என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • காதர்பாட்ஷா வெள்ளைச்சாமி 11-வது ஆண்டு நிைனவு நாள் அனுசரிக்கப்பட்டது.
    • மருத்துவர் திலீப் ராஜகண்ணப்பன் தி.மு.க. நிர்வாகிகளுடன் சென்று புகழஞ்சலி செலுத் தினார்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க. சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினரும், தலைமை செயற்குழு உறுப் பினரும், முன்னாள் கமுதி ஒன்றிய பொறுப்பா ளரும், ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளருமான காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ.வின் தந்தை எஸ்.காதர்பாட்சா (எ) வெள் ளைச்சாமி தேவரின் 11 ஆம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.

    இதையொட்டி மருத்துவர் திலீப் ராஜகண்ணப்பன் தி.மு.க. நிர்வாகிகளுடன் சென்று புகழஞ்சலி செலுத் தினார். முதுகுளத்தூர் ராம்கோ கூட்டுறவு தொழி–லாளர் முன்னேற்ற சங்கத் தின் மெயின் மேலாளரத் தனசேகர சேது, கீழக்கரை ராம்கோ மெயின் மேலாளர் எம்.வாசு, பரமக்குடி ராம்கோ மெயின் மேலாளர் ஏ.சந்திரன், ராமநாதபுரம் ராம்கோ மெயின் மேலாளர் கே.ஜீவா உள்பட திரளா னோர் புகழஞ்சலி செலுத்தினார்கள்.

    • பாரதியார் நினைவுநாள் போட்டிகளில் இஸ்லாமியா பள்ளி மாணவிகள் பரிசுகள் வென்றனர்.
    • இவர்களை பள்ளி தாளாளர் எம் எம்.கே.முகைதீன் இப்ராஹிம், முதல்வர் மேபல் ஜஸ்டஸ் மற்றும் ஆசிரியர்கள், அலு வலர்கள் பாராட்டினர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் தமிழ்ச் சங்கம் சார்பில் 102-வது பாரதியார் நினைவு நாள் கலை போட்டிகள் நடந்தது. இதில் கீழக்கரை இஸ்லா மியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வென்றனர்.

    மனப்பாட போட்டியில் சம்சுன் நிஹாஸா, பாத்திமா சனா, மாறு வேடப் போட்டியில் சித்தி தஸ்ரிபா, தாருன் நிஹா, கட்டுரைப் போட்டியில் சம்சுன் ஃபசிஹா, ஆமினா ருஷ்தா, பேச்சுப்போட்டியில் நஸாஹா, பஸ்ஹா ஆகியோர் பரிசுகள் பெற்றனர். இவர்களை பள்ளி தாளாளர் எம் எம்.கே.முகைதீன் இப்ராஹிம், முதல்வர் மேபல் ஜஸ்டஸ் மற்றும் ஆசிரியர்கள், அலு வலர்கள் பாராட்டினர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 லட்சத்து 58 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.
    • 1078 வாக்குப்பதிவு மையங்கள் என மொத்தம் 1371 வாக்குப் பதிவு மையங்கள் உள்ளன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இந்திய தேர்தல் ஆணையம் அறி வுரைப்படி வாக்குச்சாவடி சீரமைப்புக்கான ஆலோ சனைக்கூட்டம் அங்கீ கரிக்கப் பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னி லையில் நடந்தது.

    இதில் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத் தில், ராமநாதபுரம், முது குளத்தூர், திருவாடனை, பரமக்குடி (தனி) என 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் 5 லட்சத்து 75 ஆயிரத்து 546 ஆண் வாக்காளர்களும், 5 லட்சத்து 81 ஆயிரத்து 268 பெண் வாக்காளர்களும், 68 மற்றவர்களும், 1696 வாக்காளர்கள் (ராணுவத்தில் பணிபுரிப வர்கள்) என மொத்தம் 11,58,578 வாக்காளர்கள் உள்ளனர்.

    கிராமப் பகுதிகளில் 293 வாக்குச்சாவடி மையங் களும், நகர் பகுதியில் 1078 வாக்குப்பதிவு மையங்கள் என மொத்தம் 1371 வாக்குப் பதிவு மையங்கள் உள்ளன.

