் வருபவர்களும் முறையான அனுமதி பெற வேண்டும். அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே நினைவிடத்திற்கு வந்து செல்ல வேண்டும். வாக னத்தின் மேற்கூரையில் பயணம் செய்யக்கூடாது. ஆயுதங்கள் ஏதும் எடுத்துச் செல்லக் கூடாது. பட்டாசுகள் வெடிக்கவோ, ஒலி பெருக்கி கள் பொருத்தியோ செல்லக் கூடாது. வாகனங்களில் சாதி, மத உணர்வுகளைத் தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்கள் கட்டி வரவோ, கோஷங்களை எழுப்பவோ கூடாது. பரமக்குடி நகருக்குள் சந்தைப் பேட்டை சந்திப்பு முதல் காட்டுப்பரமக்குடி வரை தேசிய நெடுஞ் சாலையில் வாகனங்களை நிறுத்த அனுமதி இல்லை.
ஒதுக்கப்பட்ட குறித்த நேரத்தில் அஞ்சலி செலுத்த வேண்டும். நடைபயணமாக அஞ்சலி செலுத்த வரக் கூடாது. பரமக்குடி நகருக்குள் மட்டும் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் நடைபயணம் செல்லலாம்.
சொந்த ஊரில் செப்டம்பர் 11-ந் தேதிக்கு முந்தைய தினமோ, பிந்தைய தினமோ எவ்வித நிகழ்ச்சி கள் கொண்டாடவும், ஒலி பெருக்கி அமைப்பதற்கும் அனுமதி கிடையாது. செப்டம்பர் 11-ந் தேதி மட்டும் அவரவர்களது சொந்த ஊரில் ஒலிபெருக்கி இன்றி புகைப்படம் வைத்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தலாம்.
பரமக்குடி நினைவி டத்தில் செப்டம்பர் 11-ந் தேதி மட்டும் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படும். அலங்கார ஊர்தி அணி வகுப்பு, மாட்டு வண்டியில் வருதல், சாதித் தலைவர்கள் வேடமணிந்து வருதல் ஆகியவற்றுக்கு அனுமதி இல்லை.பரமக்குடி நினைவி டத்தில் 11-ந்தேதி மாலை 4 மணிக்குள் அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துக் கொள்ள வேண்டும். கட்சிகள், அமைப்புகள் 8-ந்தேதி மாலை 5.45 மணிக்கு முன்பாக விண்ணப்பம் அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தனுஷ்கோடியில் சுற்றுலா பயணிகளுக்கான வசதிகள் மேம்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
- உத்தரகோசமங்கையில் உள்ள தமிழ்நாடு ஓட்டலில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் சுற்றுலாத்துறை சார்பில் நடந்து வரும் பணிகளை அமைச்சர் ராமச்சந்திரன், கலெக்டர் விஷ்ணு சந்திரன், சுற்றுலா துறை ஆணையர் சந்தீப் நந்தூரி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
தமிழ்நாடு ஓட்டல்கள், தனுஷ்கோடி ஹெலிகாப்டர் இறங்கும் தளம் அமைவிடம், அதனை தொடர்ந்து தனுஷ் கோடியில் உள்ள ஆங்கிலேயர் கால கட்டப் பட்ட தேவாலயம், அரிச்சல் முனை பகுதிகளில் அவர்கள் ஆய்வு செய்தனர்.
பின்னர் அமைச்சர் கூறியதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், மண்டபம், தனுஷ்கோடி, உத்திரகோசமங்கை ஆகிய பகுதிகளில் உள்ள சுற்றுலா துறைக்கு சொந்தமான இடங்கள் ஆய்வு செய்யப் படுகிறது. ராமேசுவரத்தில் புதிய தமிழ்நாடு ஓட்டல் அமைக்கவும், பழயை ஓட்டல்களை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தனுஷ்கோடியில் சிதிலமடைந்து காணப்படும் தேவாலயத்தை ரூ.5 கோடி மதிப்பில் பழமை மாறாமல் புனரமைக்க திட்டமிடப் பட்டுள்ளது.
