search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மக்கள் தொடர்பு முகாமில்  ரூ.1. 55 கோடி நலத்திட்ட உதவிகள்
    X

    மக்கள் தொடர்பு முகாமில் ரூ.1. 55 கோடி நலத்திட்ட உதவிகள்

    • அகரப்பட்டி கிராம மக்கள் தொடர்பு முகாமில் ரூ.1. 55 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
    • 655 பயனாளிகள் பயனடைந்தனர்

    விராலிமலை,

    தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று தீர்வு காணும் நோக்கத்தில் மாதம் தோறும் ஒரு குக்கிராமத்தை தேர்வு செய்து மக்கள் தொடர்பு முகாம் நடத்திட அறிவுறுத்தியுள்ளார்.அதன்படி அகரப்பட்ட்டி கிராமத்தில் நடைபெற்ற இம்முகாமிற்கு புதுக்கோட்டை கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கி பல்லுயிர் பரவல், பசுமையாக்குதல் மற்றும் காலநிலைமாற்றம் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.இம்முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில் 655 பயனாளிகளுக்கு ரூ 1கோடியே 54லட்சத்தி 70ஆயிரத்து 104 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.பின்னர் கலெக்டர் பேசியதாவது:-அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் பயன்பெறுவதற்கு பொதுமக்கள் அனைவரும் கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம். இம்மனுக்களின் மீது அலுவலர்களால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை உறுதி செய்யும் வகையில் மாவட்ட ஆட்சியரகத்தில் கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்களின் நிலை குறித்து அவ்வப்போது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.எனவே பொதுமக்கள் அனைவரும் இதுபோன்ற முகாம்கள் மூலமாக அரசின் திட்டங்களை அறிந்துகொள்வதுடன் அவற்றின் மூலம் பயன்பெற வேண்டும் என்று தெரிவித்தார்.இம்முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதபிரியா, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி, தாசில்தார் சதீஸ், ஊராட்சிமன்ற தலைவர் தனபாக்கியம் உள்பட அனைத்து துறை அரசு அலுவலர்களும் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×