    பொதுவாக தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் என்பது 1500 வாக்குகளுக்கு மேல் வாக்காளர்கள் இருந்தால் அங்கு 2 வாக்குப்பதிவு மையங்கள் அமைப்பது என்பது ஆணை. அதன் அடிப்படையில் தற்போது 3 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    மேலும் 17 வாக்குச்சாவடி மையங்களில் உட்கட்ட மைப்பு வசதிகளை மேம்படுத்த கோரிக்கைகள் வரப்பெற்றது. 3 வாக்குப்பதிவு மையங்களில் வாக்காளர்கள் பெயர் மாற்றம் குறித்து மனு அளித்துள்ளார்கள்.

    இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது. மேலும் வாக்குச்சாவடி மையங்களின் நிலை குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் தங்கள் வாக்குச்சாவடி மைய அலுவலர்களுடன் களஆய்வு செய்து ஒரு வார காலத்திற்குள் தேவையான கோரிக்கைகள் குறித்து மனுக்கள் வழங்கிட வேண்டும். அவ்வாறு பெறப்படும் மனுக்கள் மீது தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து 4 சட்டமன்ற தொகு திக்குட்பட்ட வாக்குச்சா வடிகளின் இறுதி பட்டியலை கலெக்டர் விஷ்ணு சந்திரன், அரசியல் கட்சி பிரமுக ர்களுக்கு வழங்கி னார்.

    இந்த கூட்டத்தில் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலை) பூவராகவன், ராமநாதபுரம் வருவாய் கோட்டா ட்சியர் கோபு, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கண்ணா கருப்பையா, தேர்தல் வட்டாட்சியர் செல்லப்பா மற்றும் அங்கீகரிக்க ப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கல்வி உதவித்தொகை பெற பள்ளி மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூல மாக மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும், நேரடியாக விண்ணப்பிக்க கூடாது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டம் (புதுமைப்பெண் திட்டம்) முதல்-அமைச்சரால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ந்தேதி அன்று தொடங்கப்பட்டது. இதன் மூலம் அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, மேல் படிப்பு/தொழில்நுட்ப படிப்பு பயிலும் மாணவி களுக்கு மாதம் தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது.

    தற்போது 2023-24-ம் கல்வியாண்டிற்கு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் பயனாளிகளின் சேர்க் கைக்கான வலைத்தளமா னது (www.pudhumaipenn.tn.gov.in) 4.9.2023 அன்று தொடங் கப்பட உள்ளது.

    இந்த வலைத்தளத்தில், மாணவிகள், அனைவரும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக 4.9.2023 முதல் பதிவு செய்யலாம். அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இத்திட்டத்திற்கு தகுதியான வர்கள். மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூல மாக மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும், நேரடியாக விண்ணப்பிக்க கூடாது.

    இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதி வரம்பு குறித்து அனைத்து மாணவிகளுக்கும் கல்வி பயிலும் நிறுவனங்களில் 4.9.2023 முதல் சிறப்பு முகாம்கள் நடைபெறும். மாணவிகள் தவறாமல் அவர்களுடைய ஆதார் அட்டை, ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி எண், வங்கி கணக்கு எண் (ஆதாருடன் இணைக்கப்பட்டது), (மாற்றுச் சான்றிதழ்) சமர்ப்பிக்க வேண்டும்.மேல் படிப்பு மற்றும் தொழில்நுட்ப படிப்புகளில் பயிலும் இத்திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த மாணவிகள் அனைவரும் தாங்கள் பயிலும் கல்லூரியில் உள்ள பொறுப்பு அலுவலர்கள் மூலம் தவறாமல் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தண்ணீர் குடித்து உடல் நலம் பாதித்த மாணவிகளுக்கு எம்.எல்.ஏ. ஆறுதல் கூறினார்.
    • புதிய நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

    பரமக்குடி

    பரமக்குடி அருகே பரமக்குடி அருகே எஸ்.அண்டக்குடி பஞ்சாயத்தில் மீனங்குடி கிராமம் உள்ளது. கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக நீர் தேக்க தொட்டி உள்ளது.