தனுஷ்கோடி பகுதிக்கு ஆண்டிற்கு சுமார் 3 கோடியே 80 லட்சம் பேருக்கு மேல் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வார் கள் என எதிர்பார்க்கப்படு கிறது. இந்த நிலையில் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்துவதற்கு ஆய்வு செய்யப்படுகிறது.
நடராஜபுரத்தில் ஹெலிகாப்டர் தளம் அமைப்பதற்கு 13.15 ஹெக்டர் இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான அனுமதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
உத்தரகோசமங்கையில் உள்ள தமிழ்நாடு ஓட்டலில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., நகர் மன்ற தலைவர் நாசர் கான், தமிழ்நாடு சுற்றுலாத்துறை மண்டல மேலாளர்கள் டேவிட் பிரபு, ஜான், மாவட்ட சுற்றுலா அலுவலர் அருண் பிரசாத், ராமேசுவரம் நகராட்சி ஆணையர் கண்ணன், ராமேசுவரம் வட்டாட்சியர்கள் பால கிருஷ்ணன், அப்துல் ஜபார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மின்சாரம் தாக்கி மாடுகளை இழந்தவர்களுக்கு அமைச்சர் சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.
- செயலாளர் முத்துப் பாண்டி, அலுவலக உதவி யாளர்கள் சத்தியேந்திரன், டோனி, ரஞ்சித் ஆகியோர் உடனிருந்தனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பறையங்குளத்தைச் சேர்ந்த ஆறுமுகம் கருமலையான், வெள்ளைச்சாமி, முனியசாமி ஆகியோரின் 5 பசு மாடுகள் கடந்த 27-ந் தேதி மேய்ச்சலுக்கு போகும்போது மின்சாரம் தாக்கி இறந்தன. இதனை அறிந்த அமைச்சர் ராஜ கண்ணப்பன் உயிரிழந்த மாடுகளின் உரிமையா ளர்களுக்கு நிதி உதவி அளிக்க உத்தரவிட்டார்.
இதனையடுத்து அமைச்சர் சார்பில் கமுதி தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் மனோகரன், மாடுகளின் உரிமையா ளர்களிடம் நிதியுதவி வழங்கினார். அப்போது மாவட்ட கவுன்சிலர் சசிகுமார் போஸ், ஒன்றிய கவுன்சிலர் முருகன்,கிளைச் செயலாளர் வீரபத்திரன், செயலாளர் முத்துப் பாண்டி, அலுவலக உதவி யாளர்கள் சத்தியேந்திரன், டோனி, ரஞ்சித் ஆகியோர் உடனிருந்தனர்.
- ராமநாதபுரம் அருகே சோமவார பிரதோஷ வழிபாடு நடந்தது.
- திருவாடானை ஆதி ரெத்தினேஸ்வரர் ஆகிய சிவாலயங்களிலும் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது அன்னபூர னேசுவரி சமேத நம்பு ஈஸ்வரர் கோவில். வாலி வழிபட்ட தலம் என கூறப்படுகிறது.
அதற்கு சாட்சியாக சீதையை மீட்கும் முன் ராமபிரான் இவ்வழி யாக இலங்கை செல்லும் போது வழிபட்ட வெயிலுக்குகந்த விநாயகர் கோயில் இங்கிருந்து 10 கிலோ மீட்டர் தூர உள்ள உப்பூரில் உள்ளது.
மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலில் சோமவார பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. நந்திக்கு பால், பழம், பன்னீர், தயிர், சந்தனம், இளநீர், விபூதி பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. மேலும் பரிவார தெய்வங்களான விநாயகர், முருகன் தட்சி ணாமுர்த்தி, லிங்கோத்பவர், விஷ்ணு துர்க்கை, பைரவர், கல்யாண நவக்கிரங்க ளுக்கும் சிறப்பு அபிஷே கங்கள் நடைபெற்றது. பூஜை ஏற்பாடுகளை வாசு, கருப்பசாமி, சுவாமிநாதன் ஆகியோர் செய்திருந்தனர்.விரதமிருந்த பெண்கள் கோவிலைச்சுற்றி வந்து வழிபட்டனர்.
