என் மலர்
உள்ளூர் செய்திகள்

ராமநாதபுரத்தில் கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி போராட்டம்- 40 பேர் கைது
- ராமநாதபுரம் மாவட்டத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கவர்னர் ஆர்.என்.ரவி வருகை தந்துள்ளார்.
- கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு வழக்கத்தை விட அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கவர்னர் ஆர்.என்.ரவி வருகை தந்துள்ளார். இன்றும், நாளையும் ராமநாதபுரத்தில் தங்கும் கவர்னர் மாணவர்களுடன் கலந்துரையாடல், கோவில் வழிபாடு, மீனவ பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் போன்றவற்றில் பங்கேற்கிறார்.
இந்த நிலையில் கவர்னரின் ராமநாதபுரம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சியினர் கூட்டாக அறிவித்திருந்தனர். இதன் காரணமாக கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு வழக்கத்தை விட அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு இன்று காலை திரண்ட காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் கவர்னருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
உடனே பாதுகாப்பு போலீசார் அவர்களை கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் 40-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.






