என் மலர்
புதுக்கோட்டை
- கந்தர்வகோட்டையில் ரூ.68 லட்சம் மதிப்பில் திட்ட பணிகளுக்கான தொடக்க விழா நடைபெற்றது
- எம்.எல்.ஏ. சின்னத்துரை தொடங்கி வைத்தார்
கந்தர்வகோட்டை,
கந்தர்வகோட்டை சட்ட மன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து விராலிப்பட்டி ஊராட்சியில் அங்காடி அமைத்தல். குளத்தூர் ஊராட்சியில் அங்காடி அமைத்தல், நடுப்பட்டி ஊராட்சியில் ஆதிதிராவிடர் தெருவில் நிழற்குடை அமைத்தல், தச்சங்குறிச்சி ஊராட்சியில் தடுப்புச் சுவர் மற்றும் படித்துறை அமைத்தல், பழைய கந்தர்வகோட்டை ஊராட்சியில் ஆதிதிராவிடர் தெருவில் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி அமைத்தல், கந்தர்வகோட்டை ஊராட்சியில் கலையரங்கம் கட்டுதல், மற்றும் துருசுப்பட்டி ஆதிதிராவிடர் தெருவில் நிழற்குடை அமைத்தல் உள்ளிட்ட 68 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணிகளுக்கான பூமி பூஜை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை தலைமையில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர் ,ஆணையர் பால் பிரான்சிஸ், திமுக நகரச் செயலாளர் ராஜா, ஆத்மா சேர்மேன் ராஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் தமிழ்ச்செல்வி, ஆர்.எஸ். முத்துக்குமார், ஜோதி ராணி மகாலிங்கம், ராணி முருகேசன், சிவரஞ்சனி சசிகுமார், அரசு முதல் நிலை ஒப்பந்தக்காரர் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- மனிதநேய ஒருமைப்பாட்டு கலை விழாவை முன்னிட்டு கறம்பக்குடியில் குதிரை, மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது
- ஆண்கள்,பெண்களுக்கு நடத்தப்பட்ட ஓட்டப் பந்தயத்தில் ஏராளமானவர்கள் பங்கேற்பு
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் மனிதநேய ஒருமைப்பாட்டு கலை விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி குதிரை வண்டி எல்கை பந்தயம் மற்றும் ஆண்கள் பெண்கள் ஓட்டப் பந்தயம் நடைபெற்றது.முன்னதாக காலையில் நடைபெற்ற பெரிய மாடு கரிச்சான் மாடு, கரிச்சான் குதிரை, பெரிய குதிரை ஆகியவற்றின் பந்தயத்தை புதுக்கோட்டை இளைய மன்னரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான விஜய ரகுநாத கார்த்திக் தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் கரிச்சான் மாடு கரிச்சான் குதிரை பந்தயம் 10 மையில் தூரம் சென்று திரும்பும் வகையில் நடைபெற்றது. போட்டியில் தஞ்சாவூர், மதுரை, கோயம்புத்தூர், ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பலர் கலந்து கொண்டு மாடு குதிரை வண்டிகளை ஓட்டி சென்றனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூபாய் 20 ஆயிரம் முதல் ரூபாய் 10 ஆயிரம் வரை பரிசுகள் வழங்கப்பட்டன. மாலையில் கரிச்சான் ஒற்றை மாடு, நடு மாடு, பெரிய குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் 20-க்கும் மேற்பட்ட மாடு மற்றும் குதிரை வண்டிகள் பங்கேற்றன. தொடர்ந்து ஆண்களுக்கான ஓட்டப்பந்தயம் நடந்தது. வயது வித்தியாசம் இன்றி நடத்தப்பட்ட இந்த போட்டியில் 66 வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதை யடுத்து பெண்களுக்கான ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதில் வீராங்கனைகள் கலந்து கொண்டு 10 கிலோ மீட்டர் தூரம் ஓடிச் சென்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு முறையே ரூபாய் 5 ஆயிரம் , ரூபாய் 4 ஆயிரம், ரூபாய் 3 ஆயிரம் வழங்கப்பட்டது. அனைத்து போட்டிகளும் முதல் நான்கு இடங்களை பெற்றவர்களுக்கு வெள்ளி மோதிரம் பரிசாக வழங்கப்பட்டது. மாலையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பிலா விடுதி ஊராட்சி மன்ற தலைவர் விஜய ரவி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில துணைத் தலைவர் பண்ண வயல் ராஜா தம்பி, ஒன்றிய பெருந்தலைவர் மாலா ராஜேந்திர துரை, ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் சிவ திருமேன நாதன், வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானசேகரன் உள்ளிட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள், வர்த்தக சங்க நிர்வாகிகள் , உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை கண்டு களித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் கறம்பக்குடி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் செய்யப்பட்டிருந்தது.
