என் மலர்
ராமநாதபுரம்
- ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
- மாவட்ட தலைவர் வினோத்குமார் தலைமை தாங்கினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன்பாக தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் வினோத்குமார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சேகர் பேசினார். மாவட்ட இணை செயலாளர் பிரபு முன்னிலை வகித்தார். மாவட்டத் துணைத்தலைவர் பூமிநாதன், மாவட்ட செயலாளர் முனியசாமி, சிவகங்கை மாவட்ட முன்னாள் தலைவர் சுரேஷ்குமார், கால்நடை ஆய்வாளர் சங்க மாவட்ட செயலாளர் முத்துசாமி, கருவூல கணக்குத்துறை மாவட்ட செயலாளர் ஜெனிஸ்ட்டர், சமூக நலத்துறை பணியாளர் சங்க மாவட்ட தலைவர் பாலுசாமி, பொதுப்பணித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட அமைப்பாளர் அப்துல் நஜ்முதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
களப்பணியாளர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 22 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
- பரமக்குடியில் தி.மு.க. நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.
- முருகேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
பரமக்குடி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பஸ் நிலையம் எதிரில் முருகேசன் எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டது. முருகேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு நீர்,மோர் பந்தலை திறந்து வைத்து பொது மக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்.
இதில் கவுன்சிலர்கள் ஜீவரத்தினம், அப்துல் மாலிக், சதீஷ்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் பூமிநாதன், அருளானந்து, ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார், குணசேகரன், உதயநிதி ஸ்டாலின் மன்றம் துரைமுருகன், மனோகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கவர்னர் ஆர்.என்.ரவி வருகை தந்துள்ளார்.
- கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு வழக்கத்தை விட அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கவர்னர் ஆர்.என்.ரவி வருகை தந்துள்ளார். இன்றும், நாளையும் ராமநாதபுரத்தில் தங்கும் கவர்னர் மாணவர்களுடன் கலந்துரையாடல், கோவில் வழிபாடு, மீனவ பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் போன்றவற்றில் பங்கேற்கிறார்.
இந்த நிலையில் கவர்னரின் ராமநாதபுரம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சியினர் கூட்டாக அறிவித்திருந்தனர். இதன் காரணமாக கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு வழக்கத்தை விட அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு இன்று காலை திரண்ட காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் கவர்னருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
உடனே பாதுகாப்பு போலீசார் அவர்களை கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் 40-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
- மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடந்தது.
- இதில் மாவட்டத் தலைவர் வாவா ராவுத்தர் தலைமையில் நடந்தது.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் தெற்கு மாவட்டம் முதுகுளத்தூர் நகர முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி மாவட்டத் தலைவர் வாவா ராவுத்தர் தலைமையில் நடந்தது. நகர தலைவர் சேட் ஜாகிர் உசேன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். த.மு.மு.க. மாவட்ட செயலாளர் சம்சுகனி, பொருளாளர் சாகுல் ஹமீது ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாவட்ட துணை செயலாளர் சல்மான் ரபீக் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக இஸ்லாமிய பிரசார பேரவையின் மாவட்ட பொறுப்பாளர் தாஹிர் சைபுதீன், துரைப்பாண்டியன், ஆசிரியர் முருகன், காங்கிரஸ் பூவலிங்கம், இமாம் அப்துல் மஜீத், ஓம் சக்தி வழிபாட்டு மன்ற குழு தலைவர் பழனிச்சாமி மற்றும் முஸ்தபாபுரம் ஜமாத்தார்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஜமீல் அகமது நன்றி கூறினார்.
- சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடந்தது.
- மாவட்ட தலைவர் பட்டாணி மீரான் தலைமை தாங்கினார்.
