search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bharathiar Memorial Day"

    • பாரதியார் நினைவுநாள் போட்டிகளில் இஸ்லாமியா பள்ளி மாணவிகள் பரிசுகள் வென்றனர்.
    • இவர்களை பள்ளி தாளாளர் எம் எம்.கே.முகைதீன் இப்ராஹிம், முதல்வர் மேபல் ஜஸ்டஸ் மற்றும் ஆசிரியர்கள், அலு வலர்கள் பாராட்டினர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் தமிழ்ச் சங்கம் சார்பில் 102-வது பாரதியார் நினைவு நாள் கலை போட்டிகள் நடந்தது. இதில் கீழக்கரை இஸ்லா மியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வென்றனர்.

    மனப்பாட போட்டியில் சம்சுன் நிஹாஸா, பாத்திமா சனா, மாறு வேடப் போட்டியில் சித்தி தஸ்ரிபா, தாருன் நிஹா, கட்டுரைப் போட்டியில் சம்சுன் ஃபசிஹா, ஆமினா ருஷ்தா, பேச்சுப்போட்டியில் நஸாஹா, பஸ்ஹா ஆகியோர் பரிசுகள் பெற்றனர். இவர்களை பள்ளி தாளாளர் எம் எம்.கே.முகைதீன் இப்ராஹிம், முதல்வர் மேபல் ஜஸ்டஸ் மற்றும் ஆசிரியர்கள், அலு வலர்கள் பாராட்டினர்.

    பாரதியாரின் நினைவு தினத்தையொட்டி கவர்னர் மாளிகை அருகே உள்ளபாரதியார் சிலைக்கு முதலமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செய்தார். #Narayanasamy #congress
    புதுச்சேரி:

    புதுவை அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் பாரதியாரின் நினைவு தினம் இன்று அனுசறிடிக்கப்பட்டது.

    இதனையொட்டி கவர்னர் மாளிகை அருகே உள்ளபாரதியார் சிலைக்கு முதலமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செய்தார். மேலும் அமைச்சர் கந்தசாமி, துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், கீதா ஆனந்த் ஆகியோரும் மாலை அணி வித்தனர்.

    புதுவை மாநில பாரதிய ஜனதா கட்சி சார்பில் தலைவர் சாமிநாதன் தலைமையில் நிர்வாகிகள் பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். மாநிலத் துணைத் தலைவர் சோம சுந்தரம் பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன் நிர்வாகிகள் கணேசன், சோழன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    புதுவை கலை, இலக்கிய, பண்பாட்டு பேரவையினர் கருவடிக்குப்பம் சித்தானந்தா கோவிலில் உள்ள பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். #Narayanasamy #congress
    ×