- புதுக்கோட்டையில் தலையில் தேங்காய் உடைத்து நூதன வழிபாடு நடைபெற்றது
- ஏராளமான பக்தர்கள் தலையில் பூசாரி தேங்காய் உடைத்தார்
புதுக்கோட்டை,
விராலிமலை தாலுகா, பேராம்பூர் கிராமத்தில் குதிரைக்கார தங்கையா என்கிற அகோர வீரபத்திரர் சாமி மற்றும் வீர மகாலட்சுமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடித்திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.தொடர்நது வீர மகாலட்சுமி அம்மனுக்கு கோவில் முன்பு திரளான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். பின்னர் அகோர வீரபத்திரர் மற்றும் மகாலட்சுமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. அதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.தொடர்ந்து தை பக்தர்கள் தங்களது தலையில் தேங்காய் உடைத்து வேண்டுதலை நிறைவேற்றினர். அப்போது வீரபத்திரர் கோவில் முன்பு வரிசையாக அமர்ந்திருந்த பக்தர்களின் தலையில் கோவில் பூசாரி தேங்காயை உடைத்தார்.பின்னர் பேய் பிசாசு உள்ளிட்ட கெட்ட ஆவிகள் அண்டியிருக்கும் நபர்களை கோவில் முன்பு நிறுத்தி கோவில் பூசாரி அவர்களை சாட்டையில் அடித்து கெட்ட ஆவிகளை விரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கருப்பர் கோவிலில் கிடாவெட்டு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- புதுக்கோட்டையில் நரிக்குறவர் பழங்குடியினத்தவர்களுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது
- அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டையில் நரிக்குறவர் இன மக்களுக்கு பட்டா, தையல் இயந்திரம், சாதி சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் அறிவொளிநகர் பகுதியினைச் சேர்ந்த நரிக்குறவர் இன மக்கள் 42 பேருக்கு, விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களையும், 111 நபர்களுக்கு பழங்குடியின ஜாதிச் சான்றிதழ்களையும அவர் வழங்கினார். மேலும் விழாவில் 5 நபர்களுக்கு தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டது.
- புதுக்கோட்டை 6-வது புத்தகத்திருவிழாவில் 9ம் நாள் விழா
- அமைச்சர்கள் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன் பங்கேற்பு
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை 6-வது புத்தகத்திருவிழா28ந்தேதி தொடங்கி நடைபெறுகிறது. இப்புத்தகத் திருவிழாவில் பல்வேறு தலைப்புகளின்கீழ் புத்தகங்கள் அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த புத்தகத்திருவிழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன் கலந்து கொண்டு, புத்தக அரங்குகளை பார்வையிட்டனர். மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, எம்.எல்.ஏ,, முத்துராஜா, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன் உள்ளிட்ட பலர் புத்தகத்திருவிழாவில் கலந்து கொண்டனர்.