ராமநாதபுரம்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ராமநாதபுரம் மாவட்டம் ஆனந்தூரில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தலைவர் பட்டாணி மீரான் தலைமை தாங்கினார். ம.ம.க. மாவட்ட செயலாளர் ஜிப்ரி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக த.மு.மு.க. மாநில செயலாளர் தொண்டி சாதிக் பாட்சா பங்கேற்று பேசினார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் விஷ்ணுவர்த்தன், முத்துப்பட்டினம் பங்குத்தந்தை அற்புத அரசு, வடக்கு பள்ளி தலைவர் சாகுல்அமீது,தெற்கு பள்ளி தலைவர் அப்துல் சலாம், யூனியன் தலைவர்-மாவட்ட தகவல் தொழில்நுட்ப துணை ஒருங்கிணைப்பாளர் ராதிகா பிரபு, மாநில விவசாய அணி செயலாளர் நல்ல சேதுபதி, ஒன்றிய பொறுப்பாளர் காந்தி, கூட்டுறவு சங்க தலைவர் நாகராஜன், ஒன்றிய சேர்மன் சேகர்,ஒன்றிய பிரதிநிதி சந்திரசேகரன், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர்-கவுன்சிலர் புரோஸ் கான், 3-வது வார்டு கவுன்சிலர் பாண்டி, ராம்கோ மேலாளர் மரியக்கண்ணு, ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் வெற்றிவேல், ஒன்றிய சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் நாசிர் உசேன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.
த.மு.மு.க. மாவட்ட செயலாளர் ஜாவித் அசாம், மாவட்டத் துணைத் தலைவர் அகமது இப்ராகிம், மாவட்டத் துணைச் செயலாளர்கள் உபயத்துல்லா, நிசார், சாகுல் ஹமீது மலேசிய மண்டல செயலர் இர்ஷாத் , ஒன்றிய தலைவர் உமர் அலி, ம.ம.க. ஒன்றிய செயலாளர் முகமது இக்சானுல்லா, த.மு.மு.க. ஒன்றிய செயலாளர் ரைசுல் இஸ்லாம், திருவாடனை ஒன்றிய ம.ம.க. செயலர் காமராஜ், தொண்டி பேரூர் காதர், ம.ம.க. செயலர் பரக்கத், பொருளாளர் மைதீன் முன்னிலை வகித்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை த.மு.மு.க. கிளை தலைவர் ஜம்ரி, ம.ம.க. செயலாளர் இப்ராகிம், த.மு.மு.க. செயலாளர் மஹாதீர் ரகுமான், ம.ம.க. செயலாளர் சுலைமான், துணைச் செயலாளர் மஹாதீர், சபீக் ஆகியோர் செய்திருந்தனர்.
- தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
- ஜி.கே. வாசன் குற்றச்சாட்டினார்.
ராமநாதபுரம்
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ராமநாதபுரத்தில் நிருபர்களிடம் கூறிய தாவது:-
பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அவர்களது உறவினர்கள் சொத்து விபரம் குறித்து பட்டியல் வெளியிட்டுள்ளார். இதை ஆளும் கட்சியினர் அலட்சியமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டுகள் உண்மை தானா? என்பதை அறிய மக்கள் விரும்புகின்றனர். இதுகுறித்து அண்ணாமலை தெளிவாக கூறிவிட்டார். ஆனால் தி.மு.க.வினர் திரும்பத்திரும்ப பொய்யை கூறி உண்மை ஆக்க முயற்சிக்கின்றனர்.
பட்டாசு ஆலைகள் வெடி விபத்து தொடர்பாக பாதுகாப்பு குறித்து அரசு தனிக் கவனம் செலுத்த வேண்டும். முதல்- அமைச்சர் மற்றும் அவரது அரசு வாக்கு றுதிகளை இதுவரை நிறைவேற்ற வில்லை. வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தேர்தல் வாக்குறுதியில் மதுபான கடைகள் 500 கடைகளை அடைப்போம் என்று கூறினர். ஆனால் இன்று வரை அது நடைபெற வில்லை.குறைந்தபட்சம் 25 சதவீத மதுபான கடைகளை வழிபாட்டு தலங்கள், பள்ளி-கல்லூரிகள் அருகில் உள்ள மது கடைகளை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் கஞ்சா, ஹெராயின் மது போதை யால் இளைஞர்கள் வழி மாறி செல்கின்றனர். பிரதமர் மோடி ஹாட்ரிக் முறையில் 3-வது முறையாக பிரதமர் ஆவது உறுதியாகி விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட நிர்வாகிகள் நாகேசுவரன், முன்னாள் எம்.பி.உடையப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. ராம் பிரபு, சிவகங்கை மாவட்ட தலைவர் பாலசுப்பிர மணியன், அயோத்தி உள்பட பலர் உடனிருந்தனர்.
- ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க.தலைவரை கொல்ல முயன்ற சம்பவம் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- தலைமறைவாக உள்ள முன்னாள் மாவட்ட தலைவர் கதிரவன், சண்முகநாதன் ஆகிய 2பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அருகே சமீபத்தில் பா.ஜ.க. நிர்வாகிகளாக இருந்தவர்கள் அனைவரும் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டனர். பின்னர் மாநில தலைவர் அண்ணாமலை புதிய நிர்வாகிகளை நியமித்தார்.
அதன்படி ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. தலைவராக இருந்த கதிரவன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக தரணி முருகேசன் நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்றவுடன் கட்சி பணிகளில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்தி கொண்டார்.
நேற்று மாலை ராமநாதபுரத்தில் நடந்த ஆர்.எஸ்.எஸ்.பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற தரணி முருகேசன் இரவு 8 மணியளவில் கேணிக்கரையில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். அங்கு ஆளுநர் வருகை தொடர்பாக செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து கட்சி நிர்வாகிகளிடம் தரணி முருகேசன் ஆலோசனை நடத்தி கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் அரிவாள், வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீட்டின் வெளியே நின்று கொண்டு அவதூறாக பேசியுள்ளனர். மேலும் தரணி முருகேசன் எங்கே? என கேட்டுள்ளனர்.
ஆயுதங்களுடன் 2 பேர் வந்து பிரச்சினை செய்வதை பார்த்த வீட்டு வேலைக்காரர் கணேசன் அவர்கள் யார்? என கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் பதில் சொல்லாமல் தரக்குறைவாக பேசி கணேசனை அரிவாளால் வெட்டினர். இதில் அவருக்கு வலது காலில் காயம் ஏற்பட்டது.
இதை பார்த்த அங்கு நின்றிருந்த பா.ஜ.க.வினர் 2 பேரையும் பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் ஆயுதங்களால் தாக்க முயன்றனர். இருப்பினும் கட்சியினர் சமயோஜிதமாக செயல்பட்டு ஆயுதங்களுடன் வந்த 2 வாலிபர்களையும் கையும், களவுமாக பிடித்து தர்ம அடி கொடுத்தனர், பின்னர் 2 பேரும் கேணிக்கரை போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.
போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த மோகன் (வயது34), புது வண்ணாரபேட்டையை சேர்ந்த சுரேஷ் என தெரியவந்தது. இவர்கள் முன்னாள் மாவட்ட தலைவர் கதிரவன், பா.ஜ.க. பிரமுகர்கள் விக்னேஷ்வரன், சண்முகநாதன், பாலமுருகன் ஆகியோர் தூண்டுதலின் பேரில் மாவட்ட பா.ஜ.க. தலைவர் தரணி முருகேசனை கொலை செய்யும் நோக்கத்தோடு ஆயுதங்களுடன் வந்துள்ளனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து மோகன், சுரேஷ் மற்றும் பாலமுருகன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள முன்னாள் மாவட்ட தலைவர் கதிரவன், சண்முகநாதன் ஆகிய 2பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
முன்னதாக இது குறித்து தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, துணை போலீஸ் சூப்பிரண்டு, ராஜா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க.தலைவரை கொல்ல முயன்ற சம்பவம் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- ஆதிதிராவிடர்-பழங்குடியின மக்கள் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
- பொருளாதார கடன் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
ராமநாதபுரம்
தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் நிலையான வளர்ச்சியே அரசின் முதன்மையான நோக்கம் என்பதை கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திடுகின்ற வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து அதனை திறம்பட செயல்படுத்தி வருகிறது.