    நேற்று குடிநீர் வினியோ கம் செய்யப்பட்ட நிலையில் அதனை குடித்த பள்ளி மாணவ மாணவிகள் திடீரென மயக்கம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தம்மாள் சந்திரன் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்கள் உதவியுடன் மயக்கமடைந்த மாணவ மாணவிகளை மீட்டு பரமக்குடி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    இது குறித்த தகவல் அறிந்த பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் மருத்துவ மனைக்கு வந்து மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். இதனை தொடர்ந்து மருத்துவர்களை அழைத்து மாணவ மாணவிகளுக்கு தீவிரச் சிகிச்சை வழங்குமாறு கேட்டுக் கொண்டார். மேலும் மீனங்குடி கிராமத்திற்கு சென்று பொது மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய பின் தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்து சுத்தமாக பராமரிக்க வேண்டும். புதிய நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

    பரமக்குடி நகர்மன்ற உறுப்பினர் சேது கருணாநிதி, பரமக்குடி தாசில்தார் ரவி ஆகியோர் உடனிருந்தனர்.

    பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல் மீனங்குடி கிராமத்திற்கு சென்று அங்கு விநியோகம் செய்யப்பட்ட குடிநீரை வாங்கி குடித்து ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனைக்கு சென்று மாணவ மாணவிகளுக்கு ஆறுதல் கூறினார்.

    • ஆதரவற்றோர்களை மனநல காப்பகத்தில் சேர்க்க வேண்டும்.
    • அவர்க ளுக்கு போதிய வசதி ஏற்படுத்தி கொடுத்து மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத் தில் பெரும்பாலும் பஸ் நிலையங்கள், கோவில், சுற்றுலா தலங்களுக்கு அருகே மனநிலை பாதிக்கப் பட்டவர்கள், ஆதவற்ற முதியோர்கள் என பலர் சுற்றித் திரிகின்றனர். இவற் றில் பெரும்பாலானோர் மனநிலை பாதிக்கப்பட்ட வர்கவே இருக்கிறார்கள். குறிப்பாக ராமேசுவரம், ஏர்வாடி, தேவிபட்டினம் பகுதிகளில் அதிகம் இவர் களை பார்க்க முடிகிறது.

    துணிகளை மூட்டைக ளாக கட்டிக்கொண்டும், கால்களில் புண்களோடும், காயங்களோடும் நடக்க முடி யாமல் ரோட்டில் ஊர்ந்து சென்று கொண்டி ருக்கின்ற னர். சிலர் அவர்கள் மீது கற்களை எறிவது, வம்பிழுப் பது என அதிகம் தொந்தரவு செய்கின்றனர். இதனால் இவர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். பரிதாபப் பட்டு யாரேனும் இவர்க–ளுக்கு உணவு அளித்தால் தான் உண்டு. இல்லையேல் பட்டினிதான். அதை அவர்க–ளுக்கு சொல்லவும் தெரிய–வில்லை.

    இவர்களை அதிகாரிகள் கண்காணித்து முறையான மருத்துவம் அளித்து காப்ப–கங்களில் அனுமதிக்க வேண்டும். அதே நேரத்தில் பொதுமக்களும் பொறுப் புணர்ந்து செயல்பட வேண் டும். இதுபோன்று இருப்ப வர்களை துன்புறுத்தாமல் நடந்து கொள்ள வேண்டும். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இதுபோல் சுற்றித்திரிவோர் அதிகம். மாவட்டம் தோறும் அரசு காப்பகங்கள் அதிகப்படுத்த வேண்டும். இதோடு அவர்களுக்கு போதிய வசதி ஏற்ப டுத்தி கொடுத்து மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

    • தட்டம்மை நோய் தடுப்பூசி முகாம் நடந்தது.
    • இம்முகாமில் ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொண்ட னர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி யில் ரோட்டரி சங்கம் ராமநாதபுரம் சுகாதாரப்பி–ரிவு இந்திய குழந்தைகள் மருத்துவக்கழகம் இணைந்து நடத்திய தட்டம்மை நோய் குறித்து விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி முகாம் ரோட்டரி சங்க தலைவர் கபிர் தலைமையில் நடை–பெற்றது.

