என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nemmore"

    • பரமக்குடியில் தி.மு.க. நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.
    • முருகேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பஸ் நிலையம் எதிரில் முருகேசன் எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டது. முருகேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி முன்னிலை வகித்தார்.

    சிறப்பு விருந்தினராக ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு நீர்,மோர் பந்தலை திறந்து வைத்து பொது மக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்.

    இதில் கவுன்சிலர்கள் ஜீவரத்தினம், அப்துல் மாலிக், சதீஷ்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் பூமிநாதன், அருளானந்து, ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார், குணசேகரன், உதயநிதி ஸ்டாலின் மன்றம் துரைமுருகன், மனோகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×