என் மலர்
உள்ளூர் செய்திகள்

கறம்பக்குடி பகுதியில் புதிய மின்மாற்றி
- கறம்பக்குடி கண்டியன் தெரு பகுதியில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது
- புதிய மின்மாற்றியை கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் மா.சின்னத்துரை துவக்கி வைத்தார்
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சி பகுதியைச் சேர்ந்த கண்டியன் தெருவில் வசிக்கும் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்ற பேரூராட்சி நிர்வாகம் மற்றும் மின்வாரியம் இப்பகுதியில் புதிய மின்மாற்றியை அமைத்தனர். இதற்கான நிகழ்ச்சியில் நகர தி.மு.க. செயலாளரும் பேரூராட்சி தலைவரும்மான உ முருகேசன் தலைமை தாங்கினார். புதிய மின்மாற்றியை கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் மா.சின்னத்துரை துவக்கி வைத்தார். மேலும் நிகழ்ச்சியில் கறம்பக்குடி ஒன்றிய பெருந்தலைவர் மாலா ராஜேந்திர துரை, கறம்பக்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் மனமடை முத்துகிருஷ்ணன், கவுன்சிலர் முருகேஸ்வரி மற்றும் கறம்பக்குடி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஆறுமுகம், உதவி பொறியாளர் பிரதீப், பேரூராட்சி கவுன்சிலர்கள் மின் வாரிய அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று புதிய மின்மாற்றி அமைத்துக் கொடுத்த அரசுக்கும் மின்வாரிய அலுவலகத்திற்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.






