என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆலங்குடியில் உலக தாய்ப்பால் வார விழா
- ஆலங்குடி அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா நடைபெற்றது.
- தாய்ப்பால் கொடுப்பதின் அவசியம் குறித்தும் பெண்களுக்கு எடுத்து கூறப்பட்டது
ஆலங்குடி,
ஆலங்குடி அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா நடைபெற்றது. தலைமை மருத்துவர் பெரியசாமி தலைமை வகித்தார். டாக்டர் அருண் குமார் முன்னிலை வகித்தார். .இந்நிகழ்ச்சியில் பிரசவித்த தாய்மார்கள், மற்றும் கற்பிணி பெண்களுக்கு நினைவுப்பரிசாக சேலை வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தாய்ப்பால் கொடுப்பதின் அவசியம் குறித்தும் இதனால் தாய்க்கும் குழந்தைகளுக்கும் கிடைக்கும் பலன்கள் குறித்தும் மருத்துவர் பெரியசாமி சிறப்புரையாற்றினார் முடிவில் டாக்டர் மங்கையர்கரசி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் செவிலியர்கள் வேலுமணி,செல்வகுமாரி,சசிரேகா,உமா,ஜான்,நந்தினி,சிவசங்கரி,மற்றும் அனைத்து மருத்துவமனை பசியாளர்களும் கலந்துகொண்டனர்.
Next Story