    செயலாளர் எபன் வர வேற்றார். தட்டம்மையால் ஏற்படும் விளைவுகள் மற்றும் தடுப்பூசியால் போடு வதால்ஏற்படும் நன்மைகள் பற்றிய கருத்துக்களை கீழக் கரை தலைமை மருத்துவர் டாக்டர் ஜவாஹிர் ஹுசைன் பேசினார். திருப்புல்லாணி வட்டார மருத்துவர் ராசிக் தீன் தலைமை உரையாற்றி னார்.

    கருத்தரங்கின் நோக் கத்தை குழந்தை நல மருத்து வர் அய்சத்துல் நசிதா எடுத்துரைத்தனர். இம்முகா மில் இஸ்லாமிய மெட்ரிக் பள்ளியின் தலைமையாசிரி யர் மேபல் ஜஸ்டஸ், மாவட்ட தாய் சேய் நல அலு வலர் ரஹ்மத் நிஷா, மருத்துவர் ராம்பாபு, ரோட் டரி சங்கம் முன்னாள் தலை வர்கள் சுப்பிரமணியன், டாக்டர் சுந்தரம், மற்றும் நூகு, சிவகார்த்திக், சபிக்,

    பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் செவிலியர்கள், மற்றும் ரோட்டரி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இம்மு காமில் ஏராளமான மாண வர்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொண்ட னர்.

    • வருவாய்த்துறை சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
    • வட்ட வழங்க அலுவலர்கள், அனைத்து வருவாய் ஆய்வா ளர்கள், பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் கிளை சங்கம் சார்பில் முதுகுளத் தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டார தலைவர் சிங்க முத்து தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெரியசாமி, சாந்தி, வட்டாட்சியர் சடையாண்டி மற்றும் வட்ட செயலாளர் தினேஷ் பிரபு ஆகியோர் முன்னிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி மாவட்ட கலெக்டரின் அனுமதியுடன் ஆக்கிர மிப்பை அகற்ற நடவடிக்கை எடுத்த கள்ளக்குறிச்சி வட்டாட் சியர் மனோஜ் முனியன் அவர்களை பணி நீக்கம் செய்ததை கண்டித்து காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் தலைமை துணை வட்டாட்சியர், மண்டல துணை வட்டாட்சியர் கள், வட்ட வழங்க அலுவலர்கள், அனைத்து வருவாய் ஆய்வா ளர்கள், பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • தேசிய விளையாட்டு விழா நடந்தது.
    • நலப்படுத்திட்ட அலுவலர்கள் சுலைமான், சதாம் உசேன், முனிய சத்யா ஆகியோர் செய்திருந்தனர்.

    கீழக்கரை

    கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உடற்கல்வித்துறை மற்றும் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் இந்திய தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ராஜசேகர் தலைமை தாங்கி பேசுகையில், இந்தியாவின் சிறந்த ஆக்கி வீரராக திகழ்ந்த தயான்சந்த் நினைவாக அவரது பிறந்த நாளான ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் விளையாட்டு வீரர்களை கவுரவிக்க அர்ஜுனா விருது, ராஜிவ் கேல் ரத்னா விருதுகள் வழங்கப்படுகின்றன என்றார்.

    இந்நிகழ்ச்சியில் மாணவ- மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு சதுரங்கம், வாலிபால், டேபிள் டென்னிஸ், யோகா, கயிறு இழுத்தல் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் தவசலிங்கம், நாட்டு நலப்படுத்திட்ட அலுவலர்கள் சுலைமான், சதாம் உசேன், முனிய சத்யா ஆகியோர் செய்திருந்தனர்.

    • பாதாள சாக்கடை பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என்று நகரசபை தலைவர் கூறினார்.
    • இனி குடிநீர் சப்ளை செய்ய வரும்போது உங்களிடம் கையொப்பம் வாங்கப்படும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகராட்சி கூட்டம் தலைவர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் அபிதா பர்வீன், என்ஜினீயர் ரெங்க ராஜ் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

    குமார்: பாதாள சாக்கடை குழாய்கள் சரிசெய்வதாக கூறி மாதந்தோறும் பல லட்சம் ரூபாய் செலவழிக்கப் படுகிறது. ஆனால் பாதாள சாக்கடை பிரச்சினை இன்னும் தீர்ந்தபாடில்லை. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

    தலைவர்: பாதாள சாக்கடை பிரச்சினைக்கு தீர்வு காண ரூ.11 கோடி அனுமதி பெறப்பட்டு ள்ளது. இதற்கான நிதி ஒருவா ரத்திற்குள் வந்துவிடும். அதன்பின்னர் பழுதடைந்த குழாய்களை மாற்றி விட்டால் பாதாள சாக்கடை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாகிவிடும்.

