search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Physicians"

    • பயிற்சி மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிப்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
    • பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவ மனை மாவட்ட அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவ மனைக்கு ராமநாதபுரம் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர்.

    இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர் பணியில் உள்ள மூத்த மருத்துவர்கள் சிகிச்சைக்கு வராமல் பயிற்சி மருத்துவ மாணவர்கள் மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக நீண்ட நாட்களாக குற்றச்சாட்டு உள்ளது.

    இது குறித்து மருத்துவ மனை நிர்வாகம் சார்பில் பணி நேரம் குறித்து தெளிவான அறிக்கை வெளியிட்டும், பலமுறை எச்சரித்து உத்தரவுகள் பிறப்பித்தும் யாரும் கணடுகொள்ள வில்லை.

    மேலும் மருத்து வமனை மருந்தகத்தில் ஒரு மூத்த மருந்தாளுனர் கூட இல்லாமல் பயிற்சி மருத்துவ மாணவர்களை வைத்து மருந்து வழங்கப்படுகிறது. இதன் மூலம் மருந்துகளை மாற்றி வழங்கும் சம்பவங்களும் அவ்வப்போது அரங்கேறி வருவதாக கூறப்படுகிறது.

    சிகிச்சைக்காக வருபவர்களில் பெரும்பாலானோர் பாமர மக்கள் என்பதால் பயிற்சி மாணவர்கள் வழங்கும் மருந்தின் விபரம் அறியாது அதனை சாப்பிட்டு பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

    எனவே ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் அரசு மருத்துவ மனையில் ஆய்வு செய்து மருந்தகத்தில் மூத்த மருந்தாளுனர்களை நியமித்து, பணிக்கு வராமல் இருக்கும் மருத்துவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

    • மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்கு றையாக இருப்பதாக தலைமை மருத்துவர் தெரிவித்தார்.
    • அரசு மருத்துவமனையை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோவில் துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் தமிழ்நாடு சட்ட பேரவை பொது கணக்குழு தலைவர் செல்வப் பெருந்தகை மற்றும் உறுப்பினர்கள் சிந்தனைச் செல்வன், ஜவாஹிருல்லா ஆகியோர் ஆய்வு மேற்கொ ண்டனர்.

    அப்பொழுது வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் விதைகள் மற்றும் உரக்கிடங்கை பார்வையிட்டு போதுமான கையிருப்பு உள்ளதா என அதிகாரிளிடம் கேட்டறிந்தனர்.

    மேலும் 15 விவசாயிகளுக்கு தென்னங் கன்றுகளையும் இரு விவசாயிகளுக்கு விசைத்தெளிப்பான், ஐந்து விவசாயிகளுக்கு 10 கிலோ ஜிங்க் சல்பேட் மூன்று விவசாயிகளுக்கு 200 கிலோ ஜிப்சம் நான்கு விவசாயிகளுக்கு 20 கிலோ பாசிப்பயிறு உளுந்து உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

    இதைத்தொடர்ந்து சீர்காழி அரசு மருத்துவமனை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர் அப்பொழுது சிடிஸ்கேன் மையத்தை விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் எனவும் சீர்காழி மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையாக இருப்பதாக தலைமை மருத்துவர் தெரிவித்தார்.

    இதனை அடுத்து தொலைபேசியில் சட்டமன்ற பேரவை பொதுக் கணக்கு குழு தலைவர் செல்வப் பெருந்தகை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரம ணியனிடம் தொடர்பு கொண்டு சீர்காழி அரசு மருத்துவ மனையில் மருத்துவர்கள் குறைவாக இருப்பதாக கூறி கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என கூறினார்.

    இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் லலிதா, எம்.எல்.ஏ.க்கள் நிவேதா.முருகன், பன்னீர்செல்வம், ராஜ்குமார் மற்றும் அரசு துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

    • மக்கள் நல்வாழ்வுத்துறை திட்ட அலுவலர் மருதுதுரை ஆய்வு செய்தார்.
    • அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் போதிய கட்டிட வசதி மற்றும் மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியாத நிலை இருந்தது.

    மதுக்கூர்:

    அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் போதிய கட்டிட வசதி மற்றும் மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியாத நிலை இருந்தது. இதனையடுத்து அதிராம்பட்டினம் பொதுமக்கள் சார்பாக தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

    அதன்படி அதிராம்ப ட்டினம் மருத்துவமனையில் அதிரை டாக்டர் மருதுதுரை ஆய்வு மேற்கொண்டார். அப்போது அதிராம்ப ட்டினம் நகராட்சிதலைவர் தாகிர் அம்மாள் அப்துல் கரீம், துணைத் தலைவர் ராமகுணசேகரன் மற்றும் கவுன்சிலர்கள் அதிராம்பட்டினம் மருத்துவமனையை 24 மணி நேர மருத்துவமனையாக தரம் உயர்த்தி கூடுதல் மருத்துவர்கள்நியமிக்க வேண்டும்.

    மருத்துவமனைக்கு புதிய கட்டிடங்கள் அமைத்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வைத்தனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்தெரிவி த்தார். இதனை தொடர்ந்து உடனடியாக மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் வழங்க ப்பட்டது.

    ×