என் மலர்
உள்ளூர் செய்திகள்

பனை விதைகளை சேகரிக்கும் இளைஞர்கள்
- மழைக்காலங்களில் நீர் வழிப்பாதைகளில் நடவு செய்வதற்காக பனை விதைகளை சேகரிக்கும் பணியில் இளைஞர்கள் ஈடுபட்டனர்
- ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனை விதைகளை சேகரித்து வருகின்றனர்
கந்தர்வகோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுக்கா அண்டனூர் கிராமத்தைச் சேர்ந்த இளம் புயல் இளைஞர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் குளங்களின் கறைகளிலும் நீர்வழி பாதைகளிலும் மழைக்காலங்களில் ஏற்படும் மண் அரிப்பை தடுக்கும் வகையிலும் மழைக்காலங்களில் நடவு செய்வதற்காக தங்களது கிராமத்தில் பனை விதைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.தமிழகத்தின் மரமான பனை மரத்தின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையிலும் பல்வேறு பயன்களை தரக்கூடிய பனை மரத்தை மழைக்காலங்களில் நடவு செய்ய கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஆர்வமுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனை விதைகளை சேகரித்து வருகின்றனர்.இந்த இளைஞர்களின் செயலை சமூக ஆர்வலர்களும் கிராம பொதுமக்களும் பாராட்டினார்கள்.
Next Story