    அய்யனார்: போடப் படாத சாலையை போட்ட தாக தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. மன்ற பொருளில் தவறான தகவலை தெரிவிக்க வேண்டாம்.

    தலைவர்: அந்த பணி நடைபெறும்போது முதல்-அமைச்சர் வருகைக்காக நிறுத்தப்பட்டது. அதனால் தாமதமாகிவிட்டதால் இந்த குழப்பம். இனி இதுபோன்ற தவறுகள் நடக்காமல் சரிசெய்யப்படும்.

    காளி: தெருவிளக்குகள் எரியாததால் மக்கள் நடமாட முடியவில்லை. எல்.இ.டி. விளக்குகள் வந்துவிட்ட நிலையிலும் இன்னும் பொருத்தப்படாதது ஏன்?

    தலைவர்: விளக்கு கள் பொருத்துவதற்கு தேவை யான இதர சாமான்கள் வரவேண்டியுள்ளது. விரைவில் வந்துவிடும்.

    இந்துமதி: எனது வார்டில் பாதாள சாக்கடை மூடிகள் 11 இடங்களில் போடச்சொல்லியும் இதுவரை போடவில்லை. அடிகுழாய் பழுது குறித்து புகார் செய்தால் சரிசெய்வ தில்லை. குடிநீர் வருவது கிடையாது. லாரி டிராக்டரில் குடிநீர் சப்ளை செய்வதாக கூறுகிறீர்கள். எனது வார்டுக்கு ஒருநாள் கூட வந்தது கிடையாது.

    தலைவர்: பாதாள சாக்கடை மூடி உடனடியாக போடப்படும். இனி குடிநீர் சப்ளை செய்ய வரும்போது உங்களிடம் கையொப்பம் வாங்கப்படும்.

    குமார்:- பொதுவான பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி பேசியபோது அதற்கு சில கவுன்சிலர்கள் அவர்களது வார்டு பிரச்சினைகள் பற்றி மட்டும் கேள்வி எழுப்பட்டும். கூட்ட நேரத்தினை வீணடிக்க வேண்டாம் என்று கூறி வாதிட்டனர். இதனால் கூட்டத்தில் கூச்சல் குழப்பம் நிலவியது. பஸ் நிலைய கடைகளை வாடகைக்கு எடுத்தவர்களின் கேட்பு தொகையை நீக்கம் செய்வது தொடர்பாக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரி வித்தனர். கேட்பு தொ கையை செலுத்தாத வர்களுக்கு இனி புதிய பஸ்நிலையத்தில் கடை கொடுக்க கூடாது என்று கூறினர்.

    இவ்வாறு அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    • குறு வட்டார விளையாட்டு போட்டிகள் நிறைவு விழா நடந்தது.
    • கே.என்.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அதிக புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் குறு வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் கடந்த 12-ந் தேதி ரஹ்மானியா மெட்ரி குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கியது. இதில் 57 பள்ளிகளை சேர்ந்த 220 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    சதுரங்கம், வாலிபால், கைப்பந்து, கபடி, கால்பந்து, கோகோ, மற்றும் தடகள போட்டிகள் உட்பட ஏராளமான போட்டிகள் நடைபெற்றன. இப் போட்டிகளின் நிறைவு விழா ரஹ்மானியா கார்டன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மைதா னத்தில் நடந்தது.

    இந்நிகழ்ச்சிக்கு ரஹ்மானியா மெட்ரிகுலே ஷன் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஆயிஷா பீவி தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் பாதுஷா முன்னிலை வகித்தார். பசும்பொன் ஊராட்சி மன்ற தலைவர் ராம கிருஷ்ணன் தேசிய கொடியை ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார்.