அதனடிப்படையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்த ஏழை, எளிய மக்களை அனைத்து வகையிலும் சமூக பொருளாதார முன்னேற்றம் அடைய செய்ய வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகத்தின் (தாட்கோ) மூலம் மகளிர் நிலம் வாங்கும் திட்டம் (பெண்கள் மட்டும்), நிலம் மேம்படுத்துதல் (இரு பாலருக்கும்), தொழில் முனைவோர் பொருளாதார மேம்பாட்டுத் திட்டம், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு திட்டம், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதார கடன் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டத்தில் பயன்பெற்ற கலையனூர் கிராமத்தைச் சேர்ந்த சரவணாதேவி கூறும்போது, நான் தினசரி விவசாயக் கூலி வேலைக்கு சென்று அதில் கிடைக்ககூடிய வருவாயினை கொண்டு, எனது குடும்பத்தினருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன்.
இந்த நிலையில் தமிழக அரசின் தாட்கோவின் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து அறிந்து இளைஞர்களக்கான சுயவேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் சொந்தமாக டிராக்டர் வாங்க இணையதளம் மூலம் விண்ணப்பித்தேன்.
சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் விண்ணப்பத்தினை எனது இருப்பிடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டு அதன் பின் டிராக்டர் வாங்கிட ரூ.9 லட்சத்து 90 ஆயிரம் கடனுதவி வழங்கினர். இதற்கு அரசு மானியமாக ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் கிடைத்தது. இதனைக் கொண்டு மாதம் ரூ.25 ஆயிரத்திற்கு மேல் வருவாய் ஈட்டி, வங்கிக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் செலுத்தி வருகிறேன்.
டிராக்டர் பராமரிப்பு செலவினங்கள் போக ரூ.10 ஆயிரம் சேமித்திட முடிகிறது. இந்த திட்டத்தை தமிழக அரசுக்கு நன்றி. இதேபோல் பயன்பெற்ற பயனாளிகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி ெதரிவித்தனர்.
- ராமநாதபுரம் வரும் கவர்னருக்கு கருப்பு கொடி காட்டுவோம் பா.ம.க. அறிவித்துள்ளது.
- ஒன்றிய இளைஞர் சங்கத் தலைவர் கார்த்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பா.ம.க. சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் தேனி சை.அக்கிம் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் சந்தானதாஸ் முன்னிலை வகித்தார்.
பின்னர் கிழக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் அக்கிம் நிருபரிடம் கூறியதாவது:-
வருகிற 18,19 ஆகிய தேதிகளில் கவர்னர் ரவி ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்வதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் கடந்த 23 ஆண்டுகால போராட்டமான கடலாடி ஒன்றியத்தை பிரித்து சிக்கலை தலைமையிடமாகக் கொண்ட புதிய யூனியன் அமைத்தல், மக்களுக்கு இடையூறாக இருக்கும் கலெக்டர் அலு வலகம் முன்புள்ள மதுக்கடையை மாற்றுதல், ராமநாதபுரத்தில் புதிய மிகப்பெரிய மக்கள் தொகைக்கு ஏற்ப ஒருங்கிணைந்த பஸ் நிலையத்தை ஊருக்கு வெளியே அமைக்க வேண்டும்.
தற்போதிருக்கும் பஸ் நிலைய விரிவாக்கத்தை தடை செய்தல், திருவாடானை தாலுகா சிறுகம்பையூர் பகுதி யில் நடத்தப்படும் மணல் குவாரியை தடுத்து நிறுத்த வேண்டும் போன்றவற்றை வலியுறுத்தி பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகிறோம்.
மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு மேற்கண்ட கோரிக்கைகளை கண்டு கொள்ளாத நிலையிலும் ஜனநாயக முறையில் எத்த னையோ போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடத்தி னாலும் வேடிக்கைக்காக நடத்துவது போல பார்ப்பதும், எந்த ஒரு கோரிக்கையையும் நிறைவேற்ற முயற்சி எடுக்கா மல் இருப்பதால் கவர்னர் ரவி வருகையை எதிர்த்து கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எங்கள் கோரிக்கையை செவி சாய்க்காமல் இருக்கும் தமிழக அரசு மற்றும் தலைமையில் 1000 கருப்பு பலூன்க ளையும் பறக்கவிட்டு கருப்பு கொடி காட்ட வேண்டும் என்று இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட தொழிற்சங்க தலைவர் லட்சுமணன், ராமநாதபுரம் நகர செயலாளர் இப்ராகிம், திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் மக்தூம்கான், இளைஞர் சங்க செயலாளர் துல்கர், இளைஞர் சங்கத் தலைவர் பாலா, மண்டபம் ஒன்றிய இளைஞர் சங்கத் தலைவர் கார்த்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- பொன் ஏர்விடும் மதநல்லிணக்க விழா நடந்தது.
- பாதுகாப்பு ஏற்பாடுகளை கமுதி டி.எஸ்.பி. நேரடி கண்காணிப்பில் அபிராமம் போலீசார் செய்திருந்தனர்.
அபிராமம்
ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே உள்ள அ.பள்ளப்பசேரி கிராமத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பொன் ஏர்விடும் மதநல்லிணக்க விழா நடந்தது. இதில் அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் போது இஸ்லாமியர்கள் சார்பில் சந்தன காப்பு மரியாதை செய்யப்பட்டது. இறுதியாக நத்தம் அய்யனார் கோவில் முன்பு பொன் ஏர்விடும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சிகாண ஏற்பாடுகளை கிராம பொறுப்பாளர்கள் ஜெய்கணேஷ். செல்லத்துரை மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை கமுதி டி.எஸ்.பி. நேரடி கண்காணிப்பில் அபிராமம் போலீசார் செய்திருந்தனர்.
- பயிற்சி மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிப்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
- பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவ மனை மாவட்ட அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவ மனைக்கு ராமநாதபுரம் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர்.
இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர் பணியில் உள்ள மூத்த மருத்துவர்கள் சிகிச்சைக்கு வராமல் பயிற்சி மருத்துவ மாணவர்கள் மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக நீண்ட நாட்களாக குற்றச்சாட்டு உள்ளது.
இது குறித்து மருத்துவ மனை நிர்வாகம் சார்பில் பணி நேரம் குறித்து தெளிவான அறிக்கை வெளியிட்டும், பலமுறை எச்சரித்து உத்தரவுகள் பிறப்பித்தும் யாரும் கணடுகொள்ள வில்லை.
மேலும் மருத்து வமனை மருந்தகத்தில் ஒரு மூத்த மருந்தாளுனர் கூட இல்லாமல் பயிற்சி மருத்துவ மாணவர்களை வைத்து மருந்து வழங்கப்படுகிறது. இதன் மூலம் மருந்துகளை மாற்றி வழங்கும் சம்பவங்களும் அவ்வப்போது அரங்கேறி வருவதாக கூறப்படுகிறது.
சிகிச்சைக்காக வருபவர்களில் பெரும்பாலானோர் பாமர மக்கள் என்பதால் பயிற்சி மாணவர்கள் வழங்கும் மருந்தின் விபரம் அறியாது அதனை சாப்பிட்டு பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
எனவே ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் அரசு மருத்துவ மனையில் ஆய்வு செய்து மருந்தகத்தில் மூத்த மருந்தாளுனர்களை நியமித்து, பணிக்கு வராமல் இருக்கும் மருத்துவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
- தி.மு.க. சார்பில் இலவச நீர், மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
- ராமச்சந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனர்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் நகர் தி.மு.க.சார்பில் மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. வழிகாட்டுதலின்படி பேரூராட்சி மன்ற தலைவர் ஷாஜஹான் பானு ஜவஹர் அலிகான் தலைமையில் நீர், மோர் பந்தல் நகர் தி.மு.க.தலைவர் இஸ்மத் நானா முன்னிலையில் திறக்கப்பட்டது.
இதில் 2-வது வார்டு கவுன்சிலர் தாஸ், மற்றும் நிர்வாகிகள் அப்பாஸ், மாலிக், ராமச்சந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனர்.






