திருக்கோகர்ணம் பெண் சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி மாற்றம்

திருக்கோகர்ணம் பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஆதனக்கோட்டைக்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார் புகார் மனு மீது நடவடிக்கை எடுக்காததால் அதிரடி மாற்றம்
திருக்கோகர்ணம் பெண் சப்-இன்ஸ்பெக்டர்  அதிரடி மாற்றம்
Published on

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையை சேர்ந்தவர் வக்கீல் கலீல் ரகுமான். இவர் சவரியார் பட்டியை சேர்ந்த ஆரோக்கியராஜ்க்கும் அவரது மனைவிக்கு ஏற்பட்ட குடும்ப பிரச்சினையில், மனைவிக்கு ஆதரவாக ஆஜரானார்.இதனால் கோபமடைந்த ஆரோக்கியராஜ், வக்கீல் கலீல் ரகுமானை ஆபாச வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இது தொடர்பாக திருக்கோகர்ணம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலிசார் வழக்குபதிவு செய்தனர் . ஆனால் ஆரோக்கியராஜை கைது செய்ய வேண்டும் எனவலியுறுத்தி வக்கீல்கள்  சாலைமறியலில் ஈடுபட்டனர்.போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கைது செய்வதாக கூறியதன்பேரில்போரட்டம் கைவிடப்பட்டது. சாலைமறியலில் ஈடுபட்ட வக்கீல்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர் .இந்நிலையில் ஆரோக்கியராஜை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவி ல்லை என மீண்டும் வக்கீல்கள் போலீஸ் சூப்பிரெண்டு அலுவலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர் .அப்போது குற்றவாளி ஆரோக்கியராஜை கைது செய்ய வேண்டும், அலட்சிய போக்கில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் சங்கீதாவை பணிமாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர் . விரைவில் ஆரோக்கியராஜ் கைது செய்யப்படுவார் என்றும், சப்-இன்ஸ்பெக்டர் ஆதனக்கோட்டை பணிமாற்றம் செய்யப்படுவார் என வக்கீல்களிடம் போலீசார் ெதரிவித்தனர் .அதன் பேரில் வக்கீல்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதை தொடர்ந்து மாவட்ட காவல் சூப்பிரெண்டு வந்திதா பாண்டே திருக்கோகர்ணம் சப்-இன்ஸ்பெக்டர் சங்கீதாவை ஆதனக்கோட்டை மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் போலீசார் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com