- அறந்தாங்கி வெளுவூர் சவுந்தரநாயகபுரம் கிராமத்தில் ஆடிமாத புரவி எடுப்பு விழா
- 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்
அறந்தாங்கி,
ஆவுடையார்கோவில் தாலுகா வெளுவூர் சவுந்தரநாயகபுரம் கிராமத்தில் உள்ள குன்னமுடைய அய்யனார், காளியம்மன் ஆலயத்தில் ஆடித்திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த மாதம் 23ம் தேதி காப்புக் கட்டுதலுடன் விழா தொடங்கியது. விழா தொடங்கியது முதல் குன்னமுடைய அய்யனார், காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாரதனை மற்றும் காவடி எடுப்பு நிகழ்வுகளும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக குதிரை மற்றும் காளை எடுப்பு விழா நடைபெற்றது. சுள்ளணி கிராமத்திலிருந்து மண்ணால் செய்யப்பட்ட குதிரைகள், காளைகள் மற்றும் மதலை சிலைகளை 3 கிலோ மீட்டர் தூரம் பக்தர்கள் தங்கள் தோள்களிலும், தலையிலும் சுமந்து வேண்டுதல்களை நிறைவேற்றினர். மழை வளம் வேண்டியும், உலக மக்கள் நலன் வேண்டியும் நடைபெற்ற விழாவில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், பொதுமக்கள், ஆன்மீக மெய்யன்பர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- புதுக்காட்டையில் கால்நடை மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது
- சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கீரமங்கலத்தில் கால்நடை மருத்துவமனை திறக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கால்நடை மருத்துவமனையை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார். திறக்கப்பட்ட கால்நடை மருத்துவமனையை பார்வையிட்ட அவர், அதன் பின்னர் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட மாடுகளுக்கு கீரை மற்றும் பழங்கள் வழங்கினார். இவ்விழாவில் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- வழக்கில் கொலையாளிகளை பிடிக்க நான்கு தனிபடைகள் அமைக்கப்பட்டது.
- எங்கள் இருவரிடையே அய்யனார் கோவில் பிரச்சனை குறித்து வாக்குவாதம் ஏற்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகேயுள்ள தேக்காட்டூர் இளங்குடிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரகோபாலன் (எ) சங்கர் (வயது 56) தேக்காட்டூர் ஊராட்சியின் முன்னாள் தலைவர்.
தற்போது அவரது மனைவி முத்துலட்சுமி ஊராட்சி தலைவராக இருக்கிறார். இந்நிலையில் கடந்த 3-ந்தேதி சங்கர் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் கொலையாளிகளை பிடிக்க நான்கு தனிபடைகள் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் இளங்குபட்டி அருகேயுள்ள மேல முத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த கார்த்திக் என்ற குண்டு கார்த்திக் (32) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். கொலை செய்ததை அவர் ஒப்பு க்கொண்டு வாக்குமூலம் அளித்தார். இளங்குடிபட்டி கிராமத்தில் அய்யனார் கோவில் ஒன்று உள்ளது. அந்த கோயிலை ஒட்டி சங்கருக்கு சொந்தமான நிலம் உள்ளது. அந்த நிலத்தை கோவிலுக்கு கொடுக்கும்படி சிலர் கேட்டு கொண்டனர்.
சங்கர் நிலத்தை தர மறுத்தார். ஆனால் நிலத்தை எவ்வளவு காலம் வேண்டு மானாலும் பயன்படுத்திக் கொள்ளும்படி தெரிவித்தார்.
இந்த பிரச்சனையால் கடந்த 12 ஆண்டுகளாக அய்யானார் கோவிலில் விழா நடைபெறாமல் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று அய்யானார் கோவில் அருகே உள்ளமுனி கோவிலில் சங்கர் வழிபாடு செய்து கொண்டிருந்தார்.
அப்போது மதுபோதையுடன் நான் அங்கு வந்தேன். எங்கள் இருவரிடையே அய்யனார் கோவில் பிரச்சனை குறித்து வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த நான், தேங்காய் உடைக்க வைத்திருந்த அரிவாளை எடுத்து சங்கரை வெட்டினேன். இதனால் அவர் அங்கிருந்து தப்பி ஒட முயன்றார்.
நான் அவரை விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டி கொலை செய்தேன் என்று தெரிவித்துள்ளார். போலீசார் அவரை கைது செய்தனர்.