அதனைத் தொடர்ந்து உற்சவ மூர்த்தி வீதி உலா வந்ததை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.அபிஷேக பால் மற்றும் நெய்வேத்தியம் செய்யப்பட்ட சர்க்கரை பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது. பெண்கள் குழந்தைகள் ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.
இதே போல் தொண்டி சிதம்பரேஸ்வரர் கோவில், தீர்த்தாண்டதானம் சர்வ தீர்த்தேஸ்வரர், சுந்தர பாண்டிய பட்டிணம் ஏகாம்பரேஸ்வரர், ஓரியூர் சேயுமானவர், தளிர் மருங்கூர் உலகேஸ்வரர், திருவாடானை ஆதி ரெத்தினேஸ்வரர் ஆகிய சிவாலயங்களிலும் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
- ராமநாதபுரத்தில் தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது
- இதன் ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார் செய்திருந்தார்.
ராமநாதபுரம்
மேஜர் தயான் சந்த் 123-வது பிறந்தநாள் ஆகஸ்ட் 29-ந்தேதி (இன்று) இந்திய விளையாட்டு தினமாக நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ராமநாதபுரத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக தேசிய விளையாட்டு தினம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் தயான் சந்த் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர்கள் தூவி கேக் வெட்டி விளையாட்டு வீரர்கள் முன்னிலையில் கொண்டாடப்பட்டது.
இதில் ஹாக்கி, 100 மீட்டர் ஓட்டப்போட்டி, சதுரங்கம், கேரம், நடை போட்டி ஆகியய விளையாட்டுகள் நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக தேசிய ஹாக்கி விளையாட்டு வீரர் சுங்க இலாகா துறை ஆய்வாளர் சத்யராஜ், இன்ஸ்பெக்டர் சரவணகுமார், சட்டக் ராமநாதபுரம் சட்டக் கல்லூரி முதல்வர், ராமநாதபுரம் மாவட்ட ஆக்கி சங்கம் செயலாளர் கிழவன் சேதுபதி, மாவட்ட ஹாக்கி பயிற்சியாளர் மணிகண்டன், உடற்கல்வி ஆசிரியர் இயக்குநர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதன் ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார் செய்திருந்தார்.
- த.மு.மு.க.வின் 29-ம் ஆண்டு தொடக்க விழா நடந்தது.
- சின்னக் கடை பகுதி அக்பர் அலி என்பவருக்கு இருதய சிகிச்சைக்காக ரூ. 10 ஆயிரம் மருத்துவ உதவியாக வழங் கப்பட்டது.
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் த.மு.மு.க.வின் 29-வது ஆண்டை முன்னிட்டு மாநில துணை பொது செயலாளர் சலி முல்லாஹ்கான் தலைமை யில் குமரய்யா கோவில் அருகில் த.மு.மு.க. கொடி யை ஏற்றி வைத்து தொண் டர்களுக்கும், பொது மக்களுக்கும் இனிப்பு வழங் கினர். அப்போது சின்னக் கடை பகுதி அக்பர் அலி என்பவருக்கு இருதய சிகிச்சைக்காக ரூ. 10 ஆயிரம் மருத்துவ உதவியாக வழங் கப்பட்டது.
தொடர்ந்து வாலாந்தர வையில் இயங்கி வரும் செஸ்ட் ஏஞ்சலின் மன வளர்ச்சி குன்றிய 120 மாண வர்கள், முதியவர்களுக்கு மதிய உணவு தயார் செய்து வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் த.மு.மு.க. மாவட்டத் தலைவர் பிரி மியர் இப்ராஹிம், மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், மாவட்ட பொருளாளர் சபிக் ரஹ்மான், ம.ம.க. மாவட்டச் செயலாளர் ஆஷிக்சுல்தான், 15-வது வார்டு நகர் மன்ற உறுப்பி னர் காதர் பிச்சை, மேற்கு மாவட்ட தலைவர் ஷேக் அப்துல்லா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- தர்கா சந்தனக்கூடு விழாவில் திரளானோர் பங்கேற்றனர்.
- சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து, 5 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
பசும்பொன்
கமுதியில் பிரசித்தி பெற்ற முஸாபர் அவுலியா தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா வருடா வருடம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வருட சந்தனக்கூடு திருவிழா கடந்த 18-ந்தேதி இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நேற்று முன்தினம் நள்ளிரவு சந்தன கூடு திருவிழா நடைபெற்றது. முன்னதாக கமுதி- சுந்தரபுரம் தைக்கா வீட்டில் இருந்து இந்த சந்தன கூடு ஊர்வலம் புறப்பட்டது.தர்ஹா வின் நிர்வாக தலைவரும், பேரூராட்சி தலைவருமான அப்துல் வஹாப் சகாராணி மலர்களால் அலங்கரிக் கப்பட்ட சந்தன குடத்தை, அலங்கார மின் விளக்கு களால் அலங்கரிக்கப்பட்ட சந்தன கூட்டில் வைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.
ஏராளமான முஸ்லிம் மற்றும் இந்துக்கள் கலந்து கொண்ட இந்த ஊர்வலத்தின் முன்பு இளைஞர்கள் தீப்பந் தாட்டம் சுற்றி கொண்டே சென்றனர். இரவு முழுவதும் முஸ்லிம் பஜார் மற்றும் முஸ்லிம் தெருக்கள் வழியாக சென்ற இந்த சந்தனக்கூடு ஊர்வ லம் அதிகாலை தர்ஹாவை வந்தடைந்தது. இந் நிகழ்ச்சியில் சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து, 5 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
- காவலர் தேர்வுக்கு இலவச பயிற்சி முகாம் நடந்தது.
- கடந்த 18-ந் தேதி முதல் வருகிற 17-ந் தேதி வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இளைஞர்கள் படித்து பயன்பெரும் வண் ணம் தன்னார்வ பயிலகம் இயங்கி வருகிறது.
இத்தன்னார்வ பயிலகத் தில் பல்வேறு வகையான போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ள 2-ம் நிலை காவலர், சிறைக்காவ லர் மற்றும் தீயணைப்பாளர் பணி காலியிட அறிவிக்கை வெளியிடப்பட்டு 3,359 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
இத்தேர்விற்கு விண்ணப் பதாரர்கள் www.tnusrb.tn.gov.in என்ற இணைய தளத்தின் வாயிலாக கடந்த 18-ந் தேதி முதல் வருகிற 17-ந் தேதி வரை விண்ணப் பித்துக் கொள்ளலாம். இதற் கான தேர்வுகட்டணம் ரூ.250 ஆகும்.
இப்போட்டி த்தேர்வுக் கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தில் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு தொடங்கப்படவுள்ளது.
இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இவ்வலுவலக தொலைபேசி எண் 04567-230160 வாயிலா கவும் அல்லது 7867080168 என்ற அலைபேசியின் வாயிலாகவோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொண்டு இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயன் பெறுமாறு மாவட்ட கலெக்டர் விஷ்னு சந்திரன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
- பெண் குழந்தைகளுக்கான வீரதீர செயல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
- ராமநாதபுரம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24-ல் பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காக சிறப்பாக பங்காற்றும் 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு மாநில அரசின் விருது வழங்கப்பட உள்ளது. இதற்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தகுதியான பெண் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்.
இந்த விருதுக்கு விண்ணப்பிக்க வருகிற டிசம்பர் 31-ன்படி 13 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம். பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திரும ணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல், வேறு ஏதாவது வகையில் சிறப்பான/தனித்துவமான சாதனை, பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூட நம்பிக்கைகள் ஆகிவற்றிற்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்பு ணர்வு ஏற்படுத்துவது, ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல் போன்ற வற்றின் அடிப்படையில் விருது வழங்கப்படும்.
இந்த விருதுக்கான விண்ணப்பங்களை வருகிற அக்டோபர் 27-ந் தேதிக்குள் மாவட்ட சமூகநல அலு வலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், ராமநாதபுரம் என்ற முகவரியில் நேரில் சமர்ப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