    ஒலிம்பிக் கொடியை மாவட்ட உடற்கல்வி இயக்கு னர் வசந்தி ஏற்றினார். வட்டார கொடியை கலாவிருத்தி பள்ளி தாளா ளர் அல்லாபக்ஸ் ஏற்றினார். மேலும் கார்டன் பள்ளி முதல்வர் மக்பு அலி, நிர்வாக அலுவலர் முகம்மது இர்ஷாத், உடற்கல்வி ஆசிரியர்கள் சந்திரசேகரன் தாமரைக் கண்ணன், அன்சாரி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்ட னர்.

    இதில் 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் ரஹ்மானியா மெட்ரி குலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர் ஹரிகரன் உயரம் தாண்டுதல்,நீளம் தாண்டுதல், தடை தாண்டும் ஆகிய போட்டியில் முதலிடம் பெற்று தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்றார்.மேலும் இப்பள்ளியை சேர்ந்த ரஹ்மான் ஆகில் 100 மீ மற்றும் 200 மீ ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்தார். கேரம் விளை யாட்டில் தனிநபர், இரட்டையர் பிரிவில் முதலிடமும், பேட்மிட்டனில் முதலிடமும் பெற்று சாதனை படைத்துள்ளது.

    இதேபோல் ரஹ்மானியா கார்டன் மெட்ரிகுலே ஷன் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளும் பல்வேறு போட்டியில் வெற்றி பெற்றனர். இப்போட்டியில், கே.என்.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அதிக புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது.

    • சையது யூசுப் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு துபாய் நாட்டிற்கு சென்றார்.
    • சையது யூசுப்பின் செல்போன்கள், வீட்டில் இருந்த கம்ப்யூட்டர், ஆவணங்கள் போன்றவற்றை ஆய்வு செய்தனர்.

    ராமேசுவரம்:

    தமிழகத்தில் தடை செய்யப்பட்ட இயக்கங்கள், அதனுடன் தொடர்பு வைத்திருப்பவர்கள், சட்டவிரோதமான செயல்பாடுகள், இறையாண்மைக்கு குந்தகம் விடுக்கும் வகையிலான பயிற்சிகள் உள்ளிட்டவை தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) தீவிரமாக கண்காணித்து வருகிறது.

    அந்த வகையில் ராமேசுவரத்தில் இன்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஒரு வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகேயுள்ள மீனவ கிராமமான தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்தவர் சையது யூசுப் (வயது 30). இவரது தந்தை அதே பகுதியில் மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இதற்கிடையே சையது யூசுப் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு துபாய் நாட்டிற்கு சென்றார். பின்னர் அங்கு 6 மாதங்கள் வரை தங்கியிருந்த அவர் மீண்டும் சொந்த ஊர் திரும்பினார்.

    துபாய் நாட்டில் சையது யூசுப் தங்கியிருந்த நாட்களில் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் அவர் தொடர்பு வைத்திருந்ததாக என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சொந்த ஊர் திரும்பிய சையது யூசுப்பை அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்து வந்தனர். அவரது செயல்பாடுகள், யார், யாருடன் பேசி வருகிறார் என்பது போன்ற தகவல்களை சேகரித்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை 5.40 மணிக்கு தங்கச்சிமடம் கிராமத்துக்கு இன்ஸ்பெக்டர் தலைமையில் சென்ற 7 என்.ஐ.ஏ. அதிகாரிகள் சையது யூசுப் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் இருந்த அவர் மற்றும் குடும்பத்தினர் யாரையும் வெளியில் செல்ல அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. மேலும் சையது யூசுப்பின் செல்போன்கள், வீட்டில் இருந்த கம்ப்யூட்டர், ஆவணங்கள் போன்றவற்றை ஆய்வு செய்தனர்.

    4 மணி நேர சோதனைக்கு பிறகு அங்கிருந்த புறப்பட்ட அதிகாரிகள் எந்தவித ஆவணங்களையும் எடுத்து செல்லவில்லை. ஆனால் சையது யூசுப்பிடம், அவர் வெளிநாடுகளுக்கு செல்லக்கூடாது, மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்றும், விசாரணைக்கு அழைக்கும்போது தவறாமல் ஆஜராக வேண்டும் என்றும் அறிவுறுத்தல்களை வழங்கிவிட்டு அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர்.

    மீனவ கிராமத்தில் அதிரடியாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தியது அப்பகுதியினரை பரபரப்புக்கு உள்ளாக்கியது.

    ×