என் மலர்
உள்ளூர் செய்திகள்

லாரி மோதிய விபத்தில் கொத்தனார் படுகாயம்
- கந்தர்வகோட்டை அருகே லாரி மோதிய விபத்தில் கொத்தனார் படுகாயம் அடைந்தார்
- போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
கந்தர்வகோட்டை,
கந்தர்வகோட்டை அருகே லாரி மோதியதில் கொத்தனார் படுகாயம்,புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த நத்தமாடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரெங்கராஜ் மகன் அய்யாக்கண்ணு வயது 23 கொத்தனார்.நேற்று மாலை கந்தர்வகோட்டையில் இருந்து தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் அய்யாக்கண்ணு நத்தமாடி பட்டிக்கு திரும்பி செல்லும் போது கந்தர்வ கோட்டையில் இருந்து செங்கிப்பட்டி சென்ற சரக்கு லாரி வடுகப்பட்டி முனியன் கோவில் அருகே எதிர்பாராத விதமாக மோதியது.இதில் பலத்த காயம் அடைந்த அய்யாகண்ணு கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பாக கந்தர்வகோட்டை உதவி ஆய்வாளர் கேசவ மூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
Next Story