கார்த்திக் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும், இதனால் அடிக்கடி தண்டனை பெற்று சிறையில் இருந்துள்ளார். கார்த்திக் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
- புதுக்கோட்டை அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி கொலை செய்யப்பட்டார்
- கோவில் திருவிழா தடைபட காரணமாக இருந்ததால் வெட்டி கொலை செய்ததாக வாலிபர் வாக்குமூலம்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகேயுள்ள தேக்காட்டூர் இளங்குடிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரகோபாலன் (எ) சங்கர் (வயது 56) தேக்காட்டூர் ஊராட்சியின் முன்னாள் தலைவர்.தற்போது அவரது மனைவி முத்துலட்சுமி ஊராட்சி தலைவராக இருக்கிறார். இந்நிலையில் கடந்த 3-ந்தேதி சங்கர் கொலை செய்யப்பட்டார்.இந்த வழக்கில் கொலையாளிகளை பிடிக்க நான்கு தனிபடைகள் அமைக்கப்பட்டது.இந்நிலையில் இளங்குபட்டி அருகேயுள்ள மேல முத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த கார்த்திக் என்ற குண்டு கார்த்திக் (32) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்தார்.இளங்குடிபட்டி கிராமத்தில் அய்யனார் கோவில் ஒன்று உள்ளது. அந்த கோயிலை ஒட்டி சங்கருக்கு சொந்தமான நிலம் உள்ளது. அந்த நிலத்தை கோவிலுக்கு கொடுக்கும்படி சிலர் கேட்டு கொண்டனர்.சங்கர் நிலத்தை தர மறுததார். ஆனால் நிலத்தை எவ்வளவு காலம் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளும்படி தெரிவித்தார்.இந்த பிரச்சனையால் கடந்த 12 ஆண்டுகளாக அய்யானார் கோவிலில் விழா நடைபெறாமல் உள்ளது.இந்நிலையில் சம்பவத்தன்று அய்யானார் கோவில் அருகே உள்ளமுனி கோவிலில் சங்கர் வழிபாடு செய்து கொண்டிருந்தார்.அப்போது மதுபோதையுடன் நான் அங்கு வந்தேன். எங்கள் இருவரிடையே அய்யனார் கோவில் பிரச்சனை குறித்து வாக்கு வாதம் ஏற்பட்டது.இதில் ஆத்திரமடைந்த நான், தேங்காய் உடைக்க வைத்திருந்த அரிவாளை எடுத்து சங்கரை வெட்டினேன். இதனால் அவர் அங்கிருந்து தப்பி ஒட முயன்றார்.நான் அவரை விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டி கொலை செய்தேன் என்று தெரிவித்துள்ளார். இத போலீசார் அவரை கைது செய்தனர்.இச்சம்பவம் குறித்து போலீசார் தெரிவிக்கையில்,கார்த்திக் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும், இதனால் அடிக்கடி தண்டனை பெற்று சிறையில் இருந்துள்ளார். கார்த்திக் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
- திருமயம் ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நிறைவுற்றது
- பணிகள் நிறைவுற்றதாக திருமயம் ஊராட்சி மன்ற தலைவர் சிக்கத்தர் அறிவிப்பு
திருமயம்,
திருமயம் ஊராட்சி மன்ற தலைவர் சிக்கத்தர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருமணம் ஊராட்சியில் 15-வது மாநில நிதி குழு மான்யத்தில் ரூ.9 லட்சத்து 47 ஆயிரம் திப்பீட்டில் திட்டப்பணிகள் நடைபெற்று முடிவடைந்து வருகிறது. கோட்டை தெரு, நடுவீதி பகுதியில், மேல் மூடியுடன் கூடிய கழிவு நீர் கால்வாயானது சுமார ரூ.4 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. சந்தைப்பேட்டை பகுதியில் ரேஷன் கட வீதியில் ரூ.3 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பீட்டில் பேவர்பிளாக சாலையானது அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. பெல் தொழிற்சாலை எதிரே உளள ராயல் நகரில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலையானது அமைக்கப்பட்டு ள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
- திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் சாலை சீரமைக்கும் பணிகள் துவக்கம்
- அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாலைகள் சீரமைக்கும் பணிகளை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.மேலாத்தூர் ஊராட்சியில் ரூ.24.53 லட்சம் மதிப்பீட்டிலும், கல்லாலங்குடி ஊராட்சியில் ரூ. 18.97 லட்சம் மதிப்பீட்டிலும். கரும்பிரான் கோட்டை ஊராட்சியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டிலும் சாலை மேம்பாட்டு பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார். அதே போல் பாத்தம்பட்டி ஊராட்சியில் ரூ. 34.57 லட்சம் மதிப்பீட்டிலும். குப்பகுடி ஆதிதிராவிடர் காலணி பகுதியில் ரூ. 43. 88 லட்சம் மதிப்பீட்டிலும் மேம்பாட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.கீழையூர் பகுதியில் ரூ.27.41 லட்சம் மதிப்பீட்டிலும். கலிங்கிப்பட்டியில் ரூ.28.63 லட்சம் மதிப்பீட்டிலும் .களங்குடி ஊராட்சியில் ரூ.22.7 லட்சம் மதிப்பீட்டிலும். குளவாய்ப்பட்டியில் ரூ.36.17 லட்சம் மதிப்பீட்டிலும். சாலை மேம்பாட்டு பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி திட்ட இயக்குனர் கவிதபிரியா, திருவரங்குளம் ஒன்றிய சேர்மன் வள்ளியம்மை, ஒன்றிய அலுவலர்கள் ஆயிஷா ராணி, கோகுலகிருஷ்ணன், பொறியாளர் யோகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- தீரன் சின்னமலை 219-ம் ஆண்டு நினைவு அஞ்சலி வீர வணக்க கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது
- பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில் நடைபெற்றது
புதுக்கோட்டை,
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை 219-ம் ஆண்டு நினைவஞ்சலி வீரவணக்க கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில், வீர சைவ பேரவை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மத்திய மண்டல செயலாளர் சரவண தேவா தலைமை வகித்தார். பார்க்கவ குல உடையார் சங்க மாநில செயலாளர் ஆனந்த் மாணிக்கம் மாலை அணிவித்தார். யாதவ எழுச்சி பேரவை எம் சி கே சின்னத்தம்பி, யாதவ் வீர சைவ பேரவை மாவட்ட தலைவர் நாராயணன், வீரசைவ பேரவை மாவட்ட செயலாளர் தலைமை ஆசிரியர் முத்துக்கருப்பன், நாயுடு சங்க மாவட்ட தலைவர் சுந்தர்ராஜன், வீர சைவ பேரவை செயல் தலைவர் ஜெயராஜ், மாவட்ட பொருளாளர் சதாசிவம், அனைத்து வெள்ளாளர் வேளாளர் சங்க பிரதிநிதிகள் சதாசிவம் பிள்ளை ,கீரனூர் சக்திவேல் ,தமிழ்நாடு முத்தரையர் சங்க மாவட்ட தலைவர் கே ஆர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது . முன்னாள் ராணுவ வீரர் பாலையன் அனைவரையும் வரவேற்றார். நமது மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் இராம சுரேஷ் வர்மன் நன்றி கூறினார். பார்க்கவ குல உடையார் சங்க மாவட்ட பொறுப்பாளர் ராமலிங்கம், நாயுடு சங்க மாவட்ட நிர்வாகிகள் தேவராஜ் நாயுடு ,ராகவன் நாயுடு ,வீரசைவ பேரவை தியாகராஜன், கொப்பனாப்பட்டி கண்ணன், தமிழ்நாடு முத்தரையர் சங்க நிர்வாகிகள் செல்ல விக்னேஷ், செல்வகுமார், பிரவீன், விமல், ஹரி ராமு ,புகழ், சபரